Header Ads



தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள், கிழக்கு மாகாணத்தவர்களாக காணப்படுகின்றார்கள் - மஹிந்த

நடப்பு  அரசாங்கம்  தேர்தலின்  ஊடாக  படுதோல்வியடையும் என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது.  அத்தோடு, அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளில் அதிருப்தியடையும் பொது மக்கள் கடுமையாக தங்களின் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.  225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொருத்தமற்றவர்கள் என்று  மக்கள் வெறுக்கும் அளவிற்கு   அரசாங்கம் அரசியலை மழுங்கடித்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,  இன்று அரசியல் ரீதியில் மக்கள் பல மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகின்றார்கள்.  225  பாராளுமன்ற உறுப்பினர்களும் பொருத்தமற்றவர்கள் என்று ஒரு தரப்பினரும், அரசியல் தொடர்பற்ற ஒரு புதிய  தலைமைத்துவம் அவசியம் என்று பிறிதொரு தரப்பினரும் கருத்துகின்றார்கள்.  கடந்த நான்கு வருட  காலமாக  அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக காணப்பட்டன.  இதன்  காரணமாகவே மக்கள் அரசியலை வெறுக்கின்றார்கள்.

அத்தோடு, ஒரு தரப்பினர் மக்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை பரப்பி விடுகின்றார்கள். இவர்கள் அரசியல்வாதிகளின் முகவர்களாக செயற்படுகின்றார்கள். மனம் போன போக்கில் அரசாங்ம்  செயற்பட்டமையின் காரணமாக  பல விளைவுகள் இன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை தொடருமாயின்  நாட்டு மக்களின் எதிர்காலம்  கேள்விக்குறியாக்கப்படும்.

மேலும்,  தற்போதைய அரசாங்கம்  தேர்தலின் ஊடாக படுதோல்வியடையும் என்பதை சர்வதேசம்  அறிந்துள்ளது. தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் கிழக்கு மாகாணத்தை சார்ந்தவர்களாக காணப்படுகின்றார்கள். 

இன்று அரசாங்கத்தை மக்கள் நேரடியாக விமர்சிக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். 

(இராஜதுரை ஹஷான்)

4 comments:

  1. அதிகமான மக்கள் தற்போது விரும்புவது,புதியவர்கல் அரசியலுக்கு தேவை,ஆக புதியவர்கல் இந்த நாட்டின் ஆட்சியில் இருக்கும் போது பல பிரச்சினகல் நீங்கி நாடு அபிவிருத்தி அடையும்.ஆக இலங்கை பாரலுமன்ரத்துக்கு 85% இப்போது உல்லவர்கல் தோற்கடிக்கப்பட்டு,புதியவர்கல் தேர்தலூடாக தெரிவு செய்யப்படவேண்டும்.

    ReplyDelete
  2. உமது கருத்தின்படி நீயும் பொருத்தமற்றவர். ஆகவே, முதலில் நீ அரசியலில் இருந்து ஒதுங்குவாயா?

    ReplyDelete
  3. Mahinda doesn't know, most of the attackers out of Eastern? why he is blaming baselessly???

    ReplyDelete
  4. கிறிஸ் மனிதனை அனுப்பி பார்க்கலாமெ

    ReplyDelete

Powered by Blogger.