Header Ads



ரிஷாத்திற்கு எதிராக, நாடுபூராக ஆர்ப்பாட்டம், வண்டியில் அமர்த்தி அசிங்கப்படுத்தப்பட்டார்- பௌத்த தேரர் தலைமையில் ஏற்பாடு


வில்பத்துக் காட்டை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழிக்கிறார் என்று குற்றம் சாட்டியும், வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல கோஷங்களை முன்வைத்து இன்று நாடு பூராகவும் உள்ள 28 பிரதான சிங்கள நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உருவப் பொம்மைகள், அவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட பதாதைகள் மற்றும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் புகைப்படங்களை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னனெடுக்கப்பட்டன.

“இலங்கையைப் பாதுகாப்போம்” அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களே பெருமளவில் பங்குகொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களின்போது பௌத்த தேரர்களும், சிங்கள கடும்போக்காளர்களும் பங்குகொண்டிருந்தனர்.

ஆனால், இன்றைய ஆர்ப்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மாத்திரமே பங்குகொண்டிருந்தனர்.

28 நகரங்களில் நடைபெற்ற மேற்படி ஆர்ப்பாட்டங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களைக் கொண்ட நகரங்களிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒட்டுமொத்த சிங்கள மக்கள் மத்தியில் வடக்கு முஸ்லிம்களையும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் தவறாக சித்தரிக்கும் நோக்கத்திலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்திற்கு என்றுமில்லாதவாறு சிங்கள ஊடகங்களும் சிங்கள சமூக வலைத்தளங்களும் அதிக முக்கியத்துவத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. இந்த போராட்டம் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டல் வேண்டும்

    ReplyDelete
  2. This selfish person is enough to disgrace and destroy the entire community.

    ReplyDelete
  3. சம்பிக ரணவக்கவின் முஸ்லிம்களின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியை ரிஷாத் பதியுதீனின் பெயரில் கக்குகின்றான்.

    ReplyDelete
  4. அல்லாஹ் ஒருபோதும் அவனின் நல்லடியானை இழிவுபடுத்த மாட்டான் அவர்களின் துரோகம் செய்தவர்கள் அதிலிருந்து நஷ்டப்படுவார்கள்.ரிசார்ட் அவர்கள் இனமத வேறுபாடு இன்றி யாருக்கும் சேவை செய்யும் ஒரு மனிதர் அல்லாஹ் தான் அவரை எல்லா சூழ்ச்சிகளிலும் இருந்து பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.