March 25, 2019

தமிழ் - முஸ்லிம் நல்லிணக்கம் ஏற்படாதவரை மிக மோசமான சமூகநிலை இருந்து கொண்டுதான் இருக்கும்

இந்நாட்டில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒற்றுமைப்படாத வரை காலங்காலமாக அனுபவித்து வரும் தீவினையிலிருந்து ஒருபோதும் மீட்பு பெறுவதற்கான உய்வில்லை என பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூரில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

இன அடிப்படையில், பௌதீக வளங்களை மாத்திரம் ஏட்டிக்குப் போட்டியாக வழங்கிவிட்டால் நாம் உயர்வடைந்து மீட்சி பெற்றுவிட்டோம் என்று நினைத்து விடக் கூடாது, ஆனால் இனவாத அரசியல்வாதிகள் அப்படித்தான் நினைத்துக் கொண்டு செயலாற்றுகின்றார்கள்.

இது முற்றிலும் ஒரு ஏமாற்றாகும். பௌதீக வளங்களை வாரி வழங்குவதனால் நாம் ஒரு போதும் தீவினையிலிருந்து நீங்கி மீட்சி பெற்று விட முடியாது.

அதற்குப் பதிலாக மனித மனங்கள் ஒன்றிணைய வேண்டும். அதிலும் குறிப்பாக நாட்டிலுள்ள சிறுபான்மையினராகிய தமிழர்களும், முஸ்லிம்களும் முதலில் வடக்கு மற்றும் கிழக்கில் ஒன்றிணைய வேண்டும்.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலே நல்லிணக்கம் ஏற்படாத வரையில் மிக மோசமானதொரு சமூக நிலை இருந்து கொண்டுதான் இருக்கும். இது எல்லா வகையான சுமூக நிலைக்கும் குந்தகமாக அமையும்.

அதன் அடிப்படையாக நாம் முதலில் மொழியால் இணைவோம். தமிழால் இணைவோம், கலையால் கலப்போம் என்ற அடிப்படையில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக சமூக இணக்கப்பாட்டு வேலைத் திட்டங்களுக்கு முன்னுரிமையளித்துச் செயற்பட வேண்டும்.

இவ்வாறான உய்வுக்கான வழிகள் ஏற்படுத்தப்படாதவிடத்து வடக்கு மற்றும் கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்கள் உய்வில்லாதவர்களாக விடுதலையின்றிய அடிமைச் சமூகங்களாக வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

ஆகவே, நல்லிணக்கத்திற்கும் இணைவுக்கும் பாலமாக கிழக்கு மாகாணத்தின் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த புதிய ஆளுநர் இருக்க வேண்டும் என்று நாங்கள் அவாக் கொள்கின்றோம்.

அவர் நியமிக்கப்பட்டபோது பெரிய சலசலப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புக்கள் தலைதூக்கின.

அத்தனை சவால்களையும் தாண்டி செயலால் ஒற்றுமையை சாதித்துக் காட்டுகின்ற மொழியால் இணைவோம் என்ற ஒற்றுமை மந்திரத்தை உச்சாடனம் செய்து உய்வடைய நான் இரு சமூகங்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டுள்ளார்.

6 கருத்துரைகள்:

First Of all Learn to Speak Learn To Write . Hindu Muslims. Most of the Muslims of SriLanka are Tamils (Muslims) Then Malay Muslims and few Sinhales Muslims.
I'm A Tamil Muslim.

தமிழர்களை நம்பி அவர்களோடு இணைவது முஸ்லிம்கள் கடலில் குதிப்பதற்கு சமன். நாம் உறங்கும்பொழுது கழுத்தை அறுத்துவிடுவார்கள். தமிழர்களால் முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களை சிங்களவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் சிங்களவர்கள் எவ்வளவோ பரவாயில்லை

இருபக்கத்து நல்ல உள்ளங்களின் கனவும் அதுதான். அதைவிட வேறு மேன்மையான வழி தமிழருக்கும் இல்லை முஸ்லிம்களுக்கும் இல்லை.

GTX W அவர்களுக்கு. 2013ல் நான் தமிழரும் முஸ்லிம்களும் இணைத போராட்டத்தை ஆரம்பிக்க வந்திருப்பதாக கோத்தபாயவால் கைது செய்யபட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டேன். தமோடு இணையாவிட்டால் சாகும்வரை என்னை விடுதலை செய்வதில்லை என்கிற தீர்மானம் இருந்ததால் சிங்கள அதிகாரிகள் வெளிப்படையாகவே பேசினார்கள். அவர்கள் “நீங்கள் முஸ்லிம்களின் வேகமான குடிபெருக்கத்தால் நாட்டில் சிங்களவருக்கும் தமிழருக்கும் ஏற்பட்டுவரும் பேராபத்தை உணராமல் முஸ்லிம்களை ஆதரிக்கிறேன் எனக் குற்றம் சாட்டுவதாக இருந்தது. சிங்களவர் முஸ்லிம்களை பதவிகள் மூலம் மனேஜ் பண்ணுகிறார்கள் ஆனால் தமிழரோடுதான் இணைய முடியும் என்றார்கள். நான் குடிசன வளற்ச்சி புள்ளிவிபரங்கள் திரிவு பட்டவை என வாதிட்டேன், இத்தைகய ஒரு போக்கு வளந்து வருவதை GTX W உணர்ந்ததுண்டா?

@Gtx W, இப்ப ஐயா-சாரு என சிங்களவர்களுக்கு கும்பிடு போட்டு, அடங்கி, தருவதை பெற்று வாழ்ந்து வருகிறீர்கள், அரசாங்கத்தில் இருந்தாலும் ஏதாவது உரிமைகள் கேட்ட பயம். அப்படி இருந்தும், அங்காங்கே சுத்தி சுத்தி நல்ல அடியும் போடுகிறார்கள்.

இந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும், தமிழர்கள் சிங்களவர்க்கு எதிராக போராடும் வரை தான்.
அதன் பிறகு, தெற்கு இலங்கை தான் அடுத்த மியன்மார்.

Tamilargal muslimgal inaya arasiyal vyabarigal Vida maataargal

Post a Comment