February 26, 2019

'குடு' வின் கதை - முதல் போதைப்பொருள் வியாபாரி, தெல் பாலய்யா என்ற கலி கருப்பையா - இலங்கைக்கு எப்படி வந்தது..?

- சிங்களத்தில்: சுகந்தி யசோதரா - 

இலங்கையில் போதைப்பொருளின் பாவனை உச்சநிலையில் இருக்கும் இத்தருணத்தில் இலங்கைக்கு அதன் அறிமுகம் வளர்ச்சி எவ்வாறானது என்பதுபற்றியதே இக்கட்டுரை.

1986 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் முதலாவது எய்ட்ஸ் நோயாளி இலங்கையில் கண்டுபிடிக்கப்படுகின்றார்.ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணி ஒருவர் இரத்தினபுரியில் அமைந்துள்ள சுற்றுலா பயணிகள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும்போது சுகவீனமுற்றார்.அடிக்கடி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.இதனால் ஒருநாள் மயக்கமுற்று விழவே கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்படுகின்றார்.பின்னர் அவருக்கு ஏய்ட்ஸ் நோய் தொற்றி உள்ளதென கண்டறியப்பட்டது.

1988 ஆம் வருடத்தில் இலங்கையில் 120 எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.இவர்களில் 20பேர் வெளிநாட்டவர்.ஏணையோர் நம்நாட்டின் இளைஞர் யுவதிகள்.அன்று எமது நாட்டில் எய்ட்ஸ் நோய் பரவுவதற்கான பிரதான காரணம் போதைபொருள் பாவணையாகும்.

முதலாவது ஹெரோயின் பாவணை நோயாளி 1982 ஆம் ஆண்டில் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றார்.இவர் சுற்றுலாப்பயணிகளிடம் இருந்து போதைப்பொருளை பெற்றுக்கொண்டதாக பதிவாகியது. இவ்வெண்ணிக்கை ஒருவருடத்தில் 92 ஆக அதிகரித்தது.இவர்களுக்குத்தேவைப்பட்ட போதைப்பொருள் 50% மானவர்களுக்கு உல்லாசப்பயணிகளிடமிருந்தும் மீதி 50% மானவர்களுக்கு வெளிநாட்டவருடன் தொடர்புபட்ட உள்ளூர் நபர்களிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளது.

1984 ஆம் வருடத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரின் நாளாந்த சராசரி போதைப்பொருள் பாவணை 390 மில்லிகிராம் அளவினதாகும்.காலப்போக்கில் இதில் ஏற்பட்ட அதிகரிப்பு வெலே சுதா ,மாகதுரே மதுக்ஷ் போன்றவர்கள் உருவாகக்காரணமாகியது.

போதைப்பொருள் பாவணையின் அதிகரிப்பு நேரடியாக போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவரவும் இங்கிருந்து ஐரோப்பிய மற்றும் மாலைதீவுபோன்ற இடங்களுக்கு அனுப்பும் மத்திய நிலையமாகவும் உருவெடுக்கவும் காரணமாகியது.

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு கொல்லுபிடியில் பிடிபட்ட 294.5 கிலோகிறாம் அளவிலான போதைப்பொருள் இலங்கையில் பிடிபட்ட ஆகக்கூடுதலான ஹெரோயின் தொகையாகும்.

1975 இல் அறிமுகமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்,திறந்த பொருளாதாரத்துடனான வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் வருகை என்பன நம்நாட்டிற்குள் ஹெரோயின்,ஹசீஸ்,கொகேன் போன்ற போதைப்பொருட்கள் அறிமுகமாக காரணமாகியது.நம்நாட்டு இளைஞர்களிடம் புலக்கத்திலிருந்த கஞ்சா சுருட்டை உல்லாசப்பயணிகள் பெற்றுக்கொண்டு அவர்களிடமிருந்ததை இவர்களுக்குக்கொடுத்தனர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் கரையோரங்களில் திரிந்துகொண்டிருந்த உல்லாசப்பயணிகளிடமிருந்து பயணத்தைக்கொடுத்தோ பாலியலில் ஈடுபட்டோ அதனைப்பெற்றுக்கொள்ள உந்தப்பட்டனர்.இதனால் எய்ட்ஸ் பரவத்துவங்கியது.அந்நாட்களில் போதைப்பொருட்களை கண்டறியும் உபகரணங்கள் விமான நிலையத்திலோ துறைமுகத்திலோ இருக்கவில்லை.இலகுவாக நாட்டிற்குள் கொண்டுவரக்கூடியதாக இருந்தது.

இலங்கை இளைஞர்களுக்கு போதைப்பொருளை கடத்தி விற்பனை செய்யத்துவங்கிய முதல் போதைப்பொருள் வியாபாரி தெல் பாலய்யா எனப்படும் கலி கருப்பையா ஆகும்.1957 ஆம் வருடத்தில் பிறந்த தெல் பாலய்யா 1974 வருடத்தில் தனது 17வது வயதில் சிறிய தள்ளுவண்டி ஒன்றில் தேங்காய் எண்ணெய் ‘பூலி’ ஒன்றை வைத்துக்கொண்டு வீடிவீடாக சென்று எண்ணை வியாபாரத்தில் ஈடுபட்டான்.

இக்காலப்பகுதில் CTB பஸ்வண்டியைத்தவிர தனியார் பஸ்வண்டிகள் இல்லை,சில்லரை வியாபாரிகளைத்தவிர சுபர் மார்க்கெட் இல்லை,CTB,புகையிரதம்,ஒஸ்டின்,கேம்ரீஜ்,வொக்ஸ்வகன் ஆகிய வாகனங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத்தேவையை பூர்த்திசெய்தன.

EN 1,2,3,4,5 ஆகிய எண்தகடுகளில் பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் கார்கள் ஈடுபட்டன.EN 6,7 ஆகிய இலக்கங்களையுடைய கார்கள் செல்வந்தர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களின் பாவணையில் இருந்தது.இவ்வாறான 200 அளவிலான வாகனங்களே அப்போது பாவணையில் இருந்தது.

அந்நாளில் பிரதமராக ஜே.ஆர்.ஜயவர்தன இருந்தார்.அப்போது ஒரு அமெரிக்க டொலர் 15.19 ரூபாவாகும்.ஒரே ஒரு ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் மட்டுமே இலங்கைக்கு இருந்தது.தொலைக்காட்சி நிலையங்கள் அப்போது இருக்கவில்லை.தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 88 சதம்,ஒரு ராத்தல் சீணி 72 சதம்,ஒரு யார் சீத்தைத்துணி 2.12 ரூபா,பாண் ஒரு இறாத்தல் 35 சதம்.இவ்வாறான ஒரு சமூகத்திலேயே தெல் பாலய்யா தனது “குடு” வியாபாரத்தை ஆரம்பிக்கின்றான்.

சிறு வியாபாரிகளிடம் இருந்து ஹெரோயினைப்பெற்று அதனை தூளாக்கப்பட்ட அஸ்பிரின்,பனடோல்,சுண்ணாம்பு ஆகியவற்றுடன் கலந்து விற்பனை செய்யத்துவங்கினான்.

அதன்பின் 1985 இல் தமிழ்நாட்டிற்குச்சென்று அங்கிருந்து 2கிலொ ஹெரோயினை 20 இலச்சம் ரூபாவிற்கு இலங்கைக்குக் கொண்டுவந்தான்.இவனுடன் சுதாகரன்,கிறிஸ்டொபர்ஸ்,மொஹமட் நிசாம் நவ்பர்,கிபுலா அலே குனா,கொச்சிக்கடே கனி ஆகியோர் இணைந்து கொண்டனர்.

நாளடைவில் கிபுலா அலே இந்தியாவிற்கு தப்பிச்சென்றான்.சுதாகரன்,கனி ஆகியோர் கொல்லப்பட்டனர்.8,9 வருடங்களுக்கு முன்னர் டுபாய் நாட்டிற்கு தப்பிச்சென்ற நவ்பர் தற்போது துபாயில் கைதாகியுள்ளான்.

நாளடைவில் மரக்கறி எண்ணை இறக்குமதியில் ஏகபோக உரிமையைப்பெற்றிருந்த தெல் பாலய்யா,35 கிலோ கிறாம் ஹேரோயினை நாட்டிற்குள் கொண்டுவந்த குற்றத்திற்காக தேடப்படவே 10 வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு தப்பிச்சென்றான்.2017 இல் இறந்த அவனின் உடல் 2017/02/28 இல் இலங்கைக்குக்கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டது.அவனின் மறைவுபற்றி ஒரு இலச்சத்திக்கும் அதிகமாக சுவரொட்டிகள் கொழும்பு முழுவதும் ஒட்டப்பட்டது.


0 கருத்துரைகள்:

Post a Comment