Header Ads



ஒரே பள்ளிவாசலில் 7 முறை தேடுதல், மேலும் அதிகரித்தால் நாட்டில் பாரிய அழிவு இடம்பெறும் - சாலி எச்சரிக்கை

பாதுகாப்புப் பிரிவினர் ஒரே முஸ்லிம் பள்ளிவாயலில் மேற்கொள்ளும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்ந்தேர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தான் பாதுகாப்பு சபையில் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

ஆளுநர் அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இஸ்லாமிய பள்ளிவாயல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஒரே பள்ளிவாயலில் ஏழு முறைகள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்க பாதுகாப்பு பிரிவினர் செல்கின்றனர். இதனால், பள்ளிவாயலில் சப்பாத்துக் கால்களுடன் சென்று எடுக்க ஒன்றும் இல்லாத நிலைக்குச் செல்கின்றன. நாய்களுடன் செல்கின்றனர். நாய் எடுத்து வருவதாக முன்னறிவிப்புச் செய்திருந்தால், தாம் அதற்கு ஏற்ற வகையில் ஒழுங்குகளை செய்து கொடுப்போம். அவ்வாறு செய்வதுமில்லை.

தான் பாதுகாப்பு சபையில் இதுகுறித்து பேசவுள்ளதாகவும், இது போன்ற நிலைமைகள் ஏற்படக் கூடாது எனவும் ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.