Header Ads



இலங்கை தரப்புக்குள், ஜெனீவாவில் மோதல் - இறுதிநேரத்தில் விலகினார் மகிந்த

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ளும் இலங்கை தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத ஆரியசிங்கவையும் புதிதாக சேர்த்தார் ஜனாதிபதி மைத்ரி...

நேற்று பிரதமர் ரணில் மற்றும் வெளிநாட்டமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்த ஜனாதிபதி ,ஜெனீவாவில் இலங்கை தொடர்பான - இணை அனுசரணையுடன் பல நாடுகள் சமர்ப்பிக்கும் பிரேரணைக்கு அங்கிருக்கும் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அஸீஸ் கையொப்பமிட்டது எவ்வாறென்றும் கேள்வி எழுப்பியதாக தகவல்...

முன்னதாக நேற்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தபோதும் இது தொடர்பில் தனது விசனத்தை வெளிப்படுத்தி இருந்தார் மைத்ரி...

வரும் 21 ஆம் திகதி ஜெனீவாவில் எடுக்கப்படவுள்ள இந்த விடயம் பற்றி பேச இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன - சரத் அமுனுகம எம் பி -வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் -வெளியுறவு செயலர் ரவினாத ஆரியசிங்க - பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே ஆகியோர் செல்லவுள்ளனர்.

அங்கும் இழுபறி நடக்கத்தான் போகிறது..ஏனென்றால் இந்த ரீமில் மூன்று பேர் ஜனாதிபதிக்கு ஆதரவானவர்கள்...

-Siva-

2

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபையின் அமர்வில் இலங்கை சார்பில் பங்கேற்பதற்காக  ஜனாதிபதியால் குழுவொன்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்  குறித்த மூன்று பேர் கொண்ட குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹவும்  உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது குறித்த குழுவிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Good
    Also pls take some chilli 🌶 powder

    ReplyDelete
  2. இறுதியில் கூட்டத்தில் கூறியவற்றை நன்கு செவிமடுத்து, பார்ததுவிட்டு வரலாம். அதற்கு பொதுமக்களின் பணம் குறைந்தது 10 கோடி ரூபா மண். பயணத்தின் பெறுபேறு அவ்வளவுதான். அஸீஸை வெட்டுவதற்கும் தூதுக்குழு வழிபார்க்கும் போல் தெரிகிறது. அவருக்கு அடித்த சுனாமி தான் சனாதிபதியின் முடிவா?

    ReplyDelete

Powered by Blogger.