Header Ads



தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக MM மொஹமட் நியமனம் - இப்பதவிக்குத் தெரிவான முதல் முஸ்லிம்


தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக நியமனம் செய்யப்பட்ட அஷ்ஷெய்க் மொஹமட் (நளீமி) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

59 வயதுடைய மொஹமட்டுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.

அத்­த­ன­கல தொகு­தியைச் சேர்ந்த கஹட்­டோ­விட்­டவைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட எம்.எம்.முஹம்மத் தனது ஆரம்­பக்­கல்­வியை கஹட்­டோ­விட்ட அல் பத்­ரியா மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். பின்பு பேரு­வளை ஜாமிஆ நளீ­மியா கலா­பீ­டத்தில் உயர்­கல்­வியை மேற்­கொண்ட அவர் அங்கு 7 வரு­டங்கள் கல்வி கற்று தேறி­யதன் பின்பு அக்­கா­ல­சா­லை­யிலே விரி­வு­ரை­யா­ள­ராகப் பணி­யாற்­றினார்.

பின்பு அவர் அர­சாங்க சேவையில் பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ராக நிய­மனம் பெற்று 5 ஆண்­டுகள் பணி­யாற்­றினார். இவர் பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம் மற்றும் ஜாமிஆ நளீ­மியா கலா­பீடம் என்­ப­ன­வற்றின் பட்­ட­தா­ரி­யு­மாவார். பொது முகா­மைத்­துவ விசேட கற்கை நெறி­யி­னையும் பூர்த்தி செய்­துள்ளார்.

இலங்கை நிர்­வாக சேவை திறந்த போட்டிப் பரீட்­சையில் 1991 ஆம் ஆண்டு 19 ஆம் திகதி சித்­தி­ய­டைந்த மொஹமட் 1992 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை மொன­ரா­கலை மாவட்­டத்தில் உத­வித்­தேர்தல் ஆணை­யா­ள­ராக நிய­மனம் பெற்றார். பின்பு 1996 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2003 டிசம்பர் மாதம் வரை பதுளை மாவட்­டத்தின் உதவித் தேர்தல் ஆணை­யா­ள­ரா­கவும், 2004 ஆம் ஆண்டு முதல் 2007 நவம்பர் மாதம் வரை கம்­பஹா மாவட்­டத்தின் உத­வித்­தேர்தல் ஆணை­யா­ள­ரா­கவும் பதவி வகித்தார்.

இதே­வேளை, 2007 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2010 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி வரை கம்­பஹா மாவட்­டத்தின் பிர­தித்­தேர்தல் ஆணை­யா­ள­ராக பதவி உயர்வு பெற்று கட­மை­யாற்­றினார். 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் தேர்­தல்கள் திணைக்­க­ளத்தின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் இணைந்து கொண்ட அவர் 2014 ஆம் ஆண்டு வரை பிரதி தேர்தல் ஆணை­யா­ள­ராக (நிர்­வாகம்) பதவி வகித்தார்.

2014 ஆம் ஆண்டு முதல் தேர்தல் திணைக்­க­ளத்தின் மேல­திகதேர்தல் ஆணை­யா­ள­ராக கட­மை­யாற்­றி வந்த எம்.எம்.முஹம்மத் தேர்தல் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாய­க­மாக இன்று முதல் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் தனது புதிய பத­வி­யினை நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பொறுப்­பேற்றுக் கொண்டார். நீண்­ட­காலம் தேர்தல் திணைக்களத்தில் பல்வேறு பதவிகளை வகித்த முஹம்மத் அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமனம் பெற்றுள்ளமையானது முஸ்லிம் சமூகத்தை பெருமையடையச் செய்துள்ளது.

இப்பதவிக்குத் தெரிவான முதல் முஸ்லிம் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


4 comments:

  1. இது போன்ற உயர்பதவிகள் முஸ்லிம்களுக்கு வழங்குவது மிகவும் அருமை. கடந்த காலங்களில் பதவி உயர்வு வழங்க தகைமையும் அனுபவமும் உள்ளவர்கள் ஒன்றோ புலமைப்பரிசில்கள் கொடுத்து வௌிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர் அல்லது வேறு பதவிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தவிர அவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படவில்லை.அந்த வகையில் எங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய முஹம்மத் அவர்களுக்குக்கிடைத்த இந்த வாய்ப்பை நாம் பாராட்டுவதோடு மென்மேலும் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட அவருக்கு அல்லாஹ் வழங்கிய ஒரு அரும்வாய்ப்பாகவே நாம் கருதுகின்றோம். அவர் நிர்வாக விடயங்களில் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்வதாக அதிகாரிகளுக்கிடையில் மரியாதையும் கௌரவமும் இருப்பதை நாம் அறிவோம். தொடர்ந்தும் ஒரு உண்மை முஸ்லிமாகவும் தாஇஆகவும், மிகச்சிறந்த நிர்வாகியாகவும் அவருடைய பதவியைத் தொடர எங்கள் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் எப்போதும் உண்டு.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் முஹம்மத் SIR அவர்களுக்கு .
    இப்படிக்கு
    அவரின் மாணவன் ..

    ReplyDelete

Powered by Blogger.