நவமணி பத்திரிகைக்கு, பெரும் நெருக்கடி
இலங்கை முஸ்லிம்களின் ஊடகத் தேவையை தன்னால் முடிந்தளவு நிறைவேற்றி வரும் நவமணிப் பத்திரிகை, பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அறியவருகிறது.
மிகப்பெரும் சவால்களுடன் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் மற்றும் ஆசிரியர் பீடம் நமமணிப் பத்திரிகையை வெளிக்கொணர தியாகங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.
இது புனித ரமழான் காலம்.
முஸ்லிம் செல்வந்தர்கள் நவமணி பத்திரிகைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை கவனத்திற்கொள்ள வேண்டும்.
நவமணி பத்திரிகை வீழ்வது என்பது, எமது முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் இழப்பாக கருதப்படும்.
இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களும் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும்.
நவமணி பத்திரிகை தொடர்ந்து வெளிவரவும், இந்த சமூகத்திற்கு தொடர்ந்து ஊடகச் சேவையாற்றவும் தம்மால் முடிந்த ஒத்தழைப்புகளை நல்குவது ஒவ்வொரு முஸ்லிம் மீது கடமையாகும்.
இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு
பிரதம ஆசிரியர் - 0772612288
நமது சமூகத்தை அரசியலில் ஏலம்போட்டு பேரம்பேசி விற்று பல கோடிகளை சுருட்டிக் கொண்ட அரசியல் வியாபாரிகள் இதற்கு உதவலாமல்லவா?
ReplyDeleteMr Subsidence awsome. May Allah bless you sir
ReplyDeleteபல முறை உம்ராக்களை நிறைவேற்றச்செல்லும் தனவந்தர்கள் சமூகத்தின் குரலான இப்பத்திரிகைக்கு அந்ததப் பணத்தை செலவிடலாம் அல்லவா!
ReplyDeleteYou're really coract.
ReplyDeleteஎனது உண்மையான அனுபவம். நவமணியை பெற படாதபாடு படவேண்டும். எதோ முஸ்லிம்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய பத்திரிக்கை இது...எனவே தேடிப்பிடித்து முஸ்லிம்கள் வாங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நவமணி விற்பனைபிரிவு செயல்படுகிறதோ தெரியவில்லை. முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களை தூண்டிவிடும் மற்றொரு பத்திரிகையை நாடுமுழுவதும் பெறும் வசதியிருக்கிறது. உணர்ந்தும் வேறு வழியில்லாமல் வாங்குகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் நவமணி விற்பனைபிரிவு உடனடியாய் உஷாராக வேண்டும். மறுபுறம் தனவந்தர்கள் உதவினாலும் விற்பனைபிரிவு உஷாராகாவிட்டால்அ டுத்தவருடமும் இதே நிலைமைதான்...
ReplyDelete