April 02, 2019

ரிஷாத்திற்கு எதிராக 315 போலியான பேஸ்புக்குகள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அழித்தொழிக்கும் நோக்கில் இதுவரை 315க்கு அதிகமான போலி சிங்கள இனவாத முகநூல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வில்பத்துவை அடிப்படையாகக் கொண்டதாகவே அந்த முகநூல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த போலி முகநூல்களின் முகப்புப்படமானது வில்பத்து காடு, யானை, அமைச்சர் ரிஷாடின் புகைப்படம், அமைச்சரை இழிவாக வரைந்த புகைப்படம் மற்றுமு; தொப்பி அணிந்த முஸ்லிம்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளன.

315 போலி முகநூல்களிலும் ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய பதிவேற்றங்களை பதிவேற்றிய வண்ணமாகவே உள்ளன.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தூற்றுதல், வில்பத்துவை அழிப்பதாகக் கூறும் இட்டுக் கட்டப்பட்ட கட்டுரைகள், பௌத்த மதத்திற்கு எதிரானவர் ரிஷாட் எனக்காட்டும் புகைப்படங்கள், 'எப்படி உஷ்னம் – ஐ லவ் யூ பதியுதீன்''; போன்ற வாசகங்களைக் கொண்ட பதாதைதகள் உட்பட இன்னும் பல செயற்பாடுகள் முகநூல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இங்கு அதிர்ச்சியான விடயம் என்னவெனில் 'விடுதலைப்புலிகள் மரத்தை பாதுகாத்தார்கள், முஸ்லிம்கள் மரத்தை அழித்தார்கள்' போன்ற புலிகளுக்கு ஆதரவான வாசகங்களை இந்த இனவாதிகள் பதிவேற்றியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

சிங்கள , முஸ்லிம் மக்களை புலிகள் கொன்றழித்ததை மறந்து – புலிகள் மரத்தை பாதுகாத்தார்கள் என புலிகளை தூக்கிப்பிடிப்பது பெரும் வியப்புக்குரிய விடயமாகும்.

கடந்த வாரம் 28 சிங்கள நகரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் வீடியோ தொகுப்புக்களும் மேற்படி முகநூல்களில் பரவலாக பதிவேற்றப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

6 கருத்துரைகள்:

பொதுவாக ஒழுங்கு கடைப்பிடிப்பவர்கள்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது அவை பெரிதாக எடுபடுவதில்லை. அதனால் குற்றஞ்சாட்ட கூட்டிக்கொடுப்போர் முனைவதில்லை. இவரைச்சுற்றி ஏன் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன காரணம் ஒழுங்கு விடயத்தில் இவரிடம் காணப்படும் குறைபாடாக இருக்கலாம். எனக்கு தெரிந்த வகையில் ஒழுங்கு தவறிய இடங்கள் 1. கடந்த ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றைப் பெற்றுக்கொண்ட கையோடு தற்போதைய ஆட்சிக்கு மாறியது. இவரைத் தாக்குவதில் மிகவும் பலம் வாய்ந்த சக்தி கடந்த ஆட்சியாளர்களின் அருடிவருடிகளாக இருக்கலாம்.
2. நீதிமன்றத்தின் செயற்பாட்டை குளப்பியது என்ற செய்தி அதன் பால் உள்ளவர்கள் தாக்கலாம்.
3. தற்போது ஏதாவது ஒரு பயமுறுத்தலைச் செய்து பல அமைச்சுக்களைப் பெற்றிருப்பது.

தெரியாதவை பல இருக்கலாம். எதிர்ப்புகளைக் கூட நாகரீகமா செய்ய வேண்டும்.

நாட்டின் காடுகளை அழித்தலுக்கு எதிராக குரல் கொடுத்தால் இனவாதம் என்கிறார்கள் இவர்கள்

அய்தான பாருங்களேன் அந்தோனி, அந்த நாசமாய் போன LTTE பயங்கரவாதிகளும் கூடத்தான் எவ்வெளவோ காடுகளை அழிச்சிட்டானுகள் அப்ப பேசாம நாய் வால சுறுட்டி கவுட்டுக்குள்ள வச்சிட்டு போல இருந்த காவிகளும் கபோதிகளும் இப்ப தேசிய சொத்து பேச வாராங்க, அதுக்கு ஒரு சில அன்னக்காவடிகள் சப்போட்டு வேற என்ன.

Ajan நீங்கள் Sri Lanka நாட்டை,சாதாரன பொதுமக்கல,33 வருடங்கள் அழித்து கடைசியில் நந்திக் கடலில் உங்களுக்கு சமாதி கட்டியது Sri Lanka ராணுவம்.33 வருடங்கல் நீங்கள் எவ்வாரு இந்த நாட்டை அழித்த பயங்கரவாதிகள் என இந்த உலகம் ஜாபகம் வைத்துல்லது.நீயெல்லாம் இப்போது நியாயம் பேசுகிரீர்.கிழக்கில் Muslim பயங்கரவதம் இருப்பதாக சொலுகின்ரீர்.முடிந்தால் Sri Lanka அரசுக்கும்,ராணுவத்துகும் ஆதாரத்துடன் நிருபித்துக் காட்டுங்கல்.உம்மிடம் ஒன்னு கேட்க வேணும் (புலிகள் அமைப்பில் எந்த பயங்கர்வாத பிரிவில் இணைந்து இந்த நாட்டை அழித்தாய்.உமக்கெல்லாம் வெட்கம் கொஞ்ஞமாவது இருக்காஇல்லையா.இந்த நாட்டைய அழித்து விட்டு இப்போ இந்த நாட்டை பத்தி பேசுகிரீர்.

Ajan இதே ரிசாட் அமைச்சர் இம்முறை ரனிலுக்கு ஆதரவக இருந்த போது,நீர் பதிவிட்டீர்.அவர் உண்மையான ஒரு Muslim என இதே வலைத்தலதில்.இப்போது பேச்சை change பன்னிவிட்டீர்.இம்முரை மட்டும் Muslim அமைச்சர்கல் எதிராக இருந்திருந்தால் மீண்டும் உங்கள் ஆட்டம் கோத்தாபாயாவினால் அடக்கப்பட்டிருக்கும்.இப்போது நீர் கருத்து பதிவிடுவதுக்கும் ரிசாட் அமைச்சர்தான் காரனம் ஏனென்ரால் இம்முரை அவர் my3 அரசங்கத்தை கலைத்த போது மிகப் பெரும் ஆதரவை ரனிலுக்கு வழ்ங்கினார் அதனால்தான் நீர் இப்போது பேசுகிரீர் சுதந்திரமாக

சொந்த இனத்துக்காக போரடுவதாக கூறி விட்டு,முள்லிவாய்க்காலில் Sri Lanka ராணுவத்தால் சுருட்டப்பட்டபோது,அதே இனத்தையே கேவலம் தான் தப்பேவேண்டும் என்பதுக்காக உலக நாடுகள் தலையிடும் என நினைத்து (elder,children,women) அனைவரையும் அரசாங்கம் 24 மனித்தியாலம் நேரம் கொடுத்தும் செல்ல விடாமல் தடுத்தீர்கல்.கேவலம் சொந்த இனத்தையே பலிக்கடாவாக்கியே மிருகங்கலடா.அதுதான் இருதியில் நாயை சுடுவது போல Sri Lanka ரானுவம் சுட்டு போட்டது.இப்போது Sri Lanka ராணுவத்தின் மீது பலியை போடும் நரிகலே

Post a comment