Header Ads



போரின் பின் 7 தடவைகள் பாரிய, அழிவை ஏற்படுத்த முயற்சித்த புலிகள் - அம்பலமாக்கும் முன்னாள் இராணுவத் தளபதி

போரின் பின்னர் ஏழு தடவைகள் தமிழீழ புலிகள் இலங்கையில் பாரியளவில் அழிவுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.  அவர் மேலும் கூறுகையில்,

ஊடகங்களோ, மக்களோ யாரும் அறிந்திராத ஓர் விடயத்தை நான் இப்பொழுது கூறுகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகள் போரின் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஏழு தடவைகள் நாட்டில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.

அந்த ஏழு முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் முயற்சிகளுடன் தொடர்புடைய குழுக்கள் முற்று முழுதாக அழித்தொழிக்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் சமூகத்திற்கு தெரியாமலேயே மேற்கொள்ளப்பட்டடிருந்தது. இது இலங்கை படையினரின் அதி விசேட திறமையாகவே கருதப்பட வேண்டும்.

உலகின் மிகப் பலம்பொருந்திய உளவுப் பிரிவினர் இலங்கை படையினர் மேற்கொண்ட வீர தீர செயற்பாடுகளை இன்றும் பாடமாக கற்று தேர்ந்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பாரியளவில் ஆயுதக் கப்பல்கள் காணப்பட்டன. இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த பாரிய ஆயுதக் கப்பல் ஒன்று இந்தோனேசியாவில் வைத்து அழிக்கப்பட்டது.

இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாரிய அயுதக் கப்பல் ஒன்று பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியிருந்தனர்.

இன்று வரையிலும் யாருக்கும் தெரியாத பல்வேறு சாதனைகளை இலங்கைப் படையினர் மேற்கொண்டுள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏறோபிளேன் ஓடு்ம் என்பானாம்.

    ReplyDelete
  2. இப்படி பெருமையாக பேசக்கூடிய ராணுவத்தினர், வணக்க ஸ்தலத்தில் குண்டு வைத்தது முதல் இன்று கடை எரிப்பு வரை ஏன் தடுக்க முடியவில்லை?? கோழையாகி விட்டீர்களா ? இது படையினருக்கு வெட்கக்கேடு இல்லையா.!
    வன்செயலில் ஈடுபடுகின்ற அனைவரையும் சுட்டுதள்ளுங்கள் இனம் மதம் எதுவும் பார்க்க வேண்டாம் அது தான் எமது நாட்டுக்கு நல்லது அமைதிக்கு பொருத்தமானது….
    ராணுவத்தில் இருக்கும் இனவாதிகளை முதலில் கலை எடுங்கள் அதுதான் எம் நாட்டு ராணுவத்திற்குபெருமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.