கசினோ மன்னர் ஜேம்ஸ் பெக்கர் கொழும்பில் ஆற்றிய உரை
(Tn) போருக்கு பின்னர் சில வருடங்களிலேயே இலங்கை பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இப்போது மிகவும் வலுவான நிலையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் நான் இலங்கையில் முதலீடு செய்வது உறுதி. இதில் எந்தவித மாற்றமும் கிடையாது என அவுஸ்திரேலி யாவின் கிறவுன் நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் பெக்கர் தெரிவித்தார்.
30 வருட யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ளதுடன் பொருளாதாரமும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை வெளி நாட்டு ஊடகங்கள் உலகுக்கு தெரியப்படுத்த வேண்டு மென அவுஸ்திரேலியாவின் செனல் 9 தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் என்ற வகையில் பெக்கர் கேட்டுக் கொண்டார். வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர், செனல் 4 போன்ற சர்வதேச ஊடகங்களில் இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக காண்பிக்கப்படுவது குறித்து வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்று வரும் பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் லக்ஷ்மன் ஜயவீர, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக பிரமுகர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அவுஸ்திரேலியாவின் க்ரவுன் நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் பெக்கர் மேலும் குறிப்பிடுகையில்,
இறுதியாக நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர் மாநாடு விருப்பத்துக்குரிய அவுஸ்திரேலிய நகரங்களில் ஒன்றான பேர்த்தில் நடைபெற்றது. பேர்த் நகரமானது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பாரிய அபிவிருத்தியை கொண்டிருக்கும் ஒரு நகரமாகும். ஆனால், இந்த வெற்றியானது பேர்த் நகரத்தில் மிகவும் இலகுவாக எட்டப்பட்ட ஒன்றல்ல. கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக உள்ளூர் அதிகார சபைகளும் நகர மக்களும் மிகவும் கடினமாக உழைத்தே இந்த வெற்றியை அடைந்தனர்.
இதன்மூலம், பேர்த்தில் உலகளாவிய வர்த்தத்துக்கான பாரிய சந்தர்ப்பங்கள் உரு வாகியுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் நான் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்ட போது பேர்த்தில் காணப்பட்ட சாதகமான சூழலை கொழும்பிலும் காணமுடிகின்றது. நாளாந்தம் நம்பிக்கையுடன் வளர்ச்சி யடைந்து கொண்டிருக்கும் ஒரு நாடு இலங்கை. இலங்கைக்கு இது எனது ஐந்தாவது விஜயம். இம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைகின்றமை மற்றும் தொடர்ச்சியான உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றினைக் கண்டு நான் கவரப்பட்டுள்ளேன்.
கடல் நகரம் மற்றும் பாரிய வர்த்தக நகரமான கொழும்பு பழைய பட்டுப் பாதையின் கேந்திர நிலையமும் கூட என்று குறிப்பிடலாம். இவ்வாறான நிலையில் முதலீடு, சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகங்களுக்கான சர்வதேச கேந்திர நிலையமாக இலங்கை முழுவதும் மாற்றமடைவதற்கு சாத்தியங்கள் உள்ளன. சவால்களை முறியடித்தல், நேர்மை ஆகியவற்றுக்கு புகழ் பெற்றதாக இலங்கை காணப்படுகின்றது. மிகவும் பலமான நாடுகளின் பலத்தை பரீட்சித்து வெற்றிகண்டதைப் போலவே இலங்கையும் பல கடினமான சவால்களை முறியடித்துள்ளது.
ஆனால், இன்றைய கட்டத்தில் தனது நிலையினை இங்குள்ள வளங்களை வெளிநாடுகளுக்கு வெளிக்காட்ட வேண்டிய தருணத்தில் உள்ளது. பொருளாதார ரீதியாக இலங்கை குறுகிய காலத்தில் நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. போருக்கு பின்னர் சில வருடங்களிலேயே இலங்கை பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இப்போதும் மிகவும் வலுவான நிலையில் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதுடன் அதன் முழுமையான வெற்றியை காண்பதற்குரிய சிறப்பான பாதையில் இலங்கை சென்று கொண்டிருக்கின்றது.
பொருளாதார அபிவிருத்தியானது வாழ்க்கையின் மிக முக்கியமான படிக்கற்கள், பொருளாதாரம் வலுவான ரீதியில் வளர்ச்சியடைந்தால் அதன் மூலம் அப்பிரஜைகளுக்கு சிறந்த சேவைகள் பணிகள் உணவு உடை உறையுள் கல்வி போன்றவற்றினை வழங்க முடியும். ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த அனைத்தையும் சிறப்பாக வழங்கி கொண்டிருக்கின்றது. நான் சந்தித்த அரசாங்க அதிகாரிகளும் தமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக உறுதியளித்தனர். பொருளாதார வளர்ச்சியினை நாட்டின் சகல பாகங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு விசேடமான உட்கட்டமைப்பு நிர்மாணத் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பூகோள ரீதியான அமைவிடமானது சகல மார்க்கங்கள் மூலமான வர்த்தகத்தையும் இலாபகரமான ரீதியில் மேற்கொள்ள வழி வகுக்கின்றது. ந்தியா, பாங்கொக், ஜகார்த்த, கோலாலம்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலிருந்து தற்போது நேரடியான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், மனித முதலீடுகள் சிறப்பாகவுள்ள நாட்டிலேயே வெற்றிகரமான வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். இந்த வகையில், இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளன.
இலங்கை மனித வளம் மிகவும் பலம்வாய்ந்ததாக காணப்படும் நிலையில் உலகளவில் முதலாவதாக பிரிட்டனில் கணக்கியல் பட்டத்தை பெற்ற 25000 கணக்காளர்கள் இலங்கையில் உள்ளனர். மத்திய வர்க்க சுற்றுலாத்துறை¨டிய கொண்ட இந்தியா, சீனா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் தரத்தினை நோக்கி இலங்கை நகரும் என நம்புகின்றேன். இலங்கையை பாரிய அதிசொகுசான மற்றும் வர்த்தக சுற்றுலாத்துறையை உடைய நாடாக மாற்றுவதற்கு உரிய சந்தர்ப்பம் எனது நிறுவனமான க்ரவுன் மூலம் ஏற்பட்டுள்ளது.
பேரவாவியில் ஒருங்கிணைந்த சுற்றுலா மையம் ஒன்றினை அமைப்பதற்கு எனது நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2013ம் ஆண்டில் விஜயம் செய்வதற்குரிய முதலாவது நாடாக இலங்கையை லோன்லி பிளேனட் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. இந்தியா சீனாவில் குடியியல் தரமுயர்த்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது சாத்தியமானதும் கூட. ஆனால் சுற்றுலாத்துறை ஊடாக மட்டும் அடைந்துவிட முடியாது. உலகின் மிகவும் தனித்துவமான ஆச்சரியமிக்க கேந்திர நிலையமாக சர்வதேச அரங்கில் தன்னை வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் இலங்கை உள்ளது.
வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தில் சகல மக்களும் கலந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கான பாரியளவிலான முதலீட்டை மேற்கொண்டுள்ளது. சகல மாகாணங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்துவது நாட்டின் பாரிய உட்கட்ட மைப்பு பெறுபேறாகும். இது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வர்த்தக துறைக்கு இவ்வாறான முன் னேற்றங்களும் இலங்கையின் இயற்கை வளம் வெற்றிகரமான வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. ஒரு நிறுவனம் என்ற ரீதியில் இலங்கையின் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு செய்யக்கிடைத்தமையிட்டு பெருமையடைகின்றோம்.
க்ரவுன் நிறுவ னத்தினால் முன்மொழியப்பட்ட திட்டத் தினை சாத்தியமாக்குவதற்கு இலங்கை முதலீட்டு சபை மேற்கொண்டுள்ள நட வடிக்கைகளுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன். தொழில்நுட்ப ரீதியான அணுகுமுறையு டன் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வர்த்தகத்துறையில் வளர்ச்சி கண்டிருக்கும் ஒரு நவீன பொருளாதாரத்தைக் கொண்ட நாடே இலங்கையாகும். இந்த சகல காரணங்களுக்காகவும் ஆசிய கண்டத்தில் மிளிர வேண்டிய தருணம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. உங்கள் வர்த்தகத்துக்கு மிகவும் சிறப்பான இடமாக இலங்கை உள்ளது என்பதனை நீங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் என சர்வதேச வர்த் தக சமூகத்திடம் அழைப்பு விடுக்கிறேன்.
அவுஸ்திரேலியாவின் கிறவுன் நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் பெக்கர் செனல் 9 தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆடுகள் நனையுது என்று ஓநாய் கவலைப்பட்டதாம்.
ReplyDeleteபாரிய இழப்பு ஏற்பட்ட மாதிரியான காவலாக உள்ளது கூடிய விரைவில் ஜாப்னா முஸ்லிம் நியூஸ் வர எல்லாம் வல்ல அல்லாஹ் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் .
ReplyDeleteHello Jems bager do you know the per capital income in srilanka ?
ReplyDelete