Header Ads



பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் என சஜித் விடாப்பிடி, ரணிலை பிரதமராக்கமாட்டேன் என மைத்திரி திட்டவட்டமாக பிரகடனம்


தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய பேச்சுக்களின் போதும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையிலேயே, பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதான கூறியுள்ளார்.

“இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை,

ஆனால் எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேகவின் கட்சியின் பிரதமர்  வேட்பாளராக இருக்கக் கூடும்.

எனினும், அதுபற்றி கட்சியின் செயற்குழு தான் முடிவு செய்யும்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. ஐக்கிய தேசிய கட்சியில் சஜித் மட்டுமா இருக்கிறான்?இன்னும் எத்தனையோ படித்த இளைஜனார்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் பிரதம மந்திரி பதவியை கொடுக்க வேண்டும் உதாரணமாக காலி மாவட்ட பாராளுமன்ற அங்கத்தவர் வைத்தியர் Budikka Pathirinna இவர் நன்கு படித்தவர்.

    ReplyDelete
  2. புத்திக மாத்தறை மாவட்டம், 2004 மாகாண சபை மூலம் அரசியல் நுழைந்த அவர் போதிய அரசியல் அனுபவம் அற்றவர்.

    ReplyDelete
  3. எனக்கு தான் பிரதமர் பதவி வேண்டும் என்று ரணிலும் சொல்கிறார். அப்போ மக்கள் கதி அதோகதிதான்.

    ReplyDelete
  4. Ignore Ranil and Sajith and hand it over to other qualified person.
    Mr. Karu...Mr. Disanayaka.....

    ReplyDelete
  5. fayas brother>அரசியலுக்கு 5 அல்லது 10 வருட அனுபவம் நல்ல போதும்.சஜித் ஒரு தைரியமற்றதும் மற்றும் சரியான கல்விதரமற்றவனும் அவரையும் பிரதமராக வருவது தட்காலத்துக்கு பொருந்தாது.ஐரோப்பாவில் எப்போதும் 5 அல்லது 10 வருட அரசியல் அனுபாவமுள்ளவர் தான் மந்திரியோ அல்லது ஜனாதிபதி தலைமையதுவோமோ தாங்குவார் பிறகு ஜனாதிபதியானதும் அல்லது பிரதமரானதும் 2 முறைக்கு பின்னர் வீடு திரும்புவார்.

    ReplyDelete
  6. எவனுமே நாட்டையும் மக்களையும் பற்றி கவலையடையவில்லை அவன் அவனுடய ஈகோவைமட்டும்தான் கவனம் செழுத்துகின்றான்கள்
    *ரனில் கட்சியின் தலைமத்துவத்தை மாற்றவில்லை என்றால் இராஜபக்ஷ் குடும்பத்தினர் வரும் தேர்தலில் வெற்றிபெருவது எழுதி!

    ReplyDelete

Powered by Blogger.