Header Ads



றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம்

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று -20- நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது, விவாதிப்பது என்று முடிவு செய்யப்படவுள்ளது.

அதேவேளை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, மே 17ஆம் நாள் சபாநாயகரின் உத்தரவுக்கு அமைய, நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியின் சில தலைவர்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஐதேக உறுப்பினர்கள் சிலரும் கூட வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. அரசியல் லாபம் கருதியும்,தமக்கு ஆதரவு தரவில்லை என்பதற்காகவும் சுமத்தப் படும் போலி குற்ற சாட்டுக்கல் ஜெயிக்கப் போவதில்லை.அப்படியானால் எத்தனையோ பேர் உள்ளனர்,நாட்டில்,அரசியல் வாதியாக இருப்பதுக்கே தகுதி இல்லாதவர்கள்.

    ReplyDelete
  2. இதையோ மூடி மறைக்கப் பார்கின்றனர்.இதனாலேயே முஸ்லிம் தலைவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.