March 09, 2019

மறக்கப்பட்ட முஸ்லிம் வரலாறும், மன்னார் எலும்புக்கூடுகளும்

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆதாரங்களுக்கான ஆதார, மையங்களாக, #மீஸான்களும், #சியாறங்களுமே மிஞ்சி உள்ளன, அந்த வகையில் எலும்புக்கூடுகளும், புதைகுழிகளும் கூட வரலாற்றை ஒரே நாளில் புரட்டிப் போடக்கூடிய பலமான ஆதாரங்களாக உள்ளன, 

 அத்த வகையில்,அண்மைக்காலமாக மன்னார் #சதொச பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக் கூடுகள் தொடர்பாக பல  ஊகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, ஆனாலும் அவை தொடர்பான காலப்பகுதி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டாலும்,  சம்பவம் பற்றிய,உறுதியான வரலாற்று ஆதாரங்கள் முன்வைக்கப்பட வில்லை,ஆனால் அவை முஸ்லிம்களுக்குரியதாக உள்ளன என்பதை நிரூபிப்பதற்கான ஊக ஆதாரங்களை முன்வைக்கும் பதிவே இதுவாகும், 

#மன்னார்_மாவட்டம்,
மன்னார் மாவட்டம் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்புக்களில் முக்கியமான இடம், அறபுக்கள், இந்திய, ஆபிரிக்க,  முஸ்லிம்களும், வியாபாரிகளும் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்த இடமாகும், இதன் அத்தாட்சிகளாக இன்றும்  அங்குள்ள பெருக்க மரங்களையும், அறபுக்கள் பயன்படுத்திய துறைகளையும், நீண்ட புராதன 40 முழ  சியாறங்களான கப்றுகளையும் காண முடியும்,

#மன்னார் #புதைகுழியும், #அறிக்கையும்,
மன்னார் புதை குழியில் இதுவரை 323 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, அதில் 28 சிறார்களுடையதாகும், இவை களனிப் பல்கலைக்கழகப் Prof ,Raj Somadava    தலைமையிலான  தொல்லியல் குழுவினரால் அகழ்ந்தெடுக்கப்பட்டு காபன் அணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது,

அறிக்கையின்படி குறித்த சடலங்கள் கி்பி,1450-கி்பி.1650 காலப்பகுதிக்குரியன என புளோரிடா வில் உள்ள பீட்டா ஆய்வு மையம் காபன் அறிக்கையினூடாக  அறிவித்துள்ளது, இதனை மன்னார் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது, 

#சர்ச்சைகள் 
குறித்த காலப்பகுதியில் இலங்கையில் போர்த்துக்கேய (1505-1658) ஆட்சிக்காலமாகும், இக்காலத்தில் இடம் பெற்ற பாரிய இன அழிப்பு புதை குழியாக இது இருக்கலாம் என உறுதியாக நம்பலாம், ஆனாலும் இவை யாழ்பாண மன்னன்  சங்கிலியன் படை எடுப்பில் கொல்லப்பட்ட கிறிஸ்த்தவர்களின் சடலங்கள் என்றும், போர்த்துக்கேய காலத்தில் கொல்லப்பட்ட சைவர்களினது எனவும் சிலரால்  ஊகிக்கப்படுகின்றது, 

ஆனால் போர்த்துக்கேயரின் பிரதான நோக்கம் மதமாற்றமும், வியாபாரமுமாக இருந்த்தனால் அவை முஸ்லிம்களுக்கு எதிரான  இருண்டகாலம் என்பதே வரலாறாகும், ஏனெனில் ஏனைய சமூகத்தவர்களில் சிலர் மதமாற்றத்தை ஏற்றனர், ஆனால் முஸ்லிம்கள் முற்றாக எதிர்த்தனர், அதன்படி நோக்கினால் குறித்த புதை குழி முஸ்லிம்களுடையதாக இருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன, 

#வரலாற்று_ஆதாரங்களும்_மறுப்பும், 
1).சங்கிலி மன்னனின் அரச தண்டனை 

குறித்த எலும்புக்கூடுகள் சங்கிலி மன்னனால் 1540ல் பாதிரியார் உட்பட கொல்லப்பட்ட 600 பேருடையதாக இருக்கலாம் என்ற ஊகத்திற்கு  வாய்ப்பில்லை, காரணம், அது பேசாலைப்பகுதியில் " #தோட்ட_வெளி எனுமிடத்தில் ஏற்கனவே அடையாளங்காணப்பட்டு தோட்ட வெளி வேத சாட்சிகளின் அன்னை ஆலயமும் அமைக்கப்பட்டு கத்தோலிக்கர்களால் பராமரிக்கப்படுகின்றது,

இன்னும்  ஆரியச் சக்கரவர்த்தியின் வாரிசுகளும்  சங்கிலி மன்னனது வரலாற்றை அறிந்தவர்களும்,  சில யாழ்ப்பாண வரலாற்றாய்வாளர்களும்  இதனை மறுக்கின்றனர், அதன்படி சங்கிலி மன்னன் குழந்தைகளைக் கொல்ல வில்லை என மன்னனின் வாரிசான ரெமிஜியஸ் கனகராஜா குறிப்பிடுகின்றார்,  ஆகவே இந்தப் புதை குழிக்கும் சங்கிலி மன்னனது அரச தண்டனைக்கும் தொடர்பில்லை என்ற ஊகத்திற்கும் வர முடியும்,

அடுத்த ஊகமாக கொள்ளப்படுவது ,இது ஒரு புராதன #மயானமாக இருந்திருக்கலாம் என்பது, ஆனால் அது தொடர்பான எந்தப் பதிவுகளும் மன்னார் மாவட்ட அலுவலகங்களில் இதுவரை இல்லை ஆகவே இந்த ஊகமும் நிராகரிக்கப்பட வேண்டியதே, 

அவ்வாறாயின் இது யாருடையது,?? 

குறித்த கேள்விக்கான பதிலை குறித்த புதை குழியில் சடலங்கள்  இருந்த அமைப்பு முறையை ஆராய்வதன் மூலம் ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும், 

1). இங்கு காணப்பட்ட உடல்கள் தலைகள் எல்லாம் ஒரே திசையை நோக்கியும், கால்கள் எல்லாம் ஒரு திசையை நோக்கியும் முறையாக அடக்கப்பட்டிருக்கின்றன, இது இன்றும் முஸ்லிம்கள் அடக்கும் கிப்லாவை நோக்கிய முறைக்கு ஒப்பானது, அத்தோடு இரு உடல்களுக்கிடையில் இடைவெளியும் காணப்படுகின்றது, 

இன்னும் சில வேறாக, எலும்புகளாக குவிக்கப் பட்டிருக்கின்றன,  இவை காலப்போக்கில் ஏதோ ஒரு மாற்றத்துக்குள்ளாகி இருக்கக் கூடும், அல்லது அவை முஸ்லிம் அல்லாத ஏனைய சைவ, இந்து, பௌத்தர்களுடையதாகவும் இருக்க முடியும், 
இன்னுமொரு அடையாளமாக இவ் உடல்களோடு எவ்வித ஆடை,ஆபரண அலங்காரங்களும் இல்லை  

முஸ்லிம்கள் தமது சடலங்களை ஒரு வெற்றுத்துணியினாலேயே சுற்றுவர்,,ஆனால்  ஒரே ஒரு காப்பு வடிவிலான வளையம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, இது கைதிகளாகப் பிடிக்கப்பட்டதன் அடையாளமாகவோ, தளபதிகளின் அடையாளமாகவோ இருக்க முடியும், 

இந்த வகையில் போர்த்துக்கேயரின் மத மாற்றத்திற்கு எதிராக போராடிய மக்களின் புதை குழியாக இது இருக்க முடியும் என்ற ஊகம் இன்னும் வலுக்கின்றது,  அது முஸ்லிம்களுக்கே மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளது, இறுதிச் சடங்கையாவது தமது  சமய முறைப்படி செய்ய எஞ்சி இருந்தவர்களை அனுமதித்து இருக்கவும் முடியும்,

இந்த வகையில் மன்னார் மாவட்ட புதை குழி இலங்கை முஸ்லிம் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாகவும்  இருக்கின்றது, 

#முஸ்லிம்_வரலாற்று_ஆதாரங்கள்,
போர்த்துக்கேய காலம் இலங்கையில் முஸ்லிம்களின் இருண்ட காலமாக இருப்பதற்கு பல நிகழ்வுகளும், இன அழிப்புக்களும் காரணமாக உள்ளன, அது நாட்டின் பல பாகங்களில் இடம் பெற்றுள்ளது , அந்தவகையில் இலங்கையின்பல  பாகங்களில்  முஸ்லிம் இன அழிப்பு இடம் பெற்றதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்,

அதன்படி, RL Brohier தனது Historical Series என்ற நூலில் முஸ்லிம்களில் பல பள்ளிவாசல்களும், புனித அடக்கஸ்தலங்களும்,போர்த்துக்கேயரால் தீயிட்டு அழிக்கப்பட்டதாகவும், அதில் Gal Baak என்ற இடத்தில் இருந்த பள்ளிவாசல் முக்கியமானது என்கின்றார், 

அதே போல சமோரியப் பேரரசின் உதவியுடன் குஞ்சலி மரைக்காய தளபதிகள் வந்து சிங்கள மன்னருடனும், மக்களுடனும் இணைந்து 1518ல்  போர்த்துக்கேயரைத் தாக்கியதாகவும், அதற்கான பழி வாங்கலை போர்த்துக்கேயர் இன அழிப்புச் செய்து தீர்த்துக் கொண்டனர் எனவும் பதிவுகள் உள்ளன.

இப்பழிவாங்கல்கள் 1613, 1622,1623, 1626 போன்ற காலங்களில் இடம்பெற்றதுடன்,வடக்கின்  பன்னல்துறை என்ற இடத்தில் இருந்த பள்ளிவாசல் அழிக்கப்பட்டு 1614ல் டொம் பெட்டோ எனும் தளபதி அவ்விடத்தில் தேவாலயத்தை அமைத்ததாகவும் பதிவுகள் உள்ளன,  இதே போல் 1560-1646 வரை தென்பகுதியிலும் இவ் இன அழிப்பு இடம்பெற்று இருக்கின்றது,இது  முஸ்லிம் இருப்பிலும் ,சனத்தொகையிலும் அதிக வீழ்ச்சியைக்கொண்டுவந்த்தற்கான ஆதாரங்கள் உள்ளன, 

அதே போல வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் யோகி சிக்கந்தர் தலைமையில் மென்டன்ஷா என்பவனின் படையை இந்துக்களுடன் இணைந்து எதிர்த்தனர், அதிலும் பலர் கொல்லப்பட்டனர், இது 1591ல்  கொழும்புத்துறையில் இடம்பெற்றது, 

Abeysinghe T, என்ற வரலாற்று ஆய்வாளரின் Jaffna Under the Portuguese என்ற நூலில்  யாழ்ப்பாண மன்னராட்சியில் பல தேசத்தை சேர்ந்த  முஸ்லிம்கள் செல்வாக்குடன் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார், அதிலும் கேரளாவைச் சேர்ந்த " #மாப்பிள்ளை " முஸ்லிம் குடியினர்  அரச சபையில் அதிக இடம்பெற்றிருந்தனர், அது்போல சோனர் எனப்பட்ட அறபுக்களும், குஞ்சலிகள் எனப்பட்ட குஜராத்திகளும், பாப்பராவர் எனப்பட்ட ஆபிரிக்கர்களும், மாப்பிள்ளை எனப்பட்ட கேரளாக்களும் அக் காலத்தில் தமது குடியிருப்பை மன்னார் மற்றும் வட இலங்கையில் கொண்டு வாழ்ந்து  இருந்தனர், 

#புதிய_ஆய்வுகளும்_நிரூபணங்களும், 
 இலங்கை முஸ்லிம்களின் மறக்கப்பட்ட வரலாற்றை விடி வெள்ளி பத்திரிகையில்  தொடராக, எழுதிவரும் பேராசிரியர் #MSM_அனஸ் தனது புதிய வரலாற்று களத்  தேடல்களில் மன்னார் தொடர்பான பல புதிய உண்மைகளை முன்வைக்கின்றார், அதன்படி மன்னார் முத்துக்குளிப்பை  கைப்பற்ற போர்த்துக்கேயர் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றதாக்க் குறிப்பிடுவதுடன், "அறுபது மரைக்கால்  தாலி அறுபட்ட குளம்" ,மினாறா, போன்ற பகுதிகள் அதிகமாக முஸ்லிம்களை போர்த்துக்கேயர்  கொன்ற இடங்கள் என்ற கருத்தையும்  முன்வைக்கின்றார், இதனை ஒத்த தகவல்கள் எம் ,கே, எச் முஹம்மது (2004) அவர்களின் பதிவுகளிலும் உண்டு,

அதே போல சங்கிலியன் படைகளுடன் இணைந்து முஸ்லிம்கள் போர்த்துக்கேயரைத் தாக்கியதாகவும், படைகளுக்கான ஒத்துழைப்பை வழங்கியதாகவும், வரலாறுகள் உண்டு, 

#இறுதி_முடிவுகள், ,
இந்த வகையில் பல வரலாற்று  ஆதாரங்களை முன்வைத்து நோக்குகின்ற போது மன்னார் சதொச பகுதியில் கண்டெடுக்கப்பட்டு ஆய்வை முடிவில் போர்த்துக்கேய கால படு கொலைகள் என அகழ்வாராய்ச்சி  அறிக்கை பெறப்பட்டுள்ள புதை குழி, முற்றாகவோ, பகுதியளவிலோ, முஸ்லிம்களுடைய எலும்புக்கூடுகளாக இருப்பதற்கான ஆதாரங்கள் பலமாக உள்ளன, அவை எமது மன்னார் பூர்வீக இருப்பின் பலமான அடையாளங்கள் 

#நமது_பலவீனம்,
வழமை போன்று முஸ்லிம்களின் வரலாற்று அக்கறை இன்மையும், தொல்லியல் அறிவும், ஆளணியும் இல்லாமையும் இவ்வாறான ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் பற்றிய கண்டு பிடிப்பை ஏனைய சமூகத்தின் உரிமைக் கூடைக்குள்   வாரி வழங்கி விடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன,  அந்த வகையில் இது தொடர்பான இன்னும் ஆழமான வரலாற்றைத் தேடுகின்ற போது இவ் ஆதாரங்கள் எமது முன்னோரின் தியாகங்கள் என உறுதிப்படுத்தும் சான்றுகள் மிக இலகுவாக வந்தடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன, ,

#இறுதி_வேண்டுகோள், நாம்  #என்ன_செய்யவேண்டும்??
1).கற்றவர்களும், ஆய்வாளர்களும் தமது அறிவையும், தேடலையும் சமூகத்தின் முன்வைப்பது கடமை. அந்த வகையில் பல ஆய்வாளர்கள் தமது சொந்த முயற்சியில் இவ்வாறான தேடல்களை மேற்கொள்கின்றனர்,  அவ்வாறானவர்களை பண ரீதியாகவும், மன ரீதியாகவும்  ஊக்குவிப்பது ஆர்வமுள்ள சமூகத்தின் கடமை ,அவ்வாறான செயற்பாடுகளில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின், தனவந்தர்களும், உலமாக்களும் ,சமூக ஆர்வமிக்கவர்களும்,அமைப்புக்களும், ,உற்சாகமூட்டுவார்களாயின், இது போன்ற பல வரலாற்றுத் தடயங்களை எமது உரிமைக்கான  ஆதாரங்களாக்கிக் கொள்ள முடியும், 

2).அடுத்தது, #தென்_கிழக்குப் #பல்கலைக்கழகத்தில் எமக்கான ஒரு தொல்லியல் துறையை (Archeology Department)உருவாக்கி, முஸ்லிம் பார்வையில் தொல்லியலை  நோக்குதலும் ,வரலாற்று ஆதாரங்களை மறு பரிசீலனை செய்தலும்,  இது அரசியல் வாதிகள் ,குறிப்பாக உயர்கல்வி அமைச்சர் செய்ய வேண்
டிய அவசரமான நடவடிக்கை இதனை அனைவரும் வலியுறுத்த வேண்டும்,  

3).அதே போல் எம்மிடையே இன்று  எஞ்சி இருக்கும் சியாறங்களையும், மீஸான்களையும்  இயக்க பேதமற்று, அனைவரும் பாதுகாப்பதே எமது இருப்பிற்கான வரலாற்று ஆதாரம், இன்றேல் அடையாளமற்ற சமூகமாகவே வாழ்ந்து அழிய வேண்டி வரலாம், 

#சிந்திப்போம், #அவசரமாகச் #செயற்படுவோம், #இருப்பைக்_காப்பது,#எம்_அனைவரதும் #பொறுப்பு

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA,

3 கருத்துரைகள்:

Very very Valuable Article and a very very important advise for our society...

முயற்சிக்கு வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பானாக ஆமீன்

முயற்சிக்கு வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பானாக ஆமீன்

Post a comment