Header Ads



முஸ்லிம்களின் கடைகள் எரிப்பு - 8 பேர் விடுதலை

கண்டி, இனக்கலவரம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மொரகஹமுல்ல பிரதேசத்திலுள்ள முஸ்லிம் நபருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தை எரித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான 24 பேரில், 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 8 பேர் மீதும் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாததை அடுத்து, குறித்த நபர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சந்தேகநபர்கள் 24 பேரும் இன்று (19) தெல்தெனிய மாவட்ட நீதவான் எம்.எச். பாரிக்தீன் முன்னலையில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதான ஏனைய 16 பேர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதால், அவர்களை ஏப்ரல் 02 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தெல்தெனிய கடை எரிப்பு; 24 பேரில் 8 பேர் விடுதலை-Teldeniya Shop Torched Incident-8 Released Out of 24 Suspects

குறித்த விடயம் தொடர்பிலான மேலதிக விடயங்கள் அடங்கிய 'பி' அறிக்கையை அன்றைய தினம் (02) நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

வழக்கு தினமான இன்று (19) தெல்தெனிய நவநகர மற்றும் தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு, நீதிமன்றிற்கு சென்றவர்கள் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.