Header Ads



மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு மொதரோபி இயந்திரம் வாங்க 100 கோடி ருபா தேவை - இலங்கையர்களிடம் உதவி கோரப்படுகிறது

(அஸ்ரப் ஏ சமத்)

மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு மேலும்100 கோடி ருபா நிதி சேகரித்து  மொதரோபி, மற்றும் சில  மெசின்களை கொள்முதல் செவ்தற்காக பைட் கென்சா் அமைப்பின் தலைவா்  எம்.எஸ் எச் மொகமடின்    மேலும் ஒரு திட்டத்தினை இன்று கலாதாரி கோட்டலில் 
வைத்து  ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு  சுகாதார அமைச்சா் டொக்டா் ராஜித் சேனாரத்தினா, இராஜாங்க அமைச்சா் பைசால் காசீம், சுகாதார  திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம், மககரகம கென்சா் வைத்தியசாலையின் பணிப்பாளா் வசந்த திசாநாயக்கவும் கலந்து கொண்டனா் 

இங்கு உரையாற்றிய டொக்டா் ராஜித்த சேனாரத்தினா  ஏற்கனவே மொகமட்  பெட் ஸ்கனா் இயந்திரம் ஒன்றை நிதி திரட்டி மகரகம வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளாா் அவரின் மகன் நினைவாக மேலும் 100 கோடி ருபா பெருமதியான தைரோபி லேசர் மெசின்களை கொள்முதல் செய்வதற்கு சுகாதார திணைக்களமும் மககரகம வைத்தியசாலையும் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே இவ்வாறான மெசின்கள் ஏனைய 8 வைத்தியசாலைக்கு கொள்வனவு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.  இம் மெசின் இந்தியாவில் 8 உள்ளது. இலங்கையில் இல்லை. ஆனால் ்தனியாா் வைத்தியசாலையில் இவ் வைத்திய பரிசோதனை செய்வதற்கு 10 இலட்சம் ருபா தேவைப்படுகின்றது. 

மொகமட் இங்கு உரையாற்றுகையில் 
எனது மகன் என்னக்கருவில் உரித்தான ஒரு திட்டம் தான் இந்த  பெட் ஸ்கனா் மெசினை கொள்முதல் செய்து மகரகம வைத்தியசாலைக்கு வழங்குவதாகும். அந்த  நிதியை இந்த நாட்டில் உள்ள சாதாரன சகல பொது மக்களும் அன்பளிப்பு செய்து  3 மாதங்களுக்குள் நிதி சேகரிக்கப்பட்டு இந்த மெசினுக்குரிய பணத்திற்கு அன்பளிப்பு செய்தாா்கள்.  . இந்த நாட்டில் வாழும் 2 கோடி மக்கள் ஒவ்வொருவரும் 50 ருபா வை மகரகம புற்று நோய் வைத்தியசாலையின்  கணக்கு இலக்கத்து வைப்பிடுவாா்களேயானால்  இந்தியாவில் உள்ள இந்த  மெசின்களை 100 கோடி ருபாவினை ஆறு மாதத்திற்குள் சேகரிக்க முடியும். ஏழை  எளிய நோயளிகளுக்கும் இப் பரீசோதனைக்காக நிவாரணம் பெறமுடியும்.    தணியாா் அல்லது இந்தியா சிங்கப்புர் சென்று இப் பரிசோதனைக்கு சுமாா் 10 இலட்சம் ருபா செலுத்த வேண்டிவரும். பண வசதி அற்ற புற்றுநோயளா்களுக்கு  நாம் செய்யும் மிகவும் ஒரு மனிதபிமான புன்னிய காரியமாகும். இந்த நோய்யினால் பாதிக்க்பபடும் மக்களுக்கு நாம் பங்கு தாரா்ராகி உதவ முன்வாருங்கள் என வேண்டிக் கொண்டாா்.  இந்த மெசினை நாம் பெற்றுக் கொடுப்பதற்காக எமது பைட் கென்சா் அமைப்பு முற்று முழுதாக நிதி சேகரிப்பதற்காக பாடுபடும். எவ்வாறாயினும் இலங்கையில் உள்ள மகரகம கென்சா் வைத்தியசாலைக்கு இந்த மெசினை பெற்றுக் கொடுப்பதற்காக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் 50 ருபாவையாவது வைப்பிடுவாா்களேயானால்  இந்த மெசினை 6 மாத காலத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியும் 

3 comments:

  1. But pls do not call Ada Derana or Any bloody medias for this goodwill
    they will create their own name and forgot the real contributors....

    ReplyDelete
  2. Hi, Could you share account number details to contribute?

    ReplyDelete
  3. Organizers, please announce publicly the Name of the Account, Bank Account Number and Branch to accommodate contributors to contribute significantly to reach your target. May Allah bless you.

    ReplyDelete

Powered by Blogger.