Header Ads



4 பந்துகளில், 4 விக்கெட் - உலக சாதனை படைத்த ரஷித்கான்


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் உலக சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி டேராடூனில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து, பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்கள் குவித்தது. முகமது நபி 36 பந்துகளில் 81 ஓட்டங்கள் குவித்தார். பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 27 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 4வது பந்திலும் ஒரு விக்கெட் எடுத்தார்.

இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ண் தொடரின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

No comments

Powered by Blogger.