Header Ads



ஜெனீவாவில் 27 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் - திரண்டு வருமாறு ஐரோப்பிய வாழ் முஸ்லிம்களுக்கு அழைப்பு


சுவிற்சர்லாந்து - ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் 27.05.2019 அன்று திங்கட்கிழமை நண்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ள இந்த போராட்டத்தின் நோக்கம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் நிகழ்த்தப்பட்ட இனவாத கொடூரத் தாக்குதலை கண்டிப்பதாகும்.

ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை EIMF எனப்படும், ஐரோப்பிய வாழ் இஸ்லாமிய தகவல் நிலையம் மேற்கொண்டு வருகிறது.

5 comments:

  1. I hope all Muslims from Europe visit this demo to show solidarity with them... if you can not express your support..

    ReplyDelete
  2. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களோடு நிறைய வெளிநாட்டவர்களும் கொல்லபட்ட அடிப்படை வாதிகளின் ஈஸ்ட்டர் தாக்குதலையும் கண்டிக்காவிட்டால் இத்தகைய பேரணிகள் தேசிய சர்வதேசிய மட்டத்தில் எதிர்விழைவுகளையே ஏற்படுத்தும். தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

    ReplyDelete
  3. ஜெயபாலன் ஐயா வின் கருத்து கவனத்திற் கொள்ள வேண்டியது

    ReplyDelete
  4. ஈக்ஷ்டர் தாக்குதல்,Muslim கலுக்கு எதிரான தாக்குதல் இரண்டையும் சேர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துங்கல்

    ReplyDelete
  5. நல்லதொரு நடவடிக்கை, இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் அணைத்து நாடுகளிலும் முன்னெடுக்க வேண்டும். மற்றும் மிக முக்கியமாக அணைத்து ஆர்ப்பாட்டங்களிலும் எமக்கு (முஸ்லிம்களுக்கு) இலங்கையில் பாதுகாப்பு இல்லை மற்றும் பௌத்த பயங்கரவாதிகளால் தொடர்ச்சியாக பல வருடங்களாக எமக்கு (முஸ்லிம்களுக்கு) எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை இலங்கை அரசால் கட்டுப்படுத்தி எமக்கு (முஸ்லிம்களுக்கு) பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்பதை ஆணித்தரமாக அணைத்து ஆர்ப்பாட்டங்களிலும் பதிவு செய்வதுடன், ஐநாவின் சமாதான படைகளை இலங்கைக்கு அனுப்பி சிறுபான்மை சமுதாயங்களை பாதுகாக்குமாறு சர்வதேச நாடுகளின் உதவிகளை கோரவேண்டும். இவ்வாறான கோரிக்கைகளை விடுப்பதன் மூலமே எமது ஆர்ப்பாட்டங்கள் மூலமாக நன்மையடைய முடியும். வெறுமனே சர்வதேச சமூகத்திடம் எந்த வித கோரிக்கையும் முன்வைக்காமல் நாம் கூடிக்கலைவதால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை.

    ஜெயபாலன் ஐயா அவர்களின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்

    ReplyDelete

Powered by Blogger.