May 27, 2018

சச்சிதானந்தம் என்ற, தமிழினத்தின் துரோகி


சாவகச்சேரியில் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னால் தூக்கிப் பிடித்துக் கொண்டு அதனை மையமாக வைத்து மறவன்புலவு சச்சிதானந்தம் முஸ்லிம் விரோதக் கருத்துக்களை வௌியிட்டு இனவாதம் கக்கியுள்ளார்.

அதன் உச்சகட்டமாக இலங்கை பௌத்தர்களும் சைவர்களும் வாழும் பூமி என்றும் முழங்கியுள்ள அவர், முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேச நடவடிக்கைகளுக்கு யாழ். நாகதீப விகாரை, பொதுபலசேனா போன்றவற்றின் ஆதரவு என்பவற்றையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

மறவன்புலவு சச்சிதானந்தத்தின் கடந்தகால வரலாற்றை எடுத்து ஆராய்ந்தால் அவர் என்றைக்கும் சாதித் திமிர் பிடித்த மனிதராகவே நடந்து கொண்டுள்ளார். தான் சார்ந்த தமிழ் இனத்துக்கே துரோகம் செய்தவர் அவர்.

அதேபோன்று அவரின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்தும், பௌத்தர்களுக்கு எதிராக அவர் கக்கியுள்ள இனவாதம் குறித்தும் நாங்கள் எடுத்துச் சொன்னால் சச்சிதானந்தத்துக்கு யாழ்ப்பாணத்தை விட்டே வௌியில் வர முடியாத நிலை சிங்களவர்களால் உருவாக்கப்படலாம். தலையில் சட்டியைக் கவிழ்த்துக் கொண்டு முகம் மறைத்து வாழவும் நேரிடலாம்.

இப்போது அவர் முஸ்லிம் விரோதப் போக்கை முன்னிறுத்து ஒருகாலத்தில் தன்னால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பௌத்த இனவாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு செயற்பட முனைகின்றார்.

சொந்த இனத்துக்கே துரோகம் செய்த சச்சிதானந்தம்

1967ம் ஆண்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டத்தின் போது சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொடுமை செய்தனர். இதன் போது அன்றைய உள்ளூராட்சி அமைச்சர் திருச் செல்வத்தின் செயலாளராக இருந்த மறவன்புலவு சச்சிதானந்தம் தனது அதிகாரத்தைக் கொண்டு சாதிவெறியர்களைப் பாதுகாப்பதில் முன்னின்றார்.

2000ம் ஆண்டில் சென்னையில் வைத்து இந்தியாவின் ரோ அதிகாரியொருவரும் பாஜக முக்கியஸ்தரும் பின்னாளில் இந்திய மாநிலமொன்றின் ஆளுனராகவும் கடமையாற்றிய சண்முகம் என்பவரும் மறவன்புலவு சச்சிதானந்தத்தை சந்திக்கின்றனர். அதன் பின்னர் அன்றைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் உடனும் சச்சிதானந்தம் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.இன்றைக்கும் இந்திய ரோ உளவுத்துறை ஒத்தாசையுடன் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் கவிஞர் காசி ஆனந்தனும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அதனையடுத்து இந்திய ரோ உளவுத்துறை அதிகாரிகள் துணி வியாபாரிகள் வேடத்தில் யாழ்ப்பாணம் மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து போனார்கள். தகவல்களை திரட்டினார்கள். அவ்வாறான தருணங்களில் விடுதலைப் புலிகளுடன் தனக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி ரோ உளவாளிகளுக்கு ஆபத்துக்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை சச்சிதானந்தம் ஒருங்கிணைத்தார். அதற்காக வாஜ்பாயுடனான சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு ரோவின் உதவிகளும் ஒத்தாசைகளும் தாராளமாக கிடைத்தது.
அதுமாத்திரமன்றி விடுதலைப்புலிகளை கூண்டோடு அழிப்பது, அதன் தலைமையை குடும்பத்தோடு அழிப்பது என்ற இந்திய ரோ உளவுத்துறையின் ஏற்பாட்டின் படி இந்தியாவில் தங்கியிருந்த பிரபாகரனின் பெற்றோரை 2001ம் ஆண்டு மீண்டும் இலங்கை திரும்ப வைப்பதில் முன்னின்று செயற்பட்டவர்.

2010ம் ஆண்டு பிரபாகரனின் தாயார் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரம், அவரது குடும்பத்தினர் ஏதாவது உதவிகள் கேட்டு விடுவார்களோ என்ற நினைப்பில் இரவோடிரவாக கொழும்பு வந்து இந்தியாவுக்குத் தப்பியோடியவர். அவர்களுக்கு எந்தவொரு உதவியும் செய்து விடக் கூடாது என்பதில் அப்படியொரு கரிசனை அவருக்கு...

அதன் பின்னர் சொந்த ஊர் மக்களே அவரை துரோகி என்று ராணுவத்தினரிடம் காட்டிக் கொடுத்தனர். கடைசியில் சொந்த மக்களையே ராணுவத்தினரிடம் காட்டிக் கொடுப்பதற்கு சச்சிதானந்தம் தன்னை தயார்படுத்திக் கொண்டார். இந்தியாவில் ரோவின் கால்களை நக்கித் திரிந்த அவருக்கு, அதுவரை காலமும் தூற்றித் திரிந்த பௌத்தம் ஆபத்பாந்தவனாக தெரிந்தது. பொதுபலசேனாவின் கால்களில் வீழ்ந்து கதறினார். நயவஞ்சக நடிப்பில் பொதுபல சேனாவும் ஏமாந்து சச்சிதானந்தத்தை தன் கூட்டாளியாக ஏற்றுக் கொள்ள முன்வந்தது.
ராணுவத்தினருக்கும் பொதுபல சேனாவுக்கும் அடிவருடி வேலை செய்வதற்கான களத்தை யாழ்.குடாவில் ஏற்படுத்திக் கொள்வதற்காக தமது குழந்தைகளுக்கு செந்தமிழில் பேர் வைக்கும் பெற்றோருக்கு நிதியுதவி அளித்து ஊக்குவிக்கப் போவதாக 2016 களில் திடீர் அறிக்கையொன்றை விட்டார். ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்தபடி எந்தவொரு குடும்பத்துக்கும் அவர் நிதியுதவி அளிக்கவில்லை. பொய் வாக்குறுதி அளித்து தன்னை நம்பியவர்களை ஏமாற்றி ஆள்காட்டி வேலை செய்வதற்கான களத்தை அமைத்துக் கொண்டார்.

பௌத்தர்களுக்கு எதிரான செயற்பாடுகள்

ஈழத்தமிழர் மரபுவழித் தாயகத்தில் பாதியை சிங்களவர் அபகரித்த வரலாறு எனும் 16 பக்க நூல் இன்னும் என்னிடம் உள்ளது. அதில் சச்சிதானந்தம் சிங்கள மக்களுக்கு எதிராக முன்வைத்துள்ள துவேசக் கருத்துக்களை நான் சிங்களத்தில் மொழிபெயர்த்து வௌியிட்டால் பொதுபல சேனா, நாகவிகாரை மற்றும் ஒட்டுமொத்த சிங்கள மக்களே அவரை தேடிப் போய் உதைத்துவிட்டு வருவார்கள். தர்ம அடி வாங்கியே செத்துப் போவார்.

அதே போன்று கதிர்காமக் கோயில் மற்றும் முன்னேஸ்வரம் கோயில் போன்றவற்றின் நிர்வாகம் சிங்கள மக்கள் கையில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக 1976ம் ஆண்டு ஶ்ரீமாவோ ஆட்சியில் அமைச்சர் குமாரசூரியர் கொண்டு வந்த இந்து அறநிலையத்துறை சட்டமூலத்தை கடுமையாக எதிர்த்தவர். பௌத்த மக்களுக்கு எதிராக கடும் இனவாத வார்த்தைகளைக் கக்கியபடி கொழும்பில் ஊர்வலம் சென்று சட்டமூலத்தின் பிரதிநிதிகளை தீயிட்டு எரித்தவர்.

இப்படியாக இவரது துரோகங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இவரது இரட்டை வேடங்களையும் காட்டிக் கொடுக்கும் துரோகங்களையும் அறிந்துள்ள காரணத்தினால் தான் சிங்கப்பூர் அரசாங்கம் தனது நாட்டுக்குள் இவரை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது. கனடா வீசா வழங்க மறுப்புத் தெரிவித்தது. இப்படியாக பல்வேறு இடங்களில் மூக்குடைபட்டும் புத்தி தௌியாத பித்தம் கொண்டு சச்சிதானந்தம் உளறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போவது பாவமாக உள்ளது.


எனவே சிங்கள இனவாதிகளை கூட்டுச் சேர்த்துக் கொண்டு முஸ்லிம்களைக் கருவறுக்கத் துடிக்கும் சச்சிதானந்தம், தன் கடந்த கால வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்துக் கொண்டால் நல்லது. ஏனெனில் அவரது வரலாறு நெடுகிலும் சிங்கள மக்களை நாயினும் கேவலமாக வர்ணித்து வசைபாடிய சொல்லாடல்களின் வரலாற்றுத் தொகுப்புகள் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் அனைத்தையும் சிங்களத்தில் மொழிபெயர்த்து வௌியிட்டு அவரது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி மூக்குடைபட வைப்பதற்கும் தயாராக இருக்கின்றேன்.

Ashroffali Fareed

5 கருத்துரைகள்:

சொல்லிக்கொண்டு இருக்காமல் உடனே அந்த Sinhala Translation ஐ செய்து Gossip Lanka இணையத்தில் வெளியிடுமப்பா.

Don’t delay to publish in Sinhala

தமிழின துரோகி யாரென தமிழன் தான் முடிவெடுக்க வேண்டும் முஸ்லீம் அல்ல.

Unai pontra dogkku illa antha urimai muslimkalukku thaan undu....

@Anusath!! tamil is not a religion, it is a language. those who speak tamil as their mother tongue are tamils. it doesnt matter he/she belongs to which religion. why you guys are being so resist, why are you showing resism on people.

you follow your religion and i follow my religion. Whats is the problem. nobody have the rights restrict anyone

because of such people like you and this marawanpulawu, rest of the hindu people will feel shame on you guys...

Post a comment