Header Ads



கொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..? விபரிக்கிறார் லதீப்

கொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து குண்டானது பாதுகாப்பு தரப்பினரால் செயழிலக்கப்பட்டுள்ளது.

குறித்த வானுக்குள் 4 சமையல் எரிவாயு சிலிண்டர்களை இணைத்து பொருத்தப்பட்டிருந்த இந்தக் குண்டு பொலிஸ் விசேடப் படையணியின் குண்டு செயழிலக்கும் பிரிவால் செயலிழக்கப்பட்டதாக, பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம். ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த குண்டு நூல் ஒன்றுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும், இதன் அருகில் 1000 ரூபாய் நாணயத்தாள்கள் கிடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நாணயத்தாள்களை காண்பவர்கள் அதனை எடுக்க முற்படும் போது குண்டை வெடிக்க வைப்பதற்கான அமைப்பிலேயே குறித்த குண்டில் நூல் இணைக்கப்பட்டிருந்ததாகவும் எம். ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் குண்டு ​செயலிழக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது பல வீடுகளின் கூரைகள், யன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தின் மதிலும் உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. IF ANYONE FOUND ANYTHING IN OUT SIDE (CURRENCY NOTES OR VALUABLE ITEMS), PLEASE DO NOT MAKE BELONGING TO YOURS (PLEASE DON'T TAKE THOSE), WHICH WILL SAFE YOUR LIFE AND OTHERS.
    PLEASE INFORM IMMEDIATELY TO POLICE 119

    ON BEHALF OF ALL SRI LANKAN I KINDLY REQUESTING YOU ALL.

    I AM A SRI LANKAN
    I AM A MUSLIM

    ReplyDelete

Powered by Blogger.