Header Ads



தமிழ் அரசியல்வாதிகள், மக்களிடையே கசப்புணர்வை வளர்க்க முற்படுவது கண்டிக்கத்தக்கது

கல்முனையின் வரலாறு தெரியாமல் கல்முனை தமிழர்களை முஸ்லிம்கள் அடிமைகளாக்க முயல்கிறார்கள் என தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறுவதன் மூலம் மீண்டும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே கசப்புணர்வை வளர்க்க முற்படுவது கண்டிக்கத்தக்கதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,

சமீப காலத்தில் ஏற்பட்ட சாய்ந்தமருது கல்முனை பிரிப்பு விடயத்தில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி போன்றோர் தாம் இனவாத புலிகளாக இருந்த போது தமிழ் முஸ்லிம் பிரிவினவாதத்தை முன்னெடுத்தது போல் ஜனநாயகத்துக்கு வந்த பின்னரும் அதே தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை உருவாக்கும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பது கவலையான விடயமாகும். வரலாற்று ரீதியாக கல்முனை எப்படி இருந்தது, அதன் எல்லைகள் என்னவென்றெல்லாம் தெரியாமல் இவர்கள் பேசுகிறார்கள்.

கல்முனை என்பது 1886 ஏப்ரல் 03ம் திகதிய இல: 1210 நிலஅளவை படத்தின்படி கல்முனையும் சாய்ந்தமருது கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தின், கரைவாகு எனும் ஊரின் இரு கிராமங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நில அளவைபடம் நீர்வழிப்பாதை உள்ள காலத்தில் தயாரிக்கப்பட்டது. இதில் அப்போது கல்முனைக்குடி என்ற பெயரே இருக்கவில்லை. நமது நாட்டின் அரச நிர்வாகம், பொது நிர்வாகம், உள்ளுராட்சி என இரண்டு வகையாக நிர்வகிக்கப்படுகின்றது.

கரைவாகு எனும் ஊரின் உள்ளுராட்சி 1892ல் சுகாதார சபையாக நிர்வகிக்கப்பட்ட போது 1920ல் உள்ளுர் சபையாக நிர்வகிக்கப்பட்டதுடன் 1946ல் கல்முனை பட்டினசபையானது, பொது நிர்வாக முறையிலிருந்து வன்னிமை முறை 1946ல் மாற்றப்பட்டு இறைவரி உத்தியோகத்தர் என்ற டி ஆர் ஓ முறை உருவாக்கப்பட்டது. 1973ல் இதன் காரியாலயம் கல்முனை பட்டினசபை வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

1961ல் உருவான அம்பாரை மாவட்டம் மட்டக்களப்பின் தென்பகுதியில் உள்ள கரைவாகுபற்று, அக்கரைப்பற்று, பாணமைபற்று, வேகம்பற்று ஆகிய ஜந்து பற்றுகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. 1946 முதல் 1978 வரை பொது நிர்வாகம் செய்த டி ஆர் ஓ முறை மாற்றப்பட்டு 1978ல் உதவி அரசாங்க அதிபர் எனும் அரசாங்க அதிபர்  முறை உருவாக்கப்பட்டது.

1946ல் உள்ளுராட்சியில் கல்முனை பட்டின சபையின் நிர்வாகம் தெற்கே ஸாஹிறா வீதி, வடக்கே தாளவட்டான் வீதிவரை ஏழு வட்டாரங்கள் கல்முனை என பிரிக்கப்பட்டது. இதில் குருந்தயடியை கல்முனை 01 என்பது போல கல்முனைக்குடியும் கல்முனை 03 முதல் கல்முனை 07 வரை மொத்தம் 7 வட்டாரங்களில் பிரதிநிதிகள் தெரிவாகி 5 முஸ்லிம்களும், 2 தமிழர்களும் நிர்வாகம் செய்தார்கள். கல்முனைக்குடி என்பது மக்களின் பேச்சு வழி சொல்லே தவிர அரச நிர்வாகத்தில் அதுவும் கல்முனை என்றே அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைச் சட்டடத்திற்கு அமைவாக 1987-12-31ல் மாவட்ட சபைகள் கலைக்கப்பட்டு 1988-01-01ல் கல்முனை பிரதேசசபை உருவாக்கப்பட்டது.

1886ல் கரைவாகு என்ற நிர்வாகத்தில் இருந்து கரைவாகு தெற்கு (சாய்ந்தமருது) கிராமசபை,, கரைவாகு மத்தி (கல்முனை) பட்டினசபை, கரைவாகு மத்தி (நற்பிட்டிமுனை, சேனைக்குடி) கிராமசபை, கரைவாகு வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை) கிராமசபை என்பன ஒன்றாக்கப்பட்டு கல்முனை பிரதேசசபை உருவானது என்ற பல விபரங்கள் தெரியாத அரசியல்வாதிகள் கல்முனையை மஸ்லிம்கள் அக்கிரமிப்பதாக பொய்களை சொல்கிறார்;கள்.

முஸ்லிம்கள் கல்முனையில் வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்று கூறுகின்றார்கள். நாட்டில் உள்ள அனேகமானோர் வர்த்தகம், தொழில் போன்ற காரணங்களுக்காக பிரதேசங்கள் தாண்டுவது இயற்கையான நிகழ்வாகும். மலை நாட்டு தமிழர்கள் கூட தொழில் நோக்கத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களே. அப்படியிருந்தும் சிங்கள பெரும்பான்மை அவர்களை இந்நாட்டு பிரஜைகளாக அனுமதித்திருக்கின்ற போது சில இனவாத தமிழ் பிரதிநிதிகள் கல்முனை முஸ்லிம்களின் பாரம்பரியத்தை மறுப்பதன் மூலம் சிங்கள பேரினவாதத்தை விட தமிழ் பேரினவாதம் ஆபத்தானது என்பதை காட்டுகிறது. கொழும்பில் கூட யாழ்ப்பாணத்திலிருந்து வர்த்தகத்துக்காக வந்த பலர் தற்போது கொழும்பு குடியிருப்பாளர்களாக உள்ளனர். கொழும்பு செட்டியார் தெருவில் வர்த்தகம் செய்வோரில் 90 வீதமானோர் கொழும்பை சேரா விடினும் அவர்களில் பலர் கொழும்பின் வாக்காளர்களாக உள்ளனர். அந்த வகையில் கல்முனை நகர முஸ்லிம்கள் தமது வர்த்தகத்தை கல்முனை நகரத்தில் வைத்திருந்தாலும் சமய, கலாசார வசதிகளுக்காக தமது குடியிருப்பை முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதியில் வைத்துக்கொண்டார்கள். ஆனாலும் கல்மனை நகர்தான் அவர்களின் பாரம்பரிய வாழ்வாதார இடமாகும்.  ஒருவர் ஒரு வாடகை இடத்தில் பத்து வருடங்கள் தொடராக வசிப்பின் அவர் அந்த இடத்தின் சொந்தக்காரராக இருக்க முடியும் என நாட்டின் சட்டம் இருக்கின்ற போது நூற்றாண்டு காலமாக கல்முனை நகரில் சொந்த இடங்களில் வர்த்தகம் செய்யும் முஸ்லிம்களுக்கு கல்முனை உரித்தானதல்ல என கூறுவது முட்டாள்த்தனமும் அரச சட்டம் பற்றிய அறியாமையுமாகும்.

- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர்
உலமா கட்சி

6 comments:

  1. உன் வாயிலிருந்து வருவது என்ன சமாதானமும் சமத்துவமா. நீ தான் முதல் காரணம் தமிழ் முஸ்லீம் பிரச்சினைக்க. நீங்கள் உங்கள் இனவாத வாயை மூடிக்கொண்டு இருங்கள நாடு தான உருப்படும்

    ReplyDelete
  2. டச்சு காலத்தில் இருந்தது போல, இப்போதும் இருக்க வேண்டிய தேவையில்லை.

    இந்த உப்புமா கட்சி தலைவர் தான் எப்பொதும் இனவாதம் பேசுகிறார்.

    உங்கள் தனிப்பட்ட சுயநலங்களுக்காகவும், பதவி மோகங்களுக்காகவும்கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஒன்றும் பிரிக்க முடியாது.

    ReplyDelete
  3. You must be joking...Your ancestors came from Pakistan ���� and Tamils came from India and Singalese came from India ���� why are you talking about Indian Tamils and Jaffna Tamils all of them are came from outside of Srilanka .The question is did you have any right to talk about other community and others leaders? If you say Yes! Then Aananthi has the right to defend All the Tamils in Srilanka.

    ReplyDelete
  4. புலி வாந்தி எடுக்கும் அனந்தியும், இந்தியாவில் இருந்துதான் வந்திருக்கிறாப்போல.

    அவவுக்கு என்ன உரிமை இருக்கு மற்றவர்களைப்பற்றி பேச.

    ReplyDelete
  5. இனவாதம் பேச வேண்டுமானால், அனந்தியைப்போல உப்புமா சாப்பிட்டால் போச்சு.

    ReplyDelete

Powered by Blogger.