Header Ads



இப்படி, ஒவ்வொருவரும் சிந்தித்தால், உலகம் ஒரு மினி சுவர்க்கமாக மாறும்...!

காட்டிக்கொடுப்புக்கள் கச்சிதமாக அரங்கேரிக் கொண்டிருக்கின்றன. சம்பிரதாய முஸ்லிங்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரால் இந்த அவலம் அரங்கேறுகின்றது. சிங்களவர்களும், சம்பிரதாய முஸ்லிங்கள் என்று சொல்லப்படுபவர்களும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள் என்றும், வஹாப் வாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் உருவானதன் பின்னால் அந்த ஒற்றுமை சீர்குலைந்தது போலவும் இருசாராரும் புலம்புகின்றனர். உண்மையிலேயே சிங்களவர்களும், சம்பிரதாய முஸ்லிங்களும் ஆழ்ந்த புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்தார்களா? என்றால் அது தான் இல்லை.

முஸ்லிமல்லாத இனங்களை “மாறுசாதி” என்று பெயர் வைத்து அவர்கள் வீட்டுக்கு வந்தால் பருகக் கொடுப்பதற்கு தனிப்பாத்திரம் வைத்தவர்கள் இந்த சம்பிரதாய முஸ்லிங்கள் என்று சொல்லப்படுபவர்கள் தான். முஸ்லிமல்லாத ஒருவரை பள்ளிவாயலினுள் அனுமதிப்பதற்கு எதிராக அக்காலத்தில் போர்க்கொடி உயர்த்த்யவர்கள் அவர்கள் தான். அதெல்லாம் இருக்கட்டும். 1915 – சிங்கள – முஸ்லிம் இனக்கலவரத்திற்குக் காரணமானவர்கள் இந்த வஹாப்வாதிகளா? 30 வருடங்களுக்கு முன்னர் காலியில் “துவ” என்ற பகுதியிலிருந்து அனைத்து முஸ்லிங்களும் விரட்டியடிக்கப்பட்டார்கள். இதற்குக் காரணம் வஹாப் வாதிகளா? அழுத்கம கலவரத்திற்குக் காரணமாக அமைந்த த்ரீவில் விபத்து சம்பவத்திற்குக் காரணம் யாராவது வஹாபி ஒன்றா? அம்பாறை கலவரத்திற்குப் பின்னணியாக அமைந்த “வதபெஹெத்” வஹாபிஸத்துடன் சம்பந்தப்பட்டதா? கிந்தோட்டை இனக்கலவரத்திற்குக் காரணமாக அமைந்த வீதி விபத்தில் சம்பந்தப்பட்டது வஹாபிகளா? திகனவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் சொத்தழிப்பிற்குக் காரணமாக அமைந்த சிங்கள வாகன சாரதியைத் தாக்கிய குடிகார முஸ்லிம் இளைஞர்கள் வஹாப்வாதிகளா? அனுராதபுரத்தில் சூபி ஆத்ம ஞானி ஒருவரின் ஸியாரத்தினை உடைத்தெரிந்தது, பலங்கொடை ஜெய்லானி கூரகல பகுதியை உரிமை கோருவது எல்லாம் வஹாபிஹளா?

முஸ்லிங்களைப் பற்றி நிறைய குற்றச்சாட்டுக்கள் சிங்களவர்களால் முன்வைக்கப்படுகின்றன. அதிகம் பிள்ளைகளைப் பெத்துப் போடுகின்றார்கள், மிருகங்களை அதிகமதிகமாக கொன்று சாப்பிடுகின்றார்கள், நாட்டுப் பற்றில்லாதவர்கள், கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கின்றார்கள், போதைப் பொருள் வர்த்தகத்தில் அதிகம் ஈடுபடுகின்றார்கள், பாதை ஒழுங்குகள் தொடர்பான சட்டங்களை மிக மோசமாக மீறுகின்றார்கள், மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதில்லை. பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கிகளில் கத்துகின்றார்கள். இப்படி எக்கச்சக்கமான குற்றச்சாட்டுக்கள். இக்குற்றச்சாட்டுக்கள் வஹாப் வாதிகளை நோக்கி மாத்திரம் கூறப்படுகின்றதா? இல்லை ஒட்டமொத்த முஸ்லிம் சமூகத்தை நோக்கியுமா?

பள்ளிவாயல்களில் வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதை திரும்பத் திரும்ப மீடியாக்களில் காட்டப்பட்டது. சமூக வலைதளங்களில் முஸ்லிம் பள்ளிவாயல்கள் சிங்களவர்களால் மிக மோசமாக இழித்துறைக்கட்டன. இந்த வாள்கள் அனைத்தும் மீட்கப்பட்டது வஹாபி பள்ளிவாயல்களில் இருந்தா? வஹாபி முஸ்லிம் வியாபாரங்களை மாத்திரம் புறக்கணிப்போம். சம்பிரதாய முஸ்லிங்களின் கடைகளில் பொருள் வாங்குவோம் என்றா பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது ? 

பொதுவாக எமது பதிவுகளில் அதிகம் விமர்சிக்கப்படுவது தவ்ஹீத் அமைப்புக்கள் தான். அதற்கான காரணம் கொள்கை முரண்பாடுகள் அல்ல, மாற்றமாக, மனமுதிர்வடையாத இளைஞர்கள் எல்லாம் நாளுக்கொரு தவ்ஹீத் இயக்கத்தினை உருவாக்கிக் கொண்டு சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் சர்ச்சைப்பட்டுக் கொண்டிருப்பது தான். அதற்காக, அந்நிய சமூகங்கள் முஸ்லிம்கள் தொடர்பில் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் தவ்ஹீத் அமைப்புக்களின் கணக்கில் சேர்க்க இந்த சம்பிரதாய முஸ்லிங்கள் என்று சொல்லப்படுவோர் மேற்கொள்ளும் கேவலமான முயற்சியை கண்டிப்பாக விமர்சிக்க வேண்டும்.

எல்லா தரீக்காக்களிலும், எல்லா இயக்கங்களிலும் நலவுகளும், இருக்கின்றன, தவறுகளும் இருக்கின்றன. நலவுகளை இன்னும் அபிவிருத்தி செய்து தவறுகளைப் படிப்படியாகக் கலைந்து முஸ்லிம் சமூகம் என்ற வகையில் நாம் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும். எல்லோரும் ஒரு சிந்தனைப் பிரிவைத்தான் ஏற்க வேண்டும் என்று யாராலும் எதிர்பார்க்க முடியாது. அது இலங்கையின் அரசியல் யாப்பிற்கே முரண். தனக்கு விரும்பிய மதத்தை, சிந்தனைப் பிரிவை ஏற்க, பின்பற்ற எவருக்கும் உரிமை உண்டு. உடன்பாடு ஏற்படக் கூடிய விடயங்களில் ஒத்துழைத்தும், முரண்பாடுகளின் போது விட்டுக் கொடுத்தும், அல்லது சகித்தும் வாழப் பழக வேண்டும். இல்லாவிட்டால் இந்த உலகில் யாராலும் நிம்மதியாக வாழ முடியாது.

உதாரணத்திற்கு, இலங்கைக்கு இஸ்லாம் வருவதற்கு காரணமாக அமைந்த சூபித்துவ ஆத்மீக ஞானிகளை தரீக்காக்கள் அல்லாத இஸ்லாமிய அமைப்புக்கள் மதிப்பதும், அவர்களுடைய சேவைகளை சிலாகிப்பதும் ஒன்றும் தவறான விடயமல்ல, மிகப் பெரும் ஆத்ம ஞானியான மகான முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் சூபித்துவ தரீக்காக்களால் மாத்திரம் பேசப்பட வேண்டிய,போற்றப்பட வேண்டிய ஒருவர் அல்ல, மாற்றமாக தரீக்காக்கள் அல்லாத ஏனைய அனைத்து சுன்னி இஸ்லாமிய அமைப்புக்களும் அன்னாரை ஒரு சிறந்த ஆத்ம ஞானியாக போற்றலாம். அதுபோல், இஸ்லாமிய இயக்கங்களோடு உடன்பட்டுச் செல்ல முடியுமான பல்வேறு விடயங்களை தரீக்காக்கள் தேடலாம். அதேபோன்று இஸ்லாமிய வட்டத்தினைத் தாண்டி, சூடோ இன்டலக்சுவல் ஸாகிர் நாயக் போலல்லாமல், மற்ற மதங்கள், வேதங்களின் குறை தேடுவதனை விடுத்து, மதங்கள், வேதங்களுக்கிடையில்டென்பட்டுச் செல்லும் விடயங்கள் தொடர்பில் கருத்தாடல்கள், ஆராய்ச்சிகள் செய்து அதனூடாக, படைத்த இறைவன் தொடர்பான ஈமானை வலுப்படுத்திக் கொள்ளலாம். இப்படி, ஒவ்வொருவரும் சிந்தித்தால் உலகம் ஒரு மினி சுவர்க்கமாக மாறும்.

- Rasmy Galle -

8 comments:

  1. தரமான கருத்துக்கள்.

    ReplyDelete
  2. Ellam ellai meeriyethan vilaivuthan noothanaththai ethirkappoi irainesarkalayea ilivaakkinarkal oru kootam irainesarkalai neasikkappoi inaivaippil viluntharkal innoru koottam

    ReplyDelete
  3. உங்களின் கருத்துக்கள் சரி.ஆனால் ஏன் முதலில் உருவாக்கப்பட்ட தவ்ஹீத் ஜமாத் ஏன் பல துண்டுகளாக பிரிந்தது? அல்லது பிரிக்கப்பட்டது? ஏன் தமிழ் நாட்டில் தவ்ஹீத் ஜமாத்துக்குல் ஏற்படும் அனைத்து சண்டைகலோ அல்லது பிளவுகள் ஏன் இங்கு அதே தாக்கத்தை ஏற்படுத்துகின்ரன.தயவு செய்து இதற்கு நீங்கள் ஒரு பதில் தாருங்கள். சகோ,Rasmy அவர்களே

    ReplyDelete
  4. ஒன்றாக இருப்போம் என்கிறீர்கள் இறுதியில் ஸாகிர் நாயக்கை ஒதுக்கி வைக்கிறீர்கள். கருத்துச் சுதந்திரம் என்பதுதான் தான்தோன்றித்தனமான கருத்துக்கள் உருவாக முழுக்காரணம். மார்க்கக் கல்வி உலகக் கல்வி இரண்டிலும் சிறந்து விளங்கும் சிலரை குழுவாக அமைத்து அவர்களின் கட்டுப்பாட்டில் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் பேணப்படல் வேண்டும். கட்டுப்பட மறுப்போர்களை காட்டிக் கொடுககத்தான் வேண்டும்

    ReplyDelete
  5. பலவிடயங்களை குறிப்பிட்டு இவற்றிற்கெல்லாம் வஹாப் வாதிகள்தான் காரணமா என கேள்விகேட்கப்படுறது. மேலும் முஸ்லீம்கள் மத்தியில் உருவாகியுள்ள
    பல அமைப்புக்கள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.மேலும் சம்பிரதாய முஸ்லீம்கள் என்ற ஒரு புதுப்பெயரும் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் மாற்று மத சகோதர்களுக்கு
    பெரும்பாலும் ஏப்ரல் 20 க்கு முதல் முஸ்லீம்களுக்கிடையே உள்ள மதரீதியான பிரிவுகளும் முரண்பாடுகளும் பற்றிய பூரணமான
    விளக்கங்கள் போதாமல் இருந்தது.
    ஆனால் அவர்களில் குறிப்பிடப்பட்ட சிலபேருக்கு முஸ்லீம்கள் மத்தியில் ஏதோ மதரீதியான பிளவுகள் தோன்றத்
    தொடங்கியுள்ளதாக, மட்டும் உணரக்கூடியதாக இருந்தார்கள்.இதனால் காலா காலமாக இருந்துவந்த எமது பழக்க வழக்கங்கள்,நடை உடை பாவனைகளில் மாற்றத்தை கண்டது
    மட்டுமல்லாமல் எமது அரசில் தலைவர்கள் தொடக்கம் சமூகத்தில்
    உள்ள அநேகமான எல்லா தொழில் துறைகளிலும் ஈடுபடுகின்ற எம்மவர்களின் நடவடிக்கைகள் அநீதியாக மனிதாபமற்ற முறையில்
    உள்தாக உணர தலைப்பட்டார்கள்.
    குறிப்பாக எமது வர்த்தக சமூகம் கொள்ளைலாபமீட்டுவதிலே கண்ணாக
    உள்ளார்களே தவிர மக்களின் நலன் நாட்டு நலன் பற்றி கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.இதனால்
    நம் தாய் தகப்பன் காலத்தில் அதாவது
    1975/80 களுக்கு முன் உள்ள காலத்தில் அன்னிய சமூகங்களால் எமது சமூகத்துக்கும் சமயத்திற்கும் வழங்கப்பட்டு வந்த மதிப்பு மரியாதைகள் குறைவடையத் தொடங்கியதுடன் எம்மீது அச்சமும் சந்தேகமும் போட்டி பொறாமைகளும்
    ஏற்படத்தெடங்கியது இதை தமக்கு
    சாதமாக பயன்படுத்திய இனவாதிகளும் மதவாதிகளும் கீழ்மட்ட
    அரசியல்வாதிகளும் குண்டர்களின் துணையுடன் எம்மையும் எமது பொருளாதார வழங்களையும் சமய தலங்களையும் அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்போதல்லாம்
    இனக்கலவரம் என்ற போர்வையில்
    தாக்கியளித்துக்கொண்டு வருகிறார்கள்.இது 2009 ல் யுத்தம்
    முடிவடைந்தற்கு பிற்பாடு தோன்றிய
    பௌத்த அடிப்படைவாத
    அமைப்புக்களால் பரப்பப்படும் பரப்புரைகள் மூலம் தற்போது அடிக்கடி
    நடாத்தப்படுகிறது.ஆனால் அவர்களை
    பொறுத்தவரை நாம் எந்த இ ஸ்லமிய
    அமைப்பாகஇருந்தாலும் ஒரு அமைப்பும் சாராத கட்டுரையாளர் குறிப்பிடுவது போல் சம்பிரதாய இஸ்லாமியர்ளாக இருந்தாலும் எல்லோ
    ரையும் ஒன்றாக கணித்தே தாக்குதல்கள் நடத்துகிறார்கள்.
    நாமும் இந்த நாட்டாலே சிறுபான்மையினர் என்ற நினைவற்றவர்களாக வாழ தலைப்பட்டு விட்டோம் சிங்கள தமிழ்
    பெரும்பான்மை மக்களோடு ஒன்றித்து
    வாழவேண்டும் என்ற கட்டாயத்தை
    உணராமல் இருக்கின்றோம்.ரசூல் ஸல்
    அவர்களின் சுன்னாவை பின்பற்றித்தான் தீரவேண்டும் என்ற
    விடாப்புடியோடு மற்ற சமூகத்தவர்களின் உணர்வுகளையும்
    உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளாமல் நடந்து கொண்டிருக்கின்றோம். சுன்னத்து
    என்பது செய்தால் நன்மை செய்யாவிட்டால் பாவமில்லை என்றிருக்கும்போது பர்ளை விட அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போய் தற்போது பர்ளை கூட செய்வதற்கான சாத்தியம் ஏற்படுமா
    என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
    அல்லாஹ் பாதுகாப்பானாக. சுன்னத்தான விடயங்கள்,சுன்த்தான வணக்க வழிபாடுகள் எல்லாம் சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப,நாட்டு சமூக
    நிலவரங்களுக்கு அமைகவாக சந்தரர்ப
    சூழ்நிலைகளுக்கேற்ப செய்யப்பட
    வேண்டும் என்பதற்காகவே அவைகள்
    சுன்னத்தாக்கப்பட்டுள்ளன இல்லாவிட்டால் அல்லாஹ் அவைகளை
    பர்ளாக ஆக்கியிருப்பான் என்பதை நாம் இன்னும் உணரவில்லை.அண்மைக்காலமாக
    எமது உடைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் அன்னிய சகோதர்களிடம் இருந்து எம்மை
    தூரமாக்கி வருகின்றது என்ற உண்மையை நாம் ஜீரணித்துத்தான்
    ஆகவேண்டும்.அரபு ராஜ்ஜியங்களின்
    கலாசாரத்தை ஏன் இங்கே புகுத்த விழைகின்றீர்கள் என்று எம்மை குடைகிறார்கள்.கடந்த காலங்களில் நம் ஆண்களும் ணெண்களும் அணிகின்ற
    ஆடைகளை அணியாமல் இது என்ன
    புதுமை என அங்கலாய்க்கின்றார்கள்.
    எனவே நாமும் எம்மை சுயபரிசோதனைக்கு உட்படுத்தி எம்மில்
    உள்ள தவறுகளை இனம்கண்டு அவைகளை இஸ்லாத்துக்காக விட்டு
    மாற்றுமத சகோதர்களோடு புரிந்துணர்வோடு,இஸ்லாம் கற்றுத்தந்தவாறு அவர்களின் மத கலாச்சார அனுஸ்டானங்களை மதித்து
    கண்ணியப்படுத்தி வாழ்வதற்கான ஏற்பாடுகளை பல முனைகளிலிருந்தும்
    நாம் ஊக்குவிக்க முயற்சிப்பதுதான்
    சிறந்தது என கருதுவோம்.

    ReplyDelete
  6. இலங்கையில், மரபுரீதியான முஸ்லிம்களும் & இஸ்லாமிய இயக்கங்களும் :-

    இஸ்லாமிய இயக்கங்கள் :-

    {1} 1926 ம் ஆண்டு மே மாத்தில் ஆரம்பித்து 1952 ம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இல்யாஸி தப்லீக் ஜமாஅத்.....

    {2} அதே போல் 1946 ம் ஆண்டு இலங்கைக்கு அறிமுகமாகி 1980 ம் ஆண்டுக்கு பின் TNTJ, SLTJ, ACTJ, NTJ, UTJ ஆக பரிணாமமெடுத்த வேஷதாரிகளான தவ்ஹீத் ஜமாஅத் என்ற வஹ்ஹாபிகள்....

    {3} அதே போல் அபுல் அஃலல் மௌதூதி சாஹிபால் 1941 ம் ஆண்டு லாஹுரில் ஆரம்பிக்கப்பட்டு 1980 கு பின் இலங்கைக்கு இறக்குமதியான ஜமாஅத்தே இஸ்லாமி.....

    {4} அதே போல் ஹஸனுல் பன்னா வினால் 1928 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1980 க்கு பின் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன்......

    மரபுரீதியான முஸ்லிம்கள் :-

    றஸூலுல்லாஹ்ஹுவின் மறைவு கி.பி. 633.

    இலங்கையில், இயக்கங்கள் ரீதியிலான இஸ்லாம் தோன்றியது கி.பி. 1926 என வைத்துக்கொள்வோம்.

    எனவே, இலங்கையில், 633 க்கும் 1926 க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் (1926-633) = 1293 வருடங்கள்.

    ஆகவே, இலங்கையில், றஸூலுல்லாஹ்ஹுவின் மறைவை தொடர்ந்து வந்த 1293 வருட காலமாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் மரபுரீதியான முஸ்லிம்கள்.

    இதர்க்கான ஓர் உதாரணம்,

    சுமார் 419 வருடங்களுக்கு முன்னர் கி.பி. 1600 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களின் முதல் குடியேற்றம் இலங்கையின் கருங்கொடித்தீவு (அக்கரைப்பற்று) ஊரில் நிகழ்ந்துள்ளது.

    குடியேற்றம் நடைபெற்ற உடனேயே அம்மக்கள் தங்களது வணக்க வழிபாடுகளுக்காக கம்புகளையும், கிடுகுகளையும் கொண்டு ஒரு பள்ளியை தமது வசிப்பிடங்களுக்கு மத்தியில் அமைத்தார்கள் அதுவே இன்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகின்றது.

    அப்படியாயின் அப்பள்ளிவாசலை ஆரம்பித்தவகள் எந்த இஸ்லாமிய இயக்கத்தையும் சேர்ந்த்வர்களும் அல்லர்.
    அவர்கள்தான் மரபுவழி இஸ்லாமியர்கள்.

    ReplyDelete
  7. ஒற்றுமை இல்லாத காசி பணத்துக்கு அடிமையாய் இருக்கும் சில நாய்களை ஒரு போதும் திருத்த முடியாது மன்னிக்கனும் என்னுடைய கருத்துக்கு

    ReplyDelete

Powered by Blogger.