Header Ads



ஒரு காலத்தில் நாம், கண்டியை ஆண்ட பரம்பரை - கரீமா மரைக்கார்

அவர்கள் ஒருகாலத்தில் எம்மை ஆட்சி செய்தார்கள். இப்போது நாம் அவர்களை ஆட்சி புரிகின்றோம் என பிரித்தானியாவின் ஹெரோ சிட்டி நகர மேயரான கண்டியைச் சேர்ந்த திருமதி கரீமா மரிக்கார் தெரிவித்தார். (6.8.2018)

கண்டி மாநகர சபையால் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நன்றி தெரிவித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

நான் கண்டியில் பிரபலம் பெற்று விளங்கிய இரு தனவந்தர்களது குடும்ப வாரிசாகும். அதில் ஒருவர் சிங்கள மரைக்கார் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் எம்.ஏ.எஸ். மரைக்கார். மற்றவர் எனது பாட்டனான பிரபல வர்த்தகர் எம்.கே.எம். முத்தாலிப் ஆகியோர்களாகும். ஒரு காலத்தில் நாம் கண்டியை ஆண்ட பரம்பரை என்பது குறிப்பிடத்தக்கது. எனது பிரதான ஆயுதமாக எனது நேர்மையுள்ளது. எனது நேர்மையே என்னை இந்தளவுக்கு உயர்த்தி வைத்ததுள்ளது. என்னிடம் இனமத பேதங்கள் கிடையாது. 

எமது மூதாதையர்களது கடையை மெதமகநுவர பகுதியில் முதலாவதாக எரித்த பின்புதான் திகனை வன்முறை ஆரம்பமாகியது. சுர்வதேச நாடுகளுக்கு இது பற்றி அறிவிக்கும் படி பலர் என்னிடம் கேட்டுக்கொண்டனர். இருப்பினும்; நான் அதனை அப்படியே விட்டு விட்டேன். மேற்கொண்டு எதனையும் செய்யவில்லை. 

நான் ஹெரோ நகரின் இராணியாக இல்லை. அந்த நகரின் ஒரு சேவகியாகவே தொழிற்பட்டு வருகிறேன். நான் பதவி உயர்த்ப்பட இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம். நான் தமிழில சாதாரணமாகக் கதைத்தாலும் கடுஞ் சொற் பிரயோகங்களை மேற்கொள்ள முடியாது. ஆனால் சிங்களம், ஆங்கிலம் இவை கைவந்த கலையாகும். நூன் கண்டி பெண்கள் உயர் கல்லூரி மாணவியாகும். 

ஒருகாலத்தில் பிரித்ததானியர் எம்மை ஆட்சி செய்தனர். இன்று அவர்களைது நாட்டில் அவர்களை நாம் ஆட்சி செய்கிறோம். நான் மேயராக உள்ள நகரத்தில் இரண்டு இலட்சத்து நாற்பத்தெட்டாயிரம் மக்கள் உள்ளனர். அவர்களில் குஜாரத் மக்கள் அதிகமாக உள்ளனர். எட்டாயிரம் பேர் அளவில் தமிழர்களும் உள்ளனர் என்றும கூறினார். 

இவ்வைபவத்தில் பிரதி மேயர் இலாஹி ஆப்தீன் தெரிவித்ததாவது-

புpரித்தானியாவில் இலங்கையைப் போன்று குடும்ப கௌரவம் அல்லது பணபலம் போன்ற ஏதாவது ஒன்றைக் காட்டி அரசியல் செய்ய முடியாது. அங்கு திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும. அதனை கரீமா மரிக்கார் செய்து காட்டியுள்ளார். திறமை இருப்பின் நாம் செல்ல எதிர் பார்க்கும் இடத்திற்கு செல்ல முடியும். இவரது உயர்ச்சி கண்டிக்குப் பெருமை சேர்த்துள்ளது எனறார்.

குண்டி மாநகர சபையின் இவ்வைபவம் நடக்கும் மண்டபம் தேசிய தலைவர்கள் பலருக்கு கௌரவிப்பு வழங்கிய மண்டபமாகும் அதேபோல் தேசிய ரிதியில் சகல தலைவர்களுக்கும் பாராட்டு நடத்திய இடமாகும். அந்த வரிசையில் இன்று கரீமாவும் இடம் பிடித்துள்ளார். அவரும் ஒரு தேசிய அல்லது சர்வதேச தலைவராக வருவார் என்பதை அது கட்டியம் கூறுகிறது என்றார்.

முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்ததாவது-

200 வருடங்களுக்கு முன் பிரித்தானியர் கண்எயைக் கைப்பற்றினர். அன்று அவர்களது ஆட்சி இங்கு ஊண்றப்பட்டது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவருகிறது. ஆதன் ஒருகட்டம்தான் இப்போது எம்மவர்கள் அவர்களது நாட்டில் ஆட்சி பீடமேறியுள்ளர். அது கரீமா மரிக்கார் மூலம் ஆரம்பமாகியுள்ளது என்றார். 

5 comments:

  1. Dear madam your mother language Please

    ReplyDelete
  2. It is the democractic system that is truly practiced in Britain that provides the opportunity to anyone talented, irrespective of racial, religious or any differences; to rise upto higher positions in politics. There are several others from different countries who are in leading positions in politics.

    ReplyDelete


  3. கண்டி மாநகர சபையின் இவ்வைபவம் நடக்கும் மண்டபம் தேசிய தலைவர்கள் பலருக்கு கௌரவிப்பு வழங்கிய மண்டபமாகும் அதேபோல் தேசிய ரிதியில் சகல தலைவர்களுக்கும் பாராட்டு நடத்திய இடமாகும். அந்த வரிசையில் இன்று கரீமாவும் இடம் பிடித்துள்ளார். அவரும் ஒரு தேசிய அல்லது சர்வதேச தலைவராக வருவார் என்பதை அது கட்டியம் கூறுகிறது என்றார்.

    ReplyDelete


  4. கண்டி மாநகர சபையின் இவ்வைபவம் நடக்கும் மண்டபம் தேசிய தலைவர்கள் பலருக்கு கௌரவிப்பு வழங்கிய மண்டபமாகும்.

    ReplyDelete
  5. Dear Admin: please concern deeply the words of your article before you post it. here I found some word mistake in Tamil also correct the city name Kandy in Tamil (some dirty word here by one spelling mistake)

    ReplyDelete

Powered by Blogger.