Header Ads



சகல அடிப்படைவாத அமைப்புக்களையும், சில நாட்களில் தடைசெய்ய நடவடிக்கை

நாட்டிற்குள் காணப்படும் சகல அடிப்படைவாத அமைப்புக்களையும் அடுத்துவரும் நாட்களில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இன்று (21)  பல பகுதிகளிலும் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த சகலரினதும் இறுதிக் கிரியைகள் அரச செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முடிந்தவரை முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற அவசர நிலைமைகளின் போது சகலரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

3 comments:

  1. Pls do it today
    Including ulama ect ect..all must go
    Need full investigation,
    Get help from Raw & CIA

    ReplyDelete
  2. மதத்தை முன்வைத்து மனிதன் வாழ இடைஞ்சலாக இருக்கும் அனைத்து இயக்கங்களும் தடை செய்யப்பட்ட வேண்டும். ஒருவரின் சீரிய வாழ்க்கை முறையில் அவர் என்ன மதத்தைச் சேர்ந்தவர் என அறிந்து கொண்டால் போதுமானது.ஸ்பீக்கர் கட்டி பிரச்சாரம் செய்வோரைப் பிடித்து அடைக்க வேண்டும்.

    ReplyDelete
  3. @ajan, புலிகள் செய்த கொலைகளையும் கொள்ளைகளையும் பயங்கரவாதத்தையும் தங்களின் மௌனங்கள் மூலம் அங்கிகரித்து இந்த திகதி வரைக்கும் அதற்கு முட்டுக் கொடுத்து கொண்டிருக்கும் உன் போன்ற கேடுகெட்ட இழி நிலை தமிழ் சமூகமாக என் சமூகம் இருக்காது. நிச்சயம் இதில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானால் முதல் எதிர்ப்பும் அவர்களுக்கான முதல் அடியும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து தான் வரும். நீ மூடிகிட்டு போயிட்டே இரு. இந்த நாட்டை இந்தளவிற்கு சீரழித்த சமூகத்தில் இருந்து வந்த நீ நீலிக்கண்ணீர் வடிக்காதே. இது எங்கள் நாடு இந்த நாட்டில் இந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், கண்டவனை கூப்பிட்டு நாட்டை காட்டியும் கூட்டியும் கொடுக்கும் உன் ஈன புத்தியை இங்கு காட்ட வேண்டாம்

    ReplyDelete

Powered by Blogger.