Header Ads



படகு விபத்தில் 63 ரோஹின்யர்கள் வபாத்


மியான்மர் நாட்டில் வன்முறைக்குள்ளான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் சென்ற படகொன்று வங்கதேச கடற்பகுதியில் கடலில் மூழ்கியதில் 63 பேர் இறந்ததாக நம்பப்படுகிறது.

சர்வதேச குடியேறிகளுக்கான அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜோயல் மில்லமான், இருபத்தி மூன்று பேர் இறந்ததாகவும் மற்றும் நாற்பது பேர் காணாமல் போயுள்ளனர் என்று கருதப்படுவதாகவும் கூறினார்.

வங்கதேசத்திற்குள் நுழைய முயன்றபோது ஏற்கெனவே டஜன் கணக்கான ரோஹிஞ்சாக்கள் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலும் சிறுபான்மையினரான ரோஹிஞ்சாக்கள், மியான்மரில் வெறுக்கப்பட்டு, குடியுரிமை மறுக்கப்பட்டதால் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வங்கதேசத்திற்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

மூழ்கி, சேதமடைந்த ரோஹிஞ்சா முஸ்லிம்களை ஏற்றிவந்த படகு


3 comments:

  1. யா அல்லாஹ் அநீதிக்குள்ளான இந்த அப்பாவி மக்களுக்கு உன் சுவனத்தில் இடமளிப்பாயாக!!!
    இவர்களை அநீதிக்குள்ளாக்கியவர்களுக்கு இதைவிடவும் பெரும் துன்பத்தை அழித்து, மறுமையிலும் உனது தண்டனையை வழங்குவாயாக!!!

    ReplyDelete
  2. Ameen.

    Shame on every able Muslim leaders and world organisation such as UN ..
    Are not this people from this world? They do not have the right to live on this earth? Did they come from other planets?... If the UN and able human can not find a life for them .. What for you are ? Only to boast? Shame on you all to be called leading the Human on earth. If any of our kid mother father or relatives are among this Rohingya... will you keep words only and not acting? Ya Allah give them easy entrance to Jannah for these effected people..and punish those who harm them and warn this able leaders who are sleeping.

    ReplyDelete
  3. YA Allah Show your mercy on Arakaan people & send down your punishment to murderers and the government.

    ReplyDelete

Powered by Blogger.