Header Ads



இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்தார், பின்னர் 3 வதும் சேர்ந்தது

-BBC-

பிரிட்டிஷ் பெண்ணொருவர்இரட்டை குழந்தைகளை கருத்தரித்து, அவற்றை கருவில் சுமந்தபோது, இன்னொரு குழந்தையையும் கருத்தரித்ததாக மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இது தான் சூப்பர் கருத்தரிப்பு என்று அழைக்கப்படுகிறது. ஒரு முறை கருத்தரித்து குழந்தையாக வளர்ந்து வருகின்ற கருவை கொண்டிருக்கும் பெண், பின்னர் இரண்டு வாரத்தில் அல்லது ஒரு மாதத்திற்குள் மீண்டும் கருத்தரிப்பது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

மனிதரில் இவ்வாறு நிகழ்வது மிகவும் அரிதான ஒன்று. கடந்த நூறு ஆண்டுகளில் இது போன்ற சூப்பர் கருத்தரிப்பு நடந்து பிரசவிப்பது ஆறாவது முறையே.

கருவள நிபுணர் பேராசிரியர் சைமன் பிஷெல் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், "இவ்வாறு நடைபெறக் கூடாது. ஆனால் நடந்து விடுகிறது" என்கிறார்.

பெண்ணொருவர் ஒருமுறை கருத்தரித்து விட்டால் அவ்வளவு தான் என்று எண்ணுகிறோம். ஆனால், 1978ல் ஆம் ஆண்டு முதல்முறையாக சோதனைக்குழாய் மூலம் குழந்தை பிரசவிக்க உதவிய இந்த மருத்துவர் அவ்வாறு கருதவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னால், ரோமில் ஒருமுறை இத்தகைய சூப்பர் கருத்தரிப்பு நடைபெற்றபோது, அது 3 முதல் 4 மாத இடைவெளியில் நிகழ்ந்ததாக கணித்திருந்தனர்"
சீமோன் பிஷெல், கருவள நிபுணர்

"பரிணாம வளர்ச்சி குறிப்பாக பெண்கள் ஒருமுறை கருத்தரித்து விட்டால், அவர்களிடம் இன்னொரு கரு முட்டை வெளிப்படாது போகும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

"எப்போதாவது அவ்வாறு நடைபெற்றால், அந்த கரு முட்டை சிசுவாக உருவாக முடியாது. ஆணின் விந்து அதனுள் செல்ல முடியாது என்பதே இதற்கு காரணம்" என்று அவர் கூறுகிறார்.

அவ்வாறு நடந்து விட்டாலும், கரு வளரத் தொடங்கி மாற்றங்கள் உருவாக தொடங்கிவிட்டதால், கருப்பையின் சுவர் இன்னொரு கரு முட்டையை ஏற்றுகொள்ள முடியாது".
சூப்பர் கருத்தரிப்பு நடப்பது அபூர்வமானது. ஆனால், எப்போதும் மகிழ்ச்சியான முடிவு ஏற்படுவதில்லை.
"வளர்ந்து வருகின்ற ஒரு கருவின் வளர்ச்சி நின்றுபோய், கருப்பையிலேயே வளர்ந்து வரும் இன்னொரு கரு இறந்துள்ளதும், மிக முன்னதாகவே பிறந்துள்ளதும் நிகழ்ந்துள்ளது" என்கிறார் பேராசிரியர் சைமன் பிஷெல்.

No comments

Powered by Blogger.