Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு, மாபெரும் அநீதி - ஆச்சரியப்பட்ட பிரான்ஸ் தூதரக அதிகாரி (படம்)


யாழ் முஸ்லிம்களின் வீட்டுதவிக்கு போடப்படும் தடைகள் குறித்து பிரான்ஸ் தூதரகத்துடன் கலந்துரையாடல்

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த  பின்னர்  2000 இக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள்  யாழ் சென்று மீளக் குடியேறுவதற்கான பதிவுகளை யாழ் பிரதேச செயலகம் மற்றும் யாழ் கச்சேரியின் மீள்குடியேற்ற அதிகாரிகளுடன் மேற்கொண்டிருந்தனர். இன்நிலையில்  2015 ஆம் ஆண்டு எந்த ஒரு வீடும் மாவட்ட செயலகத்தினால் வழங்கப் படாமல்  நீண்ட கால இடம்பெயர்வை இனச்சுத்திகரிப்பாக சந்தித்திருந்த யாழ் முஸ்ளிம்களுக்கு பொருந்தாத புதிய  நிபந்தனைகளை மேற்படி அதிகாரிகள் விதித்திருந்தார்கள். அத்துடன் ஐந்து வருடங்கள் எந்த ஒரு வீட்டுத் திட்டமும் இம்மக்களுக்கு வழங்கப் படவில்லை. பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதப் போராட்டம் என்பவற்றுக்குப் பின்னர் 200 வீடுகளுக்கான உதவிகளே  இது வரை வழங்கப் பட்டுள்ளது.  

போதாக் குறைக்கு 2016 ஆகஸ்ல் இருபதாம் திகதி  யாழ் கச்சேரியால் மீண்டும் ஒரு பதிவு மேற்கொள்ளப் பட்டது.  அந்த நிகழ்வுகளில் 3100 குடும்பங்கள் வீடமைப்பு உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதுவரை 200 வீடுகளே வழங்கப் பட்டுள்ளன. 

வீடமைப்புத் திட்டம் முஸ்லிம்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளதாகவும் வேண்டுமென்றே வீடமைப்புக்கான உதவி இழுத்தடிக்கப் படுவதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. 

எனவே பாதிக்கப் பட்ட நீண்ட கால இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப் பட்ட யாழ் முஸ்லிம்களுக்கு நிபந்தனை இன்றி வீடமைப்புதவி மற்றும் வீட்டுத் திருத்த உதவி என்பன வழங்க பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப் பட்டது. 

மேலும் 2017 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்துக்கான வடக்குச் செயலணியால் யாழ் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப் பட்ட  200 வீடுகளை அமைப்பதற்கான 160 மில்லியன் ரூபாய்கள் பயன்படுத்தப் படாமல் யாழ் அதிகாரிகளால்  திருப்பியனுப்பப் பட்டது என்பதை அறிந்த அதிகாரி ஆச்சரியமடைந்தார்.
  
26.11.2018 அன்று பிரான்ஸ் தூதரகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரான்ஸ் தூதரகம் சார்பாக   அதிகாரி மெலீனா குவிராஸும் யாழ் கிளிநொச்சி  இடம்பெயர்ந்தோருக்கான புத்தளம் வாழ் சிவில் அமைப்பு  சார்பாக தலைவர் அப்துல் மலீக், செயலாளர் ஹஸன் பைரூஸ், உறுப்பினர் நிலாம் ஆகியோருடன் பலர் கலந்து கொண்டனர். 

தகவல்: ஹஸன் பைரூஸ்

2 comments:

  1. மிக முக்கியமான அணுகுமுறை வளற்சி. மனசார வாழ்த்துகிறேன். பாதிக்கப் பட்ட யாழ் முஸ்லிம் மக்கள் சர்வதேச சமூகத்துடனான தங்கள் தொடர்புகளை புத்திஜீவிகளை இணைத்து அமைப்பு ரீதியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 1990ல் நான் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பிரச்சினைய இதுபோல சர்வதேச மயபடுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டபோது முஸ்லிம்களை குழப்புவதாகக் கூறி மட்டக்களப்பில்வைத்து கைதுசெய்து மண்வெட்டி சகிதம் கிரான்சுடலைக்கு எடுத்துச் செல்லப்பட்டேன்.

    ReplyDelete
  2. இதுஒரு பக்க நியாயம் மட்டுமே

    ReplyDelete

Powered by Blogger.