Header Ads



ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தில், பதிலடி கொடுத்த ஹர்ஷ டி. சில்வா


ஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க கோத்தாபய ராஜபக்ஷ விரும்பமாட்டார். இலங்கையில் அவருக்கு உள்ள சலுகைகளை விடவும் அமெரிக்காவில் அவருக்கு பல சலுகைகள் உள்ளது என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு பேரவை மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

கோத்தாபய ராஜபக்ஷ, அண்மையில் 19 ஆம் திருத்தத்தை நீக்கி மீண்டும் 18 ஆம் திருத்தத்தை கொண்டுவருவதாக கூறியிருந்தார். ஆகவே அவர் சுயாதீன சேவையை நிராகரிக்கின்றனர் என்பது தெரிகின்றது. 

அரசியல் அமைப்பு பேரவை சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றது. இதற்கான பதவி நியமனங்கள் அனைத்துமே ஜனாதிபதியினால் முன்னெடுக்கபட்டு  வருகின்றது. ஆகவே அவர் அரசியல் அமைப்பு பேரவையின் செயற்பாடுகளை விமர்சிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.