Header Ads



அநுராதபுர ராஜ்யத்தின் மன்னர் 2ம் அக்போதி, நபிகள் நாயகத்திற்கு எழுதிய கடிதம் - பேராசிரியர் தயா

இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்த பங்களிப்புக்கள் பற்றி சமூகக் கலந்துரையாடல்கள் (social dialogues) இடம்பெறுவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான போது இலங்கையில் வர்த்தகம் செய்த பெரும்பாலான அரபு வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்தார்கள்.

அரபு வணிகர்கள் இலங்கையில் இருந்து வெளியேறுவதன் மூலம் நாட்டின் பொருளாதரத்திற்கு பாரிய சிக்கல்கள் ஏற்படும் என்பதை அன்றைய அநுராதபுர ராஜ்யத்தின் மன்னர்  2ம் அக்போதி (king agrabodhi II ) அவர்கள் அறிந்துகொண்டார். அரபு வர்த்தகர்கள் நாட்டில் இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான முழு சமய உரிமைகளும் வழங்கப்படும் என்றும் மன்னர் உறுதியளித்தார்.

பின்னர் மன்னர்  2ம் அக்கபோதி அவர்கள் தனது விஷேட தூதுவர் ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களை சந்திப்பதற்காக மதீனா நகருக்கு அனுப்பி வைத்தார். இஸ்லாம் சமயத்தின் வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணத்தை தனது தூதுவரிடம் அனுப்புமாறும் அதன் மூலம் இலகுவாக அந்த சமயத்தை இலங்கையில் உள்ள அரபு வர்த்தகர்களுக்கப் பின்பற்றலாம் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களுக்கு மன்னர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மன்னரின் தூதுவர் ஜித்தா துறைமுகத்தைை சென்றடைந்தார். பின்னர் தரைமார்க்கமாக "மதீனா" நகரை சென்றடைந்தார். இலங்கைத் தூதுவர் அங்கு சென்ற போது  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) இந்த உலகை விட்டும் பிரிந்திருந்தார்கள். அபூபக்ர் (றழியல்லாஹூஅன்ஹூ) என்பவரே அன்று மதீனாவை ஆட்சிசெய்து கொண்டிருந்தார். தூதுவர் அவரை சந்தித்து அநுராதபுர ராஜ்யத்தின் மன்னர்  2ம் அக்கபோதி அவர்களின் கடிதத்தை ஒப்படைத்தார்.

பேராசிரியர் தயா அமரசேகர
சமூகவியல் பீடம்
பேராதனைப் பல்கலைக்கழகம்

7 comments:

  1. Subahanallah 1400 வருடங்களுக்கு முன்பிருந்தே முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்ந்த சமூகம் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். இந்த ஆதாரத்தை சிங்கள பேராசிரியரே கூறுவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. அன்றிருந்தே இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்துள்ளது, என்பதை இன்றைய இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  2. இது போன்ற வரலாற்று உண்மைகள் சர்வகலாசாலை மட்டத்திலிருந்து வெளிவர வேண்டும். அது பெரும்பான்மை சமூகம் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்திக் கொண்டுள்ள தவறான கருத்துக்களைக் களையவும், நாட்டில் நல்லெண்ணம் நிலவவும் வழிவகுக்கும்.

    இந்த ஆய்வு அரேபிய முஸ்லிம்கள் 1430 வருடங்களுக்கு முன்னரே இங்கு வாழ்ந்துள்ளமைக்கு ஆதாரமாகிறது.


    ReplyDelete
  3. enda moliel kaditham anuppinar tamil??//

    ReplyDelete
  4. எனக்கு ஒரு சந்தேகம் தூதுவருக்கு அராபி தெறியுமா?கடிதம் என்ன மொழியில் எழுதப்பட்டது நபிக்கு தமிழ் சிங்களம் தெறியுமா? அக்ரபதிக்கு அரபி தெறியுமா?

    ReplyDelete
  5. PERMAZI WAAINDA, SHARITHIRM.
    PAAZUKAKKAP PADA VENDIYAWAI.

    ReplyDelete
  6. Islam is the real and natural religion.

    ReplyDelete

Powered by Blogger.