November 27, 2018

சிங்களவர்களும், தமிழர்களும் முஸ்லிம்களை சந்தேகிக்கிறார்கள் - ஹிஸ்­புல்லாஹ் வேதனை

முஸ்லிம் சமூ­கத்தின் மீது பெரும்­பான்மை சமூ­கமும், தமிழ் சமூ­கமும் பாரிய சந்­தேகம் கொண்­டுள்­ளன. இந்தச் சந்­தே­கத்தை இல்­லாமல் செய்­வ­தற்கு நாம் திட்­டங்கள் வகுக்க வேண்டும். முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஊடாக இதற்­கென திட்­டங்கள் வகுத்து செயற்­படும் என நகர திட்­ட­மிடல், நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

நேற்று கொழும்பு மரு­தானை ஸாஹிரா கல்­லூரி கபூர் மண்­ட­பத்தில் நடை­பெற்ற தேசிய மீலாத் விழா வைப­வத்­துக்கு தலைமை வகித்து உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

முஸ்­லிம்­க­ளுக்கும் ஏனைய சிங்­கள, தமிழ் சமூ­கங்­க­ளுக்கும் இடை­யி­லான பிரச்­சினைகளைத் தீர்த்து ஒற்­று­மை­யாக ஒன்­று­பட்டு வாழ்­வ­தற்­கான திட்­டங்­களை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு வகுத்து செயற்­ப­ட­வேண்டும். சிங்­கள, தமிழ் மக்கள் ஏன் முஸ்­லிம்கள் மீது சந்­தேகம் கொண்­டுள்­ளார்கள் என்­பதை கண்­ட­றிந்து அச்­சந்­தே­கங்கள் தவ­றா­னவை என்று நிரூ­பிக்க வேண்டும்.

முஸ்லிம் கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஊடாக அர­சாங்க அனு­ச­ர­ணை­யுடன் நாட்டில் தேசிய மீலாத் தின விழா நடத்­தப்­ப­டு­கின்­றது. அவ்­வி­ழா­வுடன் கூடிய அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதே­வேளை, முஸ்­லிம்­களின் வர­லாறும் எழு­தப்­ப­டு­கின்­றது. தேசிய மீலாத் விழா நடை­பெறும் பிர­தே­ச முஸ்­லிம்­களின் வர­லாறு நூலு­ருப்­பெ­று­கி­றது.

மியன்மார் போன்ற நாடு­களில் முஸ்­லிம்­களின் வர­லா­றுகள் மறைக்­கப்­பட்­ட­த­னா­லேயே அங்கு முஸ்­லிம்கள் பல பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். அதனால் எமது நாட்டின் முஸ்­லிம்­களின் வர­லாறு எழு­தப்­பட்டு பாது­காக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. இந்த அர­சாங்கம் முஸ்­லிம்­களை கௌர­வித்து மீலாத் விழா­வினை ஓர் அங்­கீ­கா­ரத்­துடன் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­மையை நாம் பாராட்ட வேண்டும்.

இந்த ஏற்­பா­டு­களை நாம் மேலும் பலப்­ப­டுத்த வேண்டும். எதிர்­வரும் காலத்தில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சையும் திணைக்­க­ளத்­தையும் மேலும் பலப்­ப­டுத்த வேண்டும்.

முஸ்லிம் சமூகம் இன்று பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கும் சவால்­க­ளுக்கும் முகம் கொடுத்­துள்­ளது. இந்­த­நி­லை­மை­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மேலும் பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆள­ணிகள் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். அர­சியல் தலை­மைத்­து­வங்கள் இதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­துடன் உல­மாக்­களும் புத்­தி­ஜீ­வி­களும் தஃவா அமைப்­பு­களும் தங்­க­ளது ஆத­ரவை வழங்க வேண்டும்.

ஹஜ் விவ­காரம் மற்றும் பள்­ளி­வா­சல்­களின் விவ­காரம் என்­ப­வற்­றுடன் மாத்­தி­ர­மல்­லாது ஏனைய விட­யங்­க­ளிலும் திணைக்­க­ளத்தை பலப்­ப­டுத்த வேண்டும். நபிகள் நாயகம் அவர்­களின் வாழ்க்கை முறை, அவர்­க­ளது போத­னைகள், அவர்கள் ஏனைய சமூ­கங்­க­ளுடன் இணைந்து வாழ்ந்த முறை என்­ப­வற்றை நவீன தொடர்­பாடல் சாத­னங்கள் மூலம் ஏனைய சமூ­கத்­திற்கு முன்­வைக்க வேண்டும். இதன்­மூலம் சிறு­பான்மை சமூ­க­மான எங்கள் மீது பொரும்­பான்மை சமூகம் கொண்­டுள்ள சந்­தே­கங்­களை களைய முடியும்.

முஸ்­லிம்கள் பற்றி பெரும்­பான்மை சமூ­கங்கள் கொண்­டுள்ள தப்­ப­பிப்­பி­ரா­யங்­களை களை­வ­தற்­கான முயற்­சி­களை முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மேற்­கொள்ள வேண்டும்.

நாம் கல்விப் பிரச்­சினை, காணிப்­பி­ரச்­சினை, பள்­ளி­வாசல் பிரச்­சினை மற்றும் மார்க்கப் பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை எதிர்­நோக்­கு­கின்றோம். எமது சட்­டங்­களில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்ற கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக வக்பு சட்­டத்தில் மாற்றம், ஹஜ்­ஜுக்கு என தனி­யா­ன­தொரு சட்டம், முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்தம் என பல கோரிக்­கை­களை சமூகம் முன்­வைத்­துள்­ளது.

முன்­னோர்கள் எமக்கு உரு­வாக்கித் தந்த சட்­டங்கள் எமது இன்றைய தேவை­க­ளுக்கு ஏற்ப மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். ஆனால் திருத்­தங்கள் அல்­குர்ஆன், ஹதீ­ஸுக்கு இணங்­கி­ய­தா­கவே மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். அதற்கு முர­ணாக சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட மாட்­டாது.

சில வல்­ல­ர­சுகள் மற்றும் சிலரின் தேவை­க­ளுக்­கேற்ப சட்­டத்தில் மாற்­றத்தை செய்யும் அதி­காரம் அமைச்­சுக்கு கிடை­யாது. திணைக்­க­ளத்­திற்கும் கிடை­யாது. உல­மாக்­க­ளுக்கும் கிடை­யாது. அல்­குர்ஆன், ஹதீ­ஸுக்கு மாற்றம் இல்­லா­ம­லேயே திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும்.

போதை­வஸ்து பாவனை முஸ்­லிம்கள் மத்­தியில் அதி­க­ரித்­துள்­ளது. இந்­தக்­க­லா­சா­ரத்தை மாற்ற வேண்டும். இது தொடர்­பான விழிப்­பு­ணர்வு நிகழ்­வு­களை பள்­ளி­வா­சல்கள் நடாத்­த­வேண்டும். கொழும்பில் முஸ்­லிம்­களின் கல்­வி­நிலை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. நாம் ஆர்வம் குறைந்­த­வர்­க­ளாக இருக்­கிறோம். கொழும்பில் முஸ்லிம் மாண­வர்­க­ளுக்கு பாட­சா­லை­களில் வாய்ப்­பு­களை அதி­க­ரிக்க வேண்டும். இல்­லையேல் புதிய பாட­சா­லை­களை உரு­வாக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கு­கின்ற பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­நாட்டு வெளி­நாட்டு உத­வி­க­ளுடன் தீர்­வு­களைக் காணவேண்டும். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒரு சமூக நிலையமாக மாறவேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நிலையமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.
-Vidivelli

1 கருத்துரைகள்:

It Highly disappointing and contradicting statement from Minister HISBULLAH.

ONE PLACE he is saying...

" We should bring changes only as per Quran and Hadees."

ANOTHER PLACE he is encouraging..

"the celebration of Meelad Day and consider this BIDA as an
important historical benefit for Muslims"

Dear Brother Hisbullah,, Know what you are talking.....

If there is good in this BIDA of MEELAD-NABI.. Answer me
following questions.

1. Do you think this MEELAD can bring Good to Muslims ? if YES

2. Then Did Prophat Muhammed (sal) hide this good Ibaada to us?
I am sure you will not say YES.
3. IF so Did not Allah inform this good ibaada to Muhammed? but
Allah informed to those Fatimeeya Rulers in Egypt, who
invented?
I am sure you will not say YES.
4. Do you agree with what Muhammed (sal) said that " Whoever
introduce new matters in our Deen, it will be rejected and
will be in Hell fire? If YES
HOW come still you support this Meelad BIDA...

5. Do you know Allah said in QURAN " Today I COMPLETED you DEEN
and Accepted ISLAM as your DEEN? if YES.
How come you support this addition of MEELAD to say our DEEN
is not completed still we can add more to it?

6. Do you know MEELAD was not part of ISLAM at the time Muhammed
(sal) or his companions? If YES
Why are you still supporting this BIDA ? for gain Votes ?

FEAR ALLAH,

There is NO good that the history of this BIDA (meelad) can bring to Muslim of this land. RATHER,,, Leaving this BIDA can bring the love of Allah and his Rasool, which can bring good for us in this world and hereafter.

We will be witness over YOU all ( You, ACJU mawlavees and muslim leaders who support this MEELAD-BIDA) ON THE DAY OF JUDGMENT..if you are still doing so for the sake you own understanding and self-political gains in this land FEAR ALLAH.

I wish we all will follow the way of our salafus saliheens to succeed in both worlds.

Allah knows best

Post a comment