May 29, 2019

Dr ஷாபி விவகாரம் - முழு முஸ்லிம் சமுதாயத்தையும் குழியில்வீழ்த்த, தீட்டப்பட்டுள்ள சதி


1. Dr ஷாபி அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் ஐ சேர்ந்தவர் அல்ல

2. அவர் இந்த பெண்களுக்கு பிழையான முறையில் LRT ஒப்பேரஷன் பண்ணியிருக்க முடியாது என்பது இந்த விடயத்தை அலசி ஆராய்ந்து பார்த்தால் நன்கு தெரிகின்றது.

3. இதன் அடிப்படை நோக்கம், அவருக்கு எதிரான அரசியல் அல்ல. அதை விடவும் ஆழமான, முழு முஸ்லிம் சமுதாயத்தையும் குழியில் வீழ்த்த திட்டம் தீட்டப்பட்டுள்ள சதியாகும்.

4. இந்த பொய் குற்றச்சாட்டு பரப்பப்பட்டதன் மூலம், முழு முஸ்லிம் வைத்தியர்கள் மீதும் இருந்த நம்பிக்கையை பெரும்பான்மை சமூகத்தில் இல்லாமல் செய்துள்ளனர்.

5. இதன் மூலம் முஸ்லிம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியாவார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள். அவ்வாறு படித்தவர்களையும், வசதி படைத்தவர்களையும் வெளியாக்கினால், இந்த நாட்டில் மிஞ்சியுள்ள முஸ்லிம்களை ஒடுக்கி விடுவது மிகவும் இலகுவானது என்பதே அவர்களது கனவு. 

6. நீங்கள் வைத்தியர் சன்ன ஜயசுமனவின் வீடியோவை பார்த்தீர்களானால் விளங்கும், அவர் ஒரு சிசேரியன் ஒப்பேரஷன் செய்யும் போது எவ்வாறு ஒரு பெண்ணை அடுத்த முறை கருத்தரிக்காமல் இருக்கச்செய்யலாம் என்பதை விபரிக்கின்றார். முஸ்லிம் பெண்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு, சிசேரியன் ஒப்பேரஷன் பண்ணும் போது இந்த வேலையை செய்யுங்கள் என்று அவர்களை தூண்டுவது போன்று இவருடைய பேச்சு உள்ளது. 

எனவே இந்த விடயம் ஒரு Dr ஷாபி எனும் தனி மனிதருடைய பிரச்சினை அல்ல. நாம் மிகவும் கவனமாகவும், புத்தி சாதுர்யமாகவும் நடக்க வேண்டிய காலம் இது.

எமக்கு வைத்தியசாலைகளில் ஏதாவது பிரச்சினைகள் நடந்தால் (உதாரணமாக அபாயாவை களற்றச்சொன்னால்) அந்த நேரத்தில் குழப்பம் விளைவிக்காது சமாளித்துக்கொண்டு வந்து விடுங்கள். முடியமாயின் phone இல் அல்லது ஏதோ ஒரு கேமராவில் பதிவு செய்து கொண்டு வந்து அவற்றை Lawyers மூலம் கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுங்கள். அதை விட்டு விட்டு, whatsapp மூலம் பரப்ப வேண்டாம். குழப்பம் விளைவிப்பதாலும், Whatsapp மூலம் பரப்புவதாலும், நாமே பிரச்சினை இல் மாட்டிக்கொள்வோம். இந்த கஷ்டமான கால கட்டத்தில் உணர்ச்சிகளை விட  நாம் எமது நுண்ணறிவை பாவிக்க வேண்டும். 

எல்லாவற்றையும் விட எமது ஒற்றுமையே எமது பலம். நாம் இன்னொரு இயக்கத்தவரை காட்டிக்கொடுத்து சந்தோசப்பட்டோம் என்றால் முழு முஸ்லிம் சமூகமும் அளிக்கப்படும் நிலை ஏற்படும். சொத்துக்களை எரிக்கும் போது நீ தரீக்கவா என்று கேட்டு எரிக்காமல் விட மாட்டான்.

3 கருத்துரைகள்:

Ottrumaiyai nam samudayathil irundu ethir parpatha?? perumaithanathilum, poramayilum, kaattikotuppadilum, suya nalathilume uripponadu em samudayam. Solwadukku wetkamaha irundalum, iduthan unmai.

Ottrumaiyai naam tamilar, singalawarhalidam irundu kattrukkolla wendum.

Nammawarkal maththiyil 1000 piriwukal irukum warai, ottumaiyai pattri ethir parka mudiyadu!!

"Oru nalladai solla virumbinal, adai anaiwarum matthiyil nindru sollu.. Maaraha, unakkendu oru piriyai etpaduthi koti pitithu nidru sollathe sahodarane..!!"

Hasbialluhu wa-nihamal wahkeel..

It is the time to Muslim Business people to do fair business, which includes
1. Fair price for product and service. Eg: reasonable doctors fee.
2. Quality product and service at affordable price.
Basically Change our strategy to fight back the plot.

Post a comment