Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா - இரகசிய தகவல் கசிந்தது

கொழும்பு நகரில் கடும்போக்குடைய 4  அடிப்படைவாத அமைப்புகள் இயங்கி வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றியவர் இந்த அமைப்புகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ரகசியமான ஆவணத்தின் அடிப்படையில் சர்வதேச தொடர்புகளை கொண்டுள்ள 13 இஸ்லாமிய அமைப்புகள் இலங்கையில் செயற்பட்டு வருகின்றன.

மிகவும் இரகசியமானது என்ற தலைப்பிட்டு இந்த இரகசிய தகவல்கள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் ஓசாமா என்ற அமைப்பு செயற்பட்டு வருவதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரியான எலக்ஸ் முர் இந்த தகவல்களை அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளார். tw

3 comments:

  1. இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் ஆசிர் வாதத்துடன் இயங்கும் குழுக்களை தவிர வேறு யாரும் இல்லை. கண்டதெல்லாம் இங்கே பதிவிட்டு மக்களை திசை திருப்ப வேண்டாம். எமக்கு இலங்கை அரசின் உதவி கிடைக்காவிட்டால் உலக நாடுகளின் உதவி தேவை. இங்கு நாம் பெரும்பான்மை மக்கள் இல்லை. சிறு பான்மை தான்.

    ReplyDelete
  2. அமெரிக்கவின் கதையை நம்பி கழத்தில் இறங்குபவன் அடிமுட்டாள்.
    அமெரிக்காவின் பேச்சில் எந்தவித உண்மையுமில்லை. உலகில் பொய்யர்கள் என்று சகலராலும் முத்திரை குத்தப்பட்ட நாடு அமெரிக்கா. அவன் நினைத்ததுபோல கதை கட்டுவான் பின்பு அவனே அதை மாற்றிச்சொல்லுவான்.

    ReplyDelete

Powered by Blogger.