Header Ads



மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

நிலவிய வரட்சியுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

காசல் ரீ, மௌசாகலை, கொத்மலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனலவெவ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 41.8 வீதமாக குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தினசரி மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் ஏப்பரல் மாதங்களில் இவ்வாறு நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படுவதாகவும் மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.