December 26, 2018

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு, றிசாத் என்ன செய்யப்போகிறார்...?

- எம்.எஸ். எம். ஜான்ஸின் -

  ரிஷாத் பதியுதீன்  அவர்களுக்கு கைத்தொழில் , வர்த்தகம், கூட்டுறவு அபிவிருத்தி  போன்ற அமைச்சுக்களுடன் நீண்டகால இடம்பெயர்த்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சும் வழங்கப் பட்டிருப்பது யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விடயமாகும்.  நீண்ட கால இடம்பெயர்ந்த  முஸ்லிம்களின் மீள்குடியேற்ற மற்றும் முஸ்லிம்களில் உடைந்த வீடுகள்  மற்றும் பள்ளிவாசல் சொத்துக்கள் பொது சொத்துக்கள் என்பவற்றின்   மீள் நிர்மானத்துக்கானதும் மேலும் மீளக் குடியேறும் முஸ்லிம்களுக்கான வாழ்வாதாரம்  என்பவற்றையும் வழங்குவதற்காக உருவாக்கப் பட்டுள்ள இந்த அமைச்சு   பல்வேறு வேலைத் திட்டங்களை யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் செய்ய வேண்டியுள்ளது. 

யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரை அங்கு பல தேவைகள் இருக்கின்ற போதிலும் பின்வரும் விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும். 

1. ரிஷாத் பதியுத்தீன் மீலாத் கிராமம்

ஏற்கனவே தேசிய மீலாத்  விழா நிகழ்ச்சித் திட்டங்களில் மீலாத் கிராமம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமேன அமைச்சர்  எம்.எச். அப்துல் ஹலீமும்  அமைச்சர் ரிஷாதும் இணங்கியிருந்தனர். இதனைச் செய்து தர யாழ் மாவட்ட செயலகத்தின் அதிகாரிகளும் முன்வந்திருந்தனர்.  எனவே 500 வீடுகள், ஒரு பாடசாலை (ஐந்தாம் தரம் வரை), ஒரு விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, சனசமூக நிலையம், பள்ளிவாசல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கிராமம் யாழ் பரச்சேரிவெளி காணியில் உருவாக்கப் பட வேண்டும். 

2. தொடர்மாடி வீடுகள்

ஒவ்வொன்றும் 40 வீடுகளைக் கொண்ட 3 தொடர்மாடிக் கட்டிடங்கள் சோனகதெருவின் மையப் பகுதியில் மூன்று இடங்களில் அமைக்கப் பட்டு புத்தளத்தில் உள்ள யாழ் முஸ்லிம்கள் அங்கு மீள்குடியேற்றப் படல் வேண்டும்.

3. ஷாபி நகர் மஸ்ஜித் மீளமைப்பு

ஷாபி நகர் மஸ்ஜித் இடிக்கப் பட்டு அத்திபாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. எனவே இப்பளிவாசல் மீளமைக்கப் பட வேண்டும். அதனைச் சுற்றியுள்ள 20  அழிக்கப் பட்ட வீடுகளை புனர் நிர்மானம் செய்ய வேண்டும். 

4. மஸ்ஜித் அபூபக்கர் மேல்மாடி வேலைத் திட்டம்.

மஸ்ஜித் அபூபக்கர் பள்ளியின் பழைய கட்டிடம் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்பு சம்பூர்ணமாக நிர்மூலம் செய்யப்பட்டிருந்தது. அதன் மீள் கட்டுமானப் பணி இன்னும் முடியவில்லை.  அது பூரணப்படுத்தப் படல் வேண்டும்

5. உடைந்த வீடுகள் திருத்தம்.

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்குச் சொந்தமான 400 வீடுகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றது. இவற்றை திருத்துவதற்காக தலா 850,000 ரூபா வழங்கப் பட வேண்டும்.  இவை வீடு திருத்தல் நிதியாக நிபந்தனைகள் இன்றி வழங்கப் படல் வேண்டும். தேவையாயின் வீட்டை ஐந்து வருடத்துக்கு விற்க முடியாது என்ற உடன்படிக்கை செய்துகொள்ளலாம். மாற்றமாக இந்த வீடு திருத்தும் நொதி பெறுவோர் யாழ்ப்பாணத்தில் தமக்குள்ள தொடர்பை உறுதிப் படுஹ்த  இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வட்டார கிராம அதிகாரி அலுவலகத்தில் வைக்கப் படும் பதிவேடு ஒன்றில் தமது வரவை உறுதிப் படுத்தி  கையொப்பமிடல் வேண்டும். இரண்டு மாததுக்கு ஒருமுறையென ஒரு வருடத்துக்கு இவ்வாறு கையொப்பமிடல் வேண்டும். 

6. மண்கும்பான் பள்ளிவாசல் புனரமைப்பு

மண்கும்பான் பள்ளிவாசல் பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றதால் அந்த பள்ளிவாசல் கட்டிடமும் சேதமடைந்துள்ளது. அத்துடன் ஸ்லப்பின் கம்பிகளும் கரல்பிடித்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே அந்தப் பள்ளிவாசல் சுமார் 8 மில்லியன் செலவில் மீளமைக்கப் படவேண்டியுள்ளது. இதற்கான செலவீன மதிப்பீட்டை வேலனை பிரதேச சபை மூலம் பெற்று அந்த கட்டிடம் மீளமைக்கப் படல் வேண்டும். 

7. மண்கும்பான் வீடமைப்பு

மண்கும்பானில் மீள்குடியேற மேலும் ஐம்பதுக்கும்  மேற்பட்ட குடும்பங்கள் தயாராக உள்ளன. இவர்களுக்கான வீடமைப்புத் திட்டமும் நடைமுறைப் படுத்தப் பட வேண்டும். அத்துடன் இவர்களின் வாழ்வாதார பிரச்சினையைச் தீர்க்க இவர்கள் யுத்தத்தினால் இழந்து போன இவர்களின் இயந்திரப் படகுகள் மற்றும் மீன்பிடிவலைகள் என்பனவற்றுக்கு நஷ்ட ஈடாக புதிய படகுகளும் மீன்பிடி வலைகளும் வழங்கப் பட வேண்டும். 

8. மண்கும்பான் பாடசாலை புனரமைப்பு

மண்கும்பானில் போதுமான மக்கள் மீள்குடியேற்றப் படும் போது அங்கு இடித்தழிக்கப் பட்டுள்ள பாடசாலைக் கட்டிடமும் மீள்மைக்கப் பட்டு மண்கும்பான் முஸ்லிம் பாடசாலை மீளவும் ஆரம்பிக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட வேண்டும். 

9. சாவகச்சேரி முஹிதீன் பள்ளிக்காணியின் அழிவடைந்த சொத்துக்கள் புனரமைப்பு
சாவகச்சேரி பள்ளிக்குச் சொந்தமான  20 வீடுகள் உடைக்கப் பட்ட நிலையில் காணப் படுகின்றன. மேலும் ரயில் தண்டவாளத்துக்கு மறுபுறம் காணப் பட்ட கலாச்சார மண்டபம் மற்றும் கடைத்தொகுதியும் வெறும் நிலமாக காணப் படுகின்றது. எனவே இருபது வீடுகளையும் மீளமைத்து தண்டவாளத்துக்கு மறுபுறம் ஐந்து கடைகளையும் மீளமைத்து அதன் பின்பக்கம் கலாச்சார மண்டபத்தையும் அமைக்க வேன்டும். 

10. மஸ்ர உத் தீன் டிரஸ்டின் சொத்துகள்
மஸ்ர உத் தீன் டிரஸ்டுக்குச் சொந்தமான கட்டிடத் தொகுதி ஒன்று முஸ்லிம் கல்லூரி வீதியில் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றத்துக்கு முன்பு இருந்தது. இந்தக் கட்டிடம் இடம்பெயர்வுக்கு பின்னர் இடித்தழிக்கப் பட்டுள்ளது. இந்த இடத்தில் கலாச்சார மண்டபத்தையும் கடைத்தொகுதியையும் மீளமைப்பதற்கான முன்மொழிவு (மினிட்ஸ்), வரைபடம், முனிசிபல் அனுமதி மற்றும் தொகை மதிப்பீடு என்பவற்றை  செய்து அதனை முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தினால் அத்தாட்சிப் படுத்தி மீள்குடியேற்ற அமைச்சுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் ஆவண செய்யப் படல் வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் தேவைகள்

1. கிளிநொச்சி  நகரத்தில் கச்சேரியடி , வட்டக் கச்சி, 55 ஆம் கட்டை போன்ற இடங்களில் குடியேற விண்ணப்பித்தோர் பலர் உள்ளனர். அவர்களுக்கான காணிகளும் வீடுகளும் வழங்கப் படல் வேண்டும்.  

2. காணியில்லாதவர்களுக்கு அறிவியல் நகரில் காணியும் வீடுகளும் விவசாயம் செய்ய நிலமும் வழங்கப் படல் வேண்டும். 

3. பள்ளிக்குடா பிரதேசத்தில் மேலும் 20 குடும்பங்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப் பட வேன்டும்

4. நாச்சிக் குடா பிரதேசத்தில்  விண்ணப்பித்துள்ள சகல குடும்பங்களுக்கும் காணியும் வீடும் விவசாய காணியும் வழங்கப் படல் வேண்டும். 

5. 1990 ஆம் ஆண்டு பல படகுகளை இப்பிரதேச மக்கள் கொண்டிருந்தர்கள். அவை எல்லாம் இடப்பெயர்வினால் இழக்கப் பட்டு விட்டன. எனவே இங்கு தொழில் புரியும் நபர்களுக்கு வாழ்வாதார உதவி, மீன்பிடி வள்ளங்கள், வலைகள், மீன் வாடி, குளிர்ரூட்டும் அறை மற்றும் ஆடு மாடு கோழி வளர்ப்பு ஊக்குவிப்புகள் என்பன வழங்கப் பட வேண்டும்.

கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்ட முஸ்லிம்களின்  ஏனைய தேவைகள் பின்னர் விபரமாக தெரிவிக்கப் படும். இதற்கான ஒதுக்கீட்டை இம்முறை பட்ஜட்டிலும் கபினட் குழு கூட்டத்திலும் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள ஆவண செய்யப் பட்ல் வேண்டும்.

8 கருத்துரைகள்:

இன்னும் அடுத்த தேர்தலுக்கு 18 மாதம்தான் இருக்கு. அதற்கு இடையில் வெளியேறிய மக்கள் உள்ளே வரப்பாருங்கள். அதற்கு பிறகு உங்கள் திட்டங்களை Project form இல் தயாரித்து அமைச்சருக்கு கொடுங்கள்.

I hope Hon Minister Rishad Bathiudeen will do insa Allah !!! He is working hard , process is going on !!! Bro Jansin we noted your points Thanks

கட்டாயம் ஐயா செய்து கொடுப்பாரு. நாங்க கையை கட்டி வேடிக்கை பாப்போம்.

அப்பாடா இலங்கையின் தேசிய வருமானம் இதுக்கே போயிடும் போல.

ம்ம்.. அவரு எல்லாம் செஞ்சிட்டா, அடுத்த எலெக்‌ஷன் ல வேல இல்லம போயிடும்.. அதெல்லாம் கிழிக்க மாட்டாரு.

ஆனா.. அந்த @Anusath Chandrabal நீங்க கைய கட்டுங்க, இல்லாட்டி கௌட்டுக்க வெச்சிட்டு இருங்க.. நீங்க யாரு தம்பி, தள்ளி போய் விளயாடுங்க. உங்கட டமில் அரசியல்வாதிகள் பிச்சக்காரன்ட புண்ண போல சுரண்டிக்கே இருப்பானுகல், ஒன்டும் கிழிக்க மாட்டாக.

அரசாங்க பணத்தில் வடக்கில் வீடுகள் கட்டபட்டால், அவைகள் வடக்கின் தற்போதய இனவிகிசாரப்படி தான் பகிரப்படல் வேண்டும்

Ajan இலங்கையை சுடுகாடாக்கிய பயங்கரவாதிகளுக்கு எப்படி அரசாங்க பணத்தின் வீடுகள் காட்டிக்கொடுக்க முடியும்?

760ஏக்கர் காணி பூநகரி பள்ளிக்குடாவில் உள்ள காணியை உரியவர்களுக்கு வழங்கி மீள்குசெய்யப்படல்வேண்டும்.119 குடுப்பங்களினது வாகும்

Post a Comment