Header Ads



மோதலுடன் தொடர்புபட்ட MP களை பாராளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும் - சட்டத்தரணிகள் சங்கம்


அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புபட்ட மக்கள் பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி, ஜெரப் அலகரத்னத்தின் கையொப்பத்துடன் இன்று பிற்பகல் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இவ்வாறு மோதிக்கொள்வது தேசத்திற்கே அபகரீத்தியை ஏற்படுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக உடனடியாக ஒழுக்காற்றுக் கொள்கையொன்றை அறிமுகம் செய்து அதனைக் கண்காணிப்பதற்காக சுயாதீன நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவராவது ஒரு உறுப்பினர் அந்தக் கொள்கைகளை மீறுவாராக இருந்தால் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து அவரைப் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தகுதியானவர்களை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்வது மக்களின் பொறுப்பு எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

3 comments:

  1. பொதுமக்களின் கருத்துக்களை மதிப்பவன் என்றவகையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்த கோரிக்கையைப் பூரணமாக வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  2. The parliament must make law for parliament members who had make trouble or fight in the parliament.
    1.He will lost his post.
    2. He never contest any election in this country.
    3.The law must action against him

    ReplyDelete
  3. ivanukalum anidiki kasu koduthal poradum sata tharnikal nirabarthigalaie kasuku jailil thallum satatharnigal no right to talk boath are same

    ReplyDelete

Powered by Blogger.