Header Ads



திருமணங்களின் போது சீதனம், முற்றாக ரத்துச் செய்யப்பட வேண்டும் - JVP போர்க்கொடி

இலங்கையில் திருமணங்களின் போது வரதட்சணை முறைமை முற்று முழுதாக ரத்து செய்யப்பட வேண்டுமெனவும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை இல்லாமல் செய்யும் எக்டா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படக் கூடாது எனவும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். 

மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கி வரும் கல்வி, தொழில் இல்லா பிரச்சினையுடன் காதல் பிரச்சினையும் காணப்படுகின்றது. பணம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. பாரியளவில் பணத்தைச் செலவழித்தே திருமணம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.

21ம் நூற்றாண்டு பற்றி பேசினாலும் இன்னமும் நாட்டில் வரதட்சணை முறைமை காணப்படுகின்றது.

வரதட்சணை காரணமாக இளைஞர் யுவதிகள் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே வரதட்சணை முறைமையை ரத்து செய்யுமாறு நான் இன்றைய காதலர் தினத்தில் கோருகின்றேன்.

வரதட்சணை பெற்றுக் கொள்வது வெட்கம் கெட்ட செயலாகும் என பிமல் ரட்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Those who took, taking and planned to take SEETHANUM.. You did not follow the DEEN of Allah, Now Allah has made you to learn this from these people.

    ReplyDelete
  2. Puripavargalukku piriyavillaye Mr. Bimal...
    Pen pillaigalin panathil kulir kaayattane 90% aamblaigal virumburaanugal..eppathan thirunthuvaanugalo....intha maanam ketta jenmangal....!!

    ReplyDelete
  3. பெரிசா முஸ்லிம்களின் கட்சி என்று தொண்டை கிழிய கத்தி திரியும் எந்த கட்சிக்கும் வராத சமூக அக்கறை உங்களுக்கு வந்திருப்பதை எண்ணி உங்களை மிகவும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    ஆனால் மிகுந்த வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கிறது. எமது அரசியல் வாதிகள் இந்த வேலைகள் எல்லாம் இஸ்லாமிய இயக்கங்கள்தான் செய்யணும் என்று விலகிக் கொள்வதை நினைத்து.

    உண்மையில் எமது அரசியல்வாதிகள்தான் மிகவும் பொருத்தமானவர்கள். இவர்கள் இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து இதனை முன்னெடுத்தால் இன் ஷா அல்லாஹ் நிச்சயம் சீதனப் பிரச்னையை ஒழிக்கலாம்

    ReplyDelete
  4. இஸ்லாம் திருமணத்தில் தெளிவான சட்டங்களைத் தந்துள்ளது. அதில் "மஹர்" என்னும் திருமணக் கொடையை மணமகளுக்குக் கொடுப்பதைக் கட்டாயமாக்கி உள்ளது. இதற்கு நல்ல பல காரணங்கள் உள்ளன.

    மேலும், பெண்களுக்குச் சொத்துரிமையையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்களின் ஒரு பங்கை வைத்தே ஆண்களின் இரு பங்கு தீர்மானிக்கப்படுகின்றது. இதற்கும் காரணங்கள் உள.

    சன்மானமும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படுகின்றது. சன்மானத்தை ஏற்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. சன்மானத்தால் பெறப்படுபவைகளில் கேள்வியும் இருக்காது.

    மார்க்கத்தில் நிர்ப்பநதம் இல்லை என்பதும் மிகவும் பேணப்பட வேண்டியது. இது மார்க்கத்தைப் பின்பற்றுவதில் இலகு போக்கையும், மார்க்கத்தை அமுல் நடத்துவதில் குழப்பத்தையும் உருவாக்காத தன்மையையும் கருத்தில் கொண்டதே!

    தகாத வார்த்தைகள் பேசும் உரிமை, பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர, மார்க்கத்தை வெளிப்படுத்த முனைவோருக்கல்ல. தீமையைக் களைவதற்கு மிகச் சிறந்த நனமையையே அல்லாஹ் பரிந்துரைத்துள்ளான்.

    ஆதலால் மார்க்கத்திலுள்ள உண்மைகளை வெளிப்படுத்தும் உரிமை அறிந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதை நடைமுறைப்படுத்த முனைவோர் குறிப்பாக சீதனம் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலும், மேற்சொன்ன இறை கட்டளைகளைப் புறந் தள்ளாது முதன்மைப்படுத்தி, கருத்தை முன் வைக்க வேண்டும். குளிப்பாட்டப் போனவர், முடியாவிடில் வில்கிக் கொள்வதைவிடுத்து, மலத்தை வாரி இறைப்பவராக மாறிவிடக் கூடாது. அதன் மூலம் பல நிராகரிப்பைச் செய்தவராகியும் விடுவார்.

    யாரும் யாருக்கும் பாதுகாவலரோ, பொறுப்பாளரோ, திருத்துபவரோ அல்லர். அவரவர் செய்தவற்றுக்கு அவரவரே பொறுப்பும், அவரவருக்கே கூலியும். சீர்திருத்தம் என்பது குழப்பம விளைவிப்பதாக அமைய முடியாது. அது இறை வழியாகாது.

    ReplyDelete

Powered by Blogger.