Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் அறிக்கை கையளிப்பு


இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து 9 நாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு தெவட்டஹவா பள்ளிவாசலில் இன்று மாலை அசாத் சாலியினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா, கனடா ஆகிய 9 நாட்டு பிரதிநிதிகளிடமே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலந்துரையாடல்கள் மற்றும் வீடியோ காணொளிகள் மூலம் முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு எடுத்துச்சொல்லப்பட்டதுடன் இது வரைகாலமும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான முறைப்பாட்டு அறிக்கையும் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் தாம் இது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடலில் முஸ்லிம் பிரதிநிதிகள், முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. Why so called Muslim Leaders (Rishad, Rauf Hakeem, Mujibur Rahaman etc etc ) not gone because they are very obedient servants to Yahapalanya.

    ReplyDelete
  2. வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்களை வைத்து நீங்கள் காமெடி பண்ணுவதாக நினைக்காமல் இருந்தால் சரிதான்.

    பல முஸ்லிம் மினிஸ்டர்கள், முஸ்லிம் MPகள் அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.
    ஆதாவது, முஸ்லிம்கள் பங்குதாராக இருக்கும் அரசுக்கு எதிராக, அதே முஸ்லிம்கள் புகார் கொடுப்பார்களாம்.

    இது இலங்கையில் மட்டுமே நடப்பதால் எமக்கு பழக்கிவிட்டது. ஆனால் வெளிநாட்டினருக்கு காமெடியாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.