March 04, 2019

புல­னாய்வு துறையில் அதி­க­ளவு முஸ்­லிம்கள் இருந்­து, புலிகளை அழித்­தொ­ழிப்­பதில் பெரும் பங்­காற்றினர்

புல­னாய்வு துறையில் அதி­க­ளவு முஸ்­லிம்கள் இருந்­து, புலிகளை அழித்­தொ­ழிப்­பதில் பெரும் பங்­காற்றினர்புல­னாய்­வுத்­து­றையில் முஸ்­லிம்கள் அதி­க­ளவில் இணைந்து நாட்­டுக்­காகப் பாரி­ய­ளவில் பங்­காற்­றி­யுள்­ள­தாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷ தெரி­வித்தார்.

கண்டி மாவட்­டத்தில் உடு­நு­வர எல­மல்­தெ­னி­யவில் “எலிய” அமைப்­பினால் தொழி­ல­திபர் ஏ.எல்.எம். பாரிஸின் ஏற்­பாட்டில் நேற்­று­முன்­தினம் நடாத்­தப்­பட்ட கருத்­த­ரங்கில் கலந்­து­கொண்டு  அவர் உரை­யாற்­றினார்

கண்டி மாவட்­டத்தின் சகல பகு­தி­க­ளி­லி­ருந்தும் பெருந்­தொ­கை­யான முஸ்­லிம்கள் கலந்­து­கொண்ட இந்­நி­கழ்வில் பரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மகிந்­தா­னந்த அளுத்­க­மகே, கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, அநு­ராத ஜய­ரட்ன, ஆனந்த அளுத்­க­மகே, திலும் அமு­னு­கம மற்றும் பேரா­சி­ரியர் ரிஸ்வி ஷெரீப் உட்­படப் பலரும் கலந்து கொண்­டனர்.

இதில் தொடர்ந்தும் உரை­யாற்­றிய முன்னாள் பாது­காப்பு செய­லாளர்,

நாட்டில் சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு எட்­டப்­ப­டா­மைக்குக் காரணம் சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­களை  அர­சி­யல்­வா­திகள் தமது வாக்­கு­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­மை­யாகும்.

சிங்­கள, தமிழ் , முஸ்லிம் மக்கள் யாவரும் பொது­வான பிரச்­சி­னை­க­ளுக்­குட்­பட்­டுள்­ளனர். இது பொரு­ளா­தாரம், கல்வி, சுகா­தாரம், வறுமை, வீடு, தொழில் முத­லா­னவை சார்ந்த பிரச்­சி­னை­க­ளாகும். இவை தீர்க்­கப்­பட வேண்டும்.

இப்­பி­ரச்­சி­னைகள் சகல சமூ­கங்­க­ளுக்கும்  பொது­வான  பிரச்­சி­னை­க­ளாகும். இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு காரணம்  சிங்­க­ள­வர்­களும் முஸ்­லிம்­களும் தான் என்று தமிழ் அர­சி­யல்­வா­தி­களும், தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் தான் காரணம் என்று சிங்­கள  அர­சி­யல்­வா­தி­களும், சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் என்று முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் தமது  மக்­க­ளிடம் கூறி­வ­ரு­கின்­றனர். இந்த அர­சியல் போக்கு சிறு­பான்மை தமிழ், முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நாட்டு மக்­களின் பிரச்­சி­னைகள் எது­வித அர­சியல் பேத­மு­ம­மின்றி தீர்க்­கப்­பட வேண்டும். இதில்  தீர்வு காணப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­களுள் வறுமை ஒழிப்பு மிக முக்­கி­ய­மான  பிரச்­சி­னை­யாகும். இதற்­காக சரி­யான பொரு­ளா­தாரக் கொள்­கையின் கீழ் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.  பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும்­போது சகல இனத்­த­வர்­களும் கெள­ர­வ­மாக வாழும் நிலை உரு­வாகும்.

இந்­நாட்டில் எதிர்­கா­லத்தில்  சகல இனத்­த­வர்­களும் அச்சம், பீதி­யின்றி கௌர­வ­மாக வாழும் சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்த வேண்டும். மக்­களின் மத சுதந்­திரம்  உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். பாதாள குழுக்கள் கப்பம் பெறும் நிலையை இல்­லா­ம­லாக்­குவோம்.

மகிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில், முப்­பது வருட கொடிய பயங்­க­ர­வாத யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.  இப்­ப­யங்­க­ர­வா­தத்தால் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவரும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். மகிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் பயங்­க­ர­வாத யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தமை மக்கள் ஆணைக்கு மாற்­ற­மான செய­லல்ல.

மகிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­த­மையால் அர­சி­யல்­வா­தி­க­ளாலும் எதி­ரி­க­ளாலும்  நாம் இன­வா­தி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டோம்.  நாம் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­க­ளாக காட்­டப்­பட்டோம். மகிந்த ராஜபக் ஷவின் அர­சாங்கம் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவ­ருக்கும் நன்­மை­களை ஏற்­ப­டுத்­தி­யது.

கொழும்பில் சேரி­களில் மக்கள் எது­வித வச­தி­க­ளற்ற நிலையில் சுகா­தாரப் பிரச்­சி­னை­க­ளுடன் வாழ்­கின்­றனர். இந்­நி­லையை மாற்­றி­ய­மைக்க வேண்டும். நாம் கொழும்பில் மாடி­வீட்டுத் திட்­டங்­களை உரு­வாக்கி சேரிப்­புற மக்­களை குடி­ய­மர்த்­தினோம். மக்கள், தோட்­டங்­களில் அல்­லது சேரி­களில் வாழ்ந்த விகி­தா­சாரத்­திற்­கேற்ப மாடி­வீட்டுத் திட்­டங்­களில் குடி­யேற்­றப்­பட்­டனர்.

இவ்­வி­கி­தா­சாரத்தில் எது­வித மாற்­றங்­க­ளையும் செய்­ய­வில்லை. இக்­கு­டி­யேற்­றத்தில் இன, மத பேதங்கள்  பார்க்­கப்­ப­ட­வில்லை. ஆனால், சில அர­சி­யல்­வா­திகள் சிங்­கள மக்­களை குடி­யேற்றி விட்டு  தமிழ், முஸ்லிம் மக்­களை கொழும்­பி­லி­ருந்து வெளி­யேற்ற முற்­ப­டு­வ­தாக பிர­சாரம் செய்­தனர். இதனை மக்­களில் ஒரு சாரார் நம்­பினர். இதனால் முஸ்­லிம்கள் மத்­தியில் எனக்­கெ­தி­ரான நிலைப்­பா­டுகள் ஏற்­பட்­டன.   ஆனால், இதன் உண்­மைத்­தன்­மையை இன்று மக்கள் புரிந்­து­கொண்­டுள்­ளனர்.

நாட்டில் நீதி, நியாயம் இல்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நாம் எதிர்­கா­லத்தில் நீதி நியா­யத்தை உறு­திப்­ப­டுத்­துவோம். சிங்­கள, தமிழ் முஸ்லிம் மக்கள் யாவரும் கௌர­வ­மாக வாழ்­வதை விரும்­பு­கின்­றனர். இதனை உறு­திப்­ப­டுத்­து­வது எமது கட­மை­யாகும்.

நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து சமா­தா­னத்தை நிலை நாட்­டி­ய­மையால் முஸ்லிம் சமூகம் சுதந்­தி­ர­மாக வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் நிலை உரு­வா­கி­யது. எம்­மிடம் வெள்ளை வேன் இல்லை. இந்­நாட்டில் வெள்ளை வேன்கள் 1988, 89, 90களில் இருந்­தன. நாம் அர­சியல் பழி­வாங்­கல்­களில் ஈடு­ப­ட­வில்லை.

விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தினர் கொழும்பில் பல­மிக்க கட்­ட­மைப்பைக் கொண்­டி­ருந்­தனர். இதனால் கொழும்பில் பொரு­ளா­தார மையங்­களில்  குண்­டுகள் வெடித்­தன. அப்­பாவிப் பொது­மக்கள் உயி­ரி­ழந்­தனர். அர­சியல் தலை­வர்கள் கொல்­லப்­பட்­டனர். விடு­தலைப் புலி­களின் கட்­ட­மைப்பை அழித்­தொ­ழிப்­பதில் புல­னாய்­வுத்­துறை அதி­கா­ரிகள் பெரும் பங்­க­ளிப்பு செய்­தனர். முஸ்லிம் சமூகம் தேசிய பாது­காப்­புக்கு பங்­க­ளிப்பு செய்­துள்­ளது. பாது­காப்­புத்­து­றையில் புல­னாய்வுப் பிரிவில்   அதி­க­ளவு முஸ்­லிம்கள் இருந்­தனர். இப்­பு­ல­னாய்வுத்துறை அதி­கா­ரிகள் நாட்­டுக்­காகப் பணி­யாற்­றினர். Vidivelli

4 கருத்துரைகள்:

He knows that Muslim will easily forget and forgive and can be changed by attractive lies and speaches.

We remember how he fostered BBS during MR time and how much fear Muslim undergone and what type of silence approval MR group gave to BBS and other racist groups.

BBS made a pig effigy and named Allah on it and burnt in Kururnagala >> During who time..

Dear MUSLIMS, Keep your trust only in ALLAH and do not get decieved by MY3, RANIL, MR or GOTA..

ஐஸ் மழை பொழிகிறது..

அமெரிக்காவில் ட்ரம்ப் முழுக்க முழுக்க அமெரி்க்கர்களின் வாக்குகளால் மட்டும் சனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டது போல இந்த ஆளுக்கும் இலங்கையில் சிங்கள வாக்குகளால் மட்டும் சனாதிபதியாக வரலாம் என கற்பனை செய்த கோத்தபா இப்போது அவருடைய கனவு சாத்தியமாகமாட்டாது என முஸ்லிம்களை ஏமாற்ற ஆரம்பித்திருக்கின்றான். இவனை நம்பிமட்டும் உங்கள் பெறுமதியான வாக்குகளை மட்டும் வீணாக்கிவிடாதீர்கள். இவன் பதவிக்கு வந்தால் முதல் வேலை இந்த நாட்டு முஸ்லிம்களை தொலைத்துக் கட்ட ஏற்கனவே போட்ட திட்டங்களை அமல்படுத்த முயற்சி எடுப்பதுதான் இவன் முதல்வேலை. எனவே முஸ்லிம்களே மிகவும் சிந்தனையுடனும் புத்திசாதுர்யமாகவும் நடந்து கொள்ளுங்கள். இதற்கு மேல் எதுவும் சொல்லமுடியாது.

சரி கோட்டா தான் இனவாதி. தமிழ் யூத பயங்கரவாதிகளோடு கூத்து கும்மாளமடிக்கும் ரணில் நல்லவனா? இந்த மொக்கு சோனக சமூகம் என்றுமே திருந்தப்போவதில்லை

Post a comment