Header Ads



தமிழர் - முஸ்லிம்களின் தற்போதைய நிலை குறித்து, மட்டக்களப்பிலிருந்து ஜெயபாலன்...!

மட்டக்களப்பு அறிக்கை.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் இளைஞர்களை சந்தித்து பேசி திரும்பியுள்ளேன். போருக்குப் பிந்திய நிலமைகள் வேகமாக மாறி வருகிறது. இரு பக்கத்துக் கனவுகளையும் சாதனைகளையும் கனலும் பலவிடயங்களையும் எழுத வேணும். ஆனாலும் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள தயக்கமாக உள்ளது. மிகவும் கவனமாக எடிற் பண்ணியே எழுதுகிறேன்.
.
போருக்குப் பிந்திய சூழலையை மாறி வரும் புதிய இன அரசியல் சமன்பாடுகளை உருவாகும் புதிய சமூக பொருளாதார வாய்ப்புகளை தமிழரும் முஸ்லிம்களும் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. சமாதனத்தின் புதிய சமன்பாடுகளைப் புரிந்துகொண்டிருந்தால் இப்பவே ஒன்றுபட்டால் உண்டு பெரு வாழ்வு என கைகோர்த்து நெடுந்தூரம் முன் சென்றிருபார்கள். 
.
தமிழர் சிங்களவருக்கிடையிலான உறவுகளும் மற்றும் முஸ்லிம்கள் சிங்களவருக்கு இடையிலான உறவுகளும் போட்டி போட்டுக்கொண்டு மேம்பட்டு வருகிறது. இது மகிழ்ச்சியான விடமே. ஆனால் கவலை தரும் விதத்தில் தமிழ் முஸ்லிம் உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படவில்லை. சில அம்சங்களில் மேலும் சீர்குலைந்து வருகிறது. போருக்குப்பின்னரான தமிழ் முஸ்லிம் உறவாடல் மந்த நிலையில் இருப்பது அதிற்ச்சி அளிக்கிறது. 
.
முஸ்லிம் இளைஞர்கள் காணிப் பிரச்சினைகள் பற்றியும் தமிழ் இளைஞர்கள் கலியாணப் பிரச்சினைகள் பற்றியும் அச்சம் தரும் வகையில் கொதிப்போடு பேசுகிறார்கள். 
.
மக்கள் தலைவர்கள் அமர்ந்து பேசுவதில் போதிய அக்கறை காட்டவில்லை. அதனால் அமைச்சர் அதிகாரம் உள்ள பக்கத்து மக்கள் அமைச்சர்களின் அதிகாரத்தையும் அமைச்சர் அதிகாரமில்லாத பகுதி மக்கள் பேரின மதகுருமார்களின் அதிகாரத்தையும் தஞ்சமாக கருதுகிற சூழல் கவலைதரும் வகையில் வளர்ச்சி பெற்று வருகிறது. 
இளைஞர்களாவது இருந்து பேசுவார்கள் புதிய கிழக்கின் சூரியன் உதிப்பான் என்கிற நம்பிக்கை கவிதைகளில் வாழ்கிறது. கவிதைகளுக்கு வெளியே வெளியே இனித்தான் உருவாக வேண்டும். 
.
நாளை கிழக்கின் மண்ணல்ல தமிழ் முஸ்லிம் மக்களின் கனவுகளான எழுவானமே சிவக்க வேண்டும். .

2 comments:

  1. இலங்கை முஸ்லிம்கள் “அடிபடைவாதம் (வஹ்ஹாபிசம்)”, “தொப்பி பிரட்டும் கலாச்சாரம்” இரண்டிலிருந்தும் விடுபடாதவரை சிங்களவர்களோ, தமிழர்களோ இவர்களுடன் சேர்ந்து வாழுவது கடினம்.

    ஆனால், இந்த பிரச்சனை இங்கு மட்டுமல்ல உலகம் பூராவும் தான்.
    பௌத்தர்கள் (இலங்கை, மியன்மார், சீனா, ஜப்பான்)
    இந்துக்கள் (காஷ்மீர, குஜாராத்)
    தவிர, யூதர்கள், கிருஸ்தவர்கள் என எல்லோருடனும் பிரச்சனைகள் தான்.

    தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய தமிழர்கள் மட்டுமே உண்மையான முஸ்லிம்கள்.

    ReplyDelete
  2. உண்மையான முஸ்லிமைப் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள் என

    ReplyDelete

Powered by Blogger.