Header Ads



உச்சக்கட்ட குழப்பம், மைத்திரியின் வேண்டுகோளை நிராகரித்தது வெளிவிவகார அமைச்சு

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

 வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது

இணைஅனுசரனை வழங்கவேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அரசாங்கம் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது

இணை அனுசரணை வழங்குவதன் மூலம் நிலையான நீண்டகால நல்லிணக்க நடவடிக்கைகளிற்கான தனது அர்ப்பணிப்பையும் உறுதிப்பாட்டையும் அரசாங்கம் வெளிப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

புதிய தீர்மானத்திற்கு இணைஅனுசரணை வழங்குவதன் மூலம் கடந்தகாலத்தின் தீர்மானத்திற்கான மேலதிக அவகாசத்தை கோரவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் விடயத்தில்  பிரிட்டனுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த தந்திரோபாயம் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக சர்வதேச யுத்தகுற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையை தவிர்க்கும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

2009 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அப்போதைய ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பான்கிமூனிற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளின் தொடர்ச்சியாகவே 2015 ம் ஆண்டின் தீர்மானமும்,அதன் பின்னரான நடவடிக்கைகளும் அமைந்துள்ளன எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களில் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தை அமைப்பது இழப்பீட்டிற்கான அலுவலகத்தை அமைப்பது உட்பட பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது இதன் காரணாமாக இலங்கை மக்கள் பொருளாதார நன்மைகளை  அனுபவிக்ககூடிய நிலையேற்பட்டுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.