September 10, 2018

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில், பௌசியின் புதிய யோசனை

முஸ்லிம் சமூகம், முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்த சிபா­ரிசு அறிக்­கையை விவா­தித்­துக்­கொண்டும் விமர்­சித்­துக்­கொண்டும் இருப்­பதால் தீர்­வுகள் எதுவும் கிட்­டப்­போ­வ­தில்லை. இந்­நி­லைமை ஏனைய சமூ­கங்­களின் மத்­தியில் சந்­தே­கங்­களை உரு­வாக்­கி­விடும். அதனால் எமது நாட்டில் தற்­போது அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம்  திருத்­தப்­ப­டாது தொடர்ந்தும் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரி­வித்தார்.

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

“முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட முஸ்லிம் தனியார் சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­கான குழு தனது அறிக்­கையை நீதி­ய­மைச்­ச­ரிடம் சமர்ப்­பித்­துள்­ளது. குழு இரண்­டாகப் பிள­வு­பட்டு சிபா­ரி­சு­களை முன்­வைத்­துள்­ளது.

இந்­நி­லையில் இச்­சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் பல்­வேறு தரப்­பினர் மாநா­டு­களை நடத்தி வரு­கின்­றனர். சிபா­ரி­சு­க­ளுக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் கூட்­டங்கள் நடை­பெ­று­கின்­றன. ஊட­கங்­க­ளிலும் கருத்­துகள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான நிலைமை ஏனைய சமூ­கங்­களை முஸ்­லிம்கள் மீது சந்­தேகம் கொள்ள வைத்­துள்­ளது. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இவ்­வி­வ­காரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையை விரைவில் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர். சமூகம் முஸ்லிம் தனியார் சட்ட விவ­கா­ரத்தில் பிள­வு­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­பட முடி­யாது.

எமது நாட்டில் தற்­போது அமு­லி­லுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் எமது முன்­னோர்கள் வகுத்து தந்த சட்­ட­மாகும். இச்­சட்­டத்தில் குறை­பா­டுகள் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. எனவே சட்டம் திருத்­தப்­ப­டாது தொடர்ந்தும் அமுல் நடத்­தப்­பட வேண்டும். இத்­தீர்­மா­னத்தை அனை­வரும் ஒன்­றி­ணைந்து மேற்­கொள்­வதே சிறந்­தது என நான் கரு­து­கிறேன்.

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபா­ரிசு குழு 9 வரு­டங்­க­ளாக ஆராய்ந்து மேற்கொண்டுள்ள தீர்மானங்களில் சிலவற்றை சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்நிலையில் தொடர்ந்தும் இது பற்றி விவாதித்துக் கொண்டிருப்பதில் பலனேற்படப் போவதில்லை” என்றார்.

-ARA.Fareel-

10 கருத்துரைகள்:

What do you know about Islam?...
Do you support under age marriage as these clerics say ?
Do you want to Muslim women get good education and good jobs ?
Do you want to see progress in Muslim community ?
Do you want send them home works ?
Reform is a must

Great view, reform is not necessary. sharia law is important for us.

It is not fair to implement the same system. It is better to talk to the affected party before implementing any system. Specially women who are abandoned by their husbands and women actives.

This comment has been removed by the author.

Both groups must need ACJUs approval

Excellent and great decision. No need any correction to current MMDA as it has no any issue with our community.

M. Aliyar ..will give your 12 years old to marry someone now in this modern world ..
Will Minister Fouzi do it ..?
Will Mufiti do it .
If Sri Lanka government reform it do we have power to change it .

No..
Why do not think about it

A Ab, Don’t you know that Abubacker (Ral) gave his daughter at very early age to Rasulullah. If 1st Khalifa did, why not me. That is the Islam in which no modern or classical life. Islam is forever and it does not change with time, place or anything else. It will last forever without any change. Nobody can change or modify it as it is already defined and completed. Please note that “Setting an age limit against the Islam / sharia” is not correct. If you feel and want to stop early marriage you should educated or do awareness program among our society / community but not by imposing the law. If a law is imposed, our community will continue it without knowing / caring the new law. At the end, we will see our community in guilty for breaching the law. If the early marriage is a severe problem in our community, let’s educate our people. No need to amend the act / law.

Post a Comment