Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சூத்திரதாரி, நாட்டைவிட்டு தப்பியோட்டம்

நாத்தாண்டியா பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரான சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டுக்குத் தப்பியோடியுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாத்தாண்டியா சம்பவம் இடம்பெற்று சில நாட்களுக்குப் பின்னர் வெளிநாடு செல்லவுள்ளதாகத் தெரிவித்து பிரதேசசபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

உபுல் ஹேரத் என்ற பிரதேசசபை உறுப்பினரே ஐரோப்பிய நாடொன்றுக்குச் சென்றுள்ளார்.இவரது பல உறவினர்கள் அங்கு வாழ்ந்து வருவதாக கொஸ்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் வெளிநாட்டிலிருந்து மீளவும் நாடு திரும்பும் போது விமானநிலையத்தில் வைத்து கைது செய்ய நீதிமன்றின் அனுமதியை பொலிஸார் கோரவுள்ளனர்.

நாத்தாண்டியா பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மாற்றுவலுவுள்ள படைச்சிப்பாய் ஒருவரும் தாக்குதலுக்கு இலக்கானார்.

இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸ் தரப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பலரை கைது செய்யவுள்ளதாகவும் எனினும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ibc

1 comment:

  1. find out which country he has been to... so, that people in those country could make a complaint about him to police and immigration..

    ReplyDelete

Powered by Blogger.