Header Ads



மனித மனங்களில் வன்மங்களே, மிதமிஞ்சி காணப்படுகின்றன - ஞானசார

விடுதலைப் புலிகளின் இயக்கத்தினை முற்றாக அழித்து நாட்டை ஒருமைப்படுத்திய அரசாங்கத்திற்கு, வெளிப்படையாக செயற்படும் பாதாள குழுவினரை அழிக்க முடியாதுள்ளமை வேடிக்கையாகவுள்ளது என பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இரண்டு இனங்களுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்றதன் காரணத்தினாலேயே விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரசு செயற்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பாதாள உலகக் குழுவினரின் தாக்குதல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விதமாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகத்தின் கீழ் தற்போது மனித படுகொலைகள் வெளிப்படையாகவே இடம்பெற்று வருகின்றன.

குறித்த விடயத்தில் பாதாள உலகக் குழுவினரை மாத்திரம் குறை கூற முடியாது மனித மனங்களில் வன்மங்களே தற்போது மிதமிஞ்சியதாக காணப்படுகின்றன.

பாதாள உலகக் குழுவினரின் தாக்குதல்கள் தற்போது அதிகரித்தே காணப்படுகின்றன. இதற்கு தேசிய அரசாங்கத்தினை மாத்திரம் குறைகூற முடியாது. கடந்த கால அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும்.

பாதாள குழுவின் எழுச்சியை அரசியல்வாதிகளே உருவாக்கினர் தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்கு இன்றுவரை இவர்களை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டே உள்ளனர்.

குறித்த பாதாள குழுவின் பின்னணியில் எந்த அரசியல்வாதிகள் உள்ளார்கள் என்ற விடயத்தினை நன்கு அறிந்தும் சட்டம் உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள பின்வாங்குகின்றது.

நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்ற விடுதலை புலிகள் இயக்க போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் பல்வேறு இராஜதந்திர விடயங்களையும் பிரயோகித்தது.

இதற்கு பிரதான காரணம் இடம்பெற்ற யுத்தம் இரண்டு இனங்களுக்கு இடைப்பட்டதாக காணப்பட்டதாலும் நாட்டின் பெரும்பாண்மை இனத்தின் பெருமைகளுக்கு எதிராக அமையும் என்ற காரணத்தினாலும் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டது.

ஆனால் பாதாள குழுவினரின் விவகாரத்தில் கடந்த கால அரசாங்கம் உட்பட நல்லாட்சி அரசாங்கமும் பொறுப்பற்ற முறைகளிலேயே செயற்படுகின்றது.

பாதாள குழுவினரின் செயற்பாடுகளின் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தினமும் அச்சத்துடனே வாழ்கின்றனர். அரசாங்கமும் பாதாள குழுவினை கட்டுப்படுத்த பல சட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இருப்பினும் இவைகள் நடைமுறையில் எவ்வித பயனும் அளிக்காது சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது. அரசாங்கம் பாதாள குழுவினரை முற்றாக அழிக்க வேண்டுமாயின் பிரத்தியேக துறையினை சுயாதீனமாக உருவாக்கி அதனை செயற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. someone hired him for a certain period???

    ReplyDelete
  2. விதைத்தது யாரோ ..........தானே

    ReplyDelete

Powered by Blogger.