Header Ads



எர்துகானுடன் எஞ்சலா தொலைபேசியில் பேச்சு, துருக்கியின் பொருளாதார வலிமை ஜேர்மனிக்கு முக்கியம் என்கிறார்

ஜேர்மனியின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல், துருக்கி நாட்டுடனான உறவை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

துருக்கி நாடானது அமெரிக்காவுடனான பொருளாதார கொள்கையில் முரண்பட்டுள்ளது. இந்நிலையில், ஜேர்மனியின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல், துருக்கி ஜனாதிபதி எர்டோகனுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில், மேலும் இருநாட்டு இடையேயான உறவை மேம்படுத்துவது, சிரியாவில் நிலவும் பிரச்சனைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இருநாட்டு தலைவர்களும் ஜேர்மனி-துருக்கி இடையேயான பரஸ்பர உயர்மட்ட வருகை மற்றும் தொடர்புகள் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நிலைபாட்டை முன்னெடுத்தனர்.

இறுதியில், துருக்கியின் பொருளாதார வலிமை ஜேர்மனிக்கு முக்கியமானது என மெர்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் துருக்கியின் கருவூல, நிதி அமைச்சர் Berat Albayrak மற்றும் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் Peter Altmaier ஆகியோரின் சந்திப்புக்கு ஏஞ்சலா மெர்கலும், எர்டோகனும் உடன்பட்டனர்.

இந்நிலையில், எர்டோகன் வரும் செப்டம்பர் மாதம் 28, 29ஆம் திகதிகளில் ஜேர்மனிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 comment:

  1. அல்லாஹ்வை நம்பியோர் கைவிடப்படார், மனிதனை நம்பியோர் அந்த மனிதன் கைவிடப்படும்போது அல்லாஹ்விடம் மீண்டு விட வேண்டும், அல்லாஹ் இரக்கமுள்ளவன் ஆனால் ஆலாஹ்வை மறந்து மனிதனுக்காக செயல்படும் இந்த மனிதனை .......

    ReplyDelete

Powered by Blogger.