Header Ads



இன்றைய சிங்களவர்களை, இலங்கைக்கு கொண்டுவந்த அன்றைய முஸ்லிம்கள்

இலங்கை தேசத்தின் மதிப்பிலும், பண்பாட்டிலும் அதன் இனங்களும் ,கலாசார பாரம்பரியங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன, அந்தவகையில் இலங்கையின் பெரும்பான்மை இனமாக சிங்களவர்கள் இருந்தாலும் அவர்களிடம் " குலய" என்ற சாதி முறை செல்வாக்குச் செலுத்துவதுடன் ,அதனை அவர்கள் தமது பாரம்பரிய அடையாளமாகவும் கொண்டுள்ளனர், அவ்வாறான அடையாளத்திற்கு உதவி புரிந்த முஸ்லிம் முன்னோர் பற்றிய பதிவே இதுவாகும், 

#அறிமுகம்,

பேருவளைப் பிரதேசத்தின், களு கங்கையைச் சுற்றி உள்ள "களுமோதர" பிரதேசத்தின் வளர்ச்சி, பண்பாடு, வாழ்வியல் ,பனசல, பிக்குகளின் நடைமுறை என்பதில் "சலாகம" என்ற குலத்தினரின் பங்கு மிக அதிகமாகும், இவர்கள் இன்று நாட்டின் பல பாகங்களில் பரவி வாழ்ந்தாலும்,  வரலாற்றில் இத் தேசத்திற்கான இவர்களின்  பங்கும் அதிகமாகும், 

#தோற்றமும் தொடர்பும் 

"சலாகம" ,குலத்தினர் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பிராமணர்களில் இருந்து தோற்றம் பெற்றவர்களாகும், இவர்களின் வரலாற்றுடன் ,முஸ்லிம்கள் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள் மட்டுமல்ல இவர்கள் இலங்கைக்கு வரக் காரணமே அன்றைய முஸ்லிம்களாகும், 

#வரலாறு..

மில்லவத்தே மைத்திரி ஹிமி எழுதிய "..... களுமோதர சைதிகாசிக பசுவிம" என்ற நூலின்படி, இலங்கையின் குர்ணாகல பிரதேசத்தை "வத்ஹிமி விஜயபாஹூ, ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது, அவனது அரச சபை பட்டமளிப்ப விழாவிற்கு பிராமணர்களைக்கொண்டு சிறப்பிக்கத் தீர்மானித்தான்,அவ்வேளையில் நிகழ்வுக்கான பிராமணர்களை எங்கிருந்து, எவ்வாறு அழைத்து வருவது என்பதில் அரச சபையும் ,மக்ககளும் செய்வதறியாது இருந்த வேளையில் அப் பாரிய பணியை இங்கு கடல் வழி வியாபாரத்தில் ஈடுபட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் பொறுப்பேற்றனர், 

#முக்கியத்துவம்,

அரச விழாவுக்கான காலம் நெருங்கிய வேளையில் அதற்கான பிராமணர்களை இந்தியாவின் கேரளப் பிரதேசத்தில் இருந்து கப்பல் மூலம் முஸ்லிம்கள் அழைத்து வந்திருந்தனர்,இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னனும் மக்களும் ,குறித்த ஏழு பிராமணர்களையும், முஸ்லிம் வர்த்தகர்களையும், பேருவளைக் கடற்கரையில் இருந்து அரண்மணை வரை கம்பளம் விரித்து வரவேற்றதாக வாய்வழி வரலாறுகளும், நம்பிக்கைகளும் குறிப்பிடுகின்றன,  இன்னும் குறித்த அரச நிகழ்வை  #உதுமா #உடையார் #லெப்பை என்பவரின் தலைமையில் அரசன் நடாத்தியதாகவும், அதன் பின்னர் குறித்த பிராமணர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அரசன் பேருவளைப் பிரதேசத்தில் காணிகள் வழங்கியதாகவும், குறித்த பிராமணர்களில் இருந்து தோற்றம் பெற்றதே இன்றைய " சலாகம" குலத்தினராகும், அன்றைய முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து இவர்களை அழைத்து வராவிடின் இன்றைய " சலாகம குல சிங்களவர்கள் உருவாகி இருக்கமாட்டார்கள், 

#யாரிந்த #முஸ்லிம்கள்,??

குறித்த, காலப்பகுதியில் இலங்கையின் வியாபாரமும், அரசனுக்கும், மக்களுக்கும் தேவையான அத்தியவசிய மட்டுமல்ல' ஆடம்பர உதவிகளையும் உலகின் பல பிரதேசங்களில் இருந்தும் முஸ்லிம் வர்த்தகர்கள் கொண்டு வந்து உதவி புரிந்தார்கள், இந்தவகையில் விஜயபாகுவின் பட்டமளிப்புக்கான பிராமணர்களைக் கொண்டு வந்தவர்களாக,  "கப்பல் உடையார், செலஷ்டன் லெப்பே, உதுமா லெப்பே, அகமது லெப்பே, காதிருல் லெப்பே,.. போன்றோரின் பெயர்கள் இன்றும் சிங்கள வரலாற்றில் நினைவு கூரப்படுகின்றன,  இன்னும் இந்தக் கடல்வழி வியாபார ஆதாரங்களை தொல்லியல் துறையினரும் நிறுவுகின்றனர், 

#சலாகம, #குலத்தவர்கள் 

இந்தி பிராமணர்களில் இருந்து பின்னர்  சிங்கள குலமாக மாறிய இவர்கள் இலங்கை வரலாற்றில் பல சாதனைகளைப் புரிந்தவர்களையும் உள்ளடக்கி உள்ளனர், இவர்களது பெயர்களில், காலிங்க, முனி, வீரவர்த்தன, நெத்தி, அகம்பொடி, போன்ற துணைப்பெயர்களும் உள்ளடங்கி இருக்கும்,  இலங்கையின் நிதிபதிகளாக ,லலித்த ராஜபக்‌ஷ, டியுடர் ,  முதலியார் சம்சன் ராஜபக்‌ஷ, ஸ்ரீமத் சிறில் சொய்ஷா,மற்றும்  அமரபுர நிகாயாவைத்தோற்றுவித்தவரும், காலனித்துவ காலத்தில் பிரித்தானிய கிறிஸ்த்தவத்துக்கு எதிராக வாதிட்டு பிரபலமானவழுமான மிகட்டுவத்தே குணாணந்த ஹிமி, போன்றோரும்,..மட்டுமல்ல கீழே என்னோடு புகைப்படத்தில் உள்ள எனது நண்பர்  Sumedha Weerawardhana வும் இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களே, இக்குலத்தினரின் இத்தேசத்திற்கான பங்களிப்பு அதிகமானதாகும், 

#எமதுபெருமையும் #கடமையும்

இலங்கை தேசத்தில் முஸ்லிம்முன்னோர் வெறுவனே வியாபாரத்திற்காக மட்டும் வரவில்லை மாறாக இந்நாட்டின், ஆட்சியில், ,பண்பாட்டில், இதன் பொதுக்கலாசாரத்தில்  மிகவும் உதவி புரிந்திருக்கின்றார்கள், அந்த வகையில் நாமும்  அவற்றைத் தொடர்வதும், இவ்வாறான வரலாற்றுத் தொடர்புகளை  எமது எதிர்காலச் சந்த்தியினருக்கு  எத்தி வைப்பதுமே எமது இன்றைய கட்டாய கடமையாகும், ". நாம் எமது வரலாற்றுப் பொக்கிசங்களை இயக்கவாத இறுமாப்பில்  நாமே அழித்து "#கலாசாரத் #தற்கொலை"( Cultural Suicide)  செய்து கொண்டிருக்கும்  வேளைகளில் சிங்கள மக்கள் தமது வரலாற்றின் ஊடாக எமது வரலாற்றையும், தொடர்புகளையும், வாய்வழிக்கதைகளாகவும், சமூக நம்பிக்கைகளாகவும்  இன்றுவரை பாதுகாத்து வருவதைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்,

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER 
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA


No comments

Powered by Blogger.