Header Ads



2016 இல் சஹ்ரான் பற்றி பயங்கரவாத, தடுப்பு பிரிவிற்கு தகவல் வழங்கினோம் - அப்துல் ராசிக்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று -20- இடம்பெற்றது. 

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்காக சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக், தங்களுடைய நோக்கம் முஸ்லிம் மக்களுக்கு புனித குர்ஆன் மற்றும் ஹதீஸை சரியான ஆதாரங்களுடன் விளக்கப்படுத்துவதாகும் என தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்து சாட்சி வழங்கிய அவர், ISIS என்பது இஸ்லாத்திற்கு விரோதமான தீவிரவாத இயக்கம் என்பதை 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி தாங்கள் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் தாங்கள் 2015 ஆம் ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்ட குர்ஆனின் 472 அத்தியாயத்தில் பெண்கள் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அது முஹம்மத் நபியின் மனைவிமார்களுக்கு மட்டுமே உரியது எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை அகில இலங்கை ஜமியதுல் உலமா சபை அண்மையில் மொழிபெயர்த்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட குர்ஆனில் முகத்தை மூடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

2

தீவிரவாதியான சஹ்ரான் தொடர்பில் சகல தகவல்களை 2016 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வழங்கியதாக சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2016 ஆம் ஆண்டு சஹ்ரான் எனும் தீவிரவாதி ஜிஹாத் தொடர்பில் முகப்புத்தகத்தில் சில காணொளிகளை பதிவிட்டிருந்ததாகவும் அவை இஸ்லாத்திற்கு முரணானது என்பதனால் அது தொடர்பில் அவதானமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எனவே அது தொடர்பான சகல தகவல்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். 

சமூகசேவை அமைப்பு என்ற வகையில் தன்னுடைய கடமையை நிறைவேற்றியதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருதி இவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

2 comments:

  1. சார் சொல்லுவது சரியாகத்தான் படுகிறது.

    ReplyDelete
  2. Abdul Razik translated Al quran with one meaning & ACJU translated with a nother meaning. how many to come in future..... what is the eligibility you have to do this. Ultimately this is singe of AHIR ZAMAN

    ReplyDelete

Powered by Blogger.