மஹிந்தவின் பிறந்ததினத்தில், பிறக்கவிருக்கும் 'அபே ஶ்ரீ லங்கா நிதகஸ் பெரமுன'
மலர் மொட்டினை சின்னமாகக் கொண்ட அபே ஶ்ரீ லங்கா நிதகஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி) என குறித்த கட்சி தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இதன் புதிய தலைவராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.
இதற்கமைய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் புதிய கட்சியான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினை நவம்பர் 18ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பிறந்த தினமான அன்று அனுராதபுரத்தில் வைத்து இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என கூறப்படுகின்றது.
மஹிந்தா! சாரயதிட்கு பஞ்சி,விஸ்கி,பியர் கல்லு என்று அதன் பெயரை மாற்றிக்கொண்டு இது சாராயமில்லை என்று ஒருவன் குடித்தாலும் அது சாரயம்தான் அது போன்று நீ உன்கூட்டமும் என்ன பெயைர மாற்றினாலும் மக்கள் பார்வையில் நீங்கள் கள்ளர்களே இதே இந்த கூட்டத்துடன்தான் இரண்டு தடவையும் தேர்தலி்ல் தோற்றுபோனாய் மீண்டும் அந்த கள்ளர்களுடன் இருந்து கொண்டு பெயரை மாற்றுவதால் என்ன பிரையோஜனம்???
ReplyDelete