Header Ads



கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி நிர்மாணிப்பில் 2580 கோடி ரூபா தரகு பணம்

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி நிர்மாணிப்பின் ஊடாக குறைந்து இரண்டாயிரத்து 580 கோடி ரூபாவை தரகு பணமாக பெற்றுள்ள அரசாங்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் அந்த பணத்தை வெளிநாட்டு வங்கியொன்றில் மறைத்து வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தை சேர்ந்த அந்த நபர் இறந்த பின்னரும் மயானத்தில் உள்ள கல்லறையில் இருக்கும் மிகப் பெரிய செல்வந்தர் தானாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இவ்வாறு பெருந் தொகை பணத்தை சம்பாதித்து வருகிறார். கடந்த 27 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பெருந் தெருக்கள் அமைச்சரும் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளனர். உலகில் அதிக பணத்தை செலவிட்டு நிர்மாணிக்கப்பட்ட பாதை என்ற சாதனையே அதுவாகும்.

இதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யுமாறு நாங்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்க உள்ளோம்.

அரசாங்கத்தின் மதிப்பீட்டின் பிரகாரம், கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் 25.8 கிலோ மீற்றர் தூரத்தை நிர்மாணிக்க 4500.7 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அந்த வீதியின் ஒரு கிலோ மீற்றர் தூரத்தை நிர்மாணிக்க 1.8 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்காக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கு 1.2 பில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் சிறுவர்கள் மற்றும் மகளிர் அபிவிருத்திக்காக முழு வருடத்திற்கும் செலவிடும் பணத்தை விட அதிகவான தொகை கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு கிலோ மீற்றர் தூரத்தை நிர்மாணிக்க செலவிடப்பட்டுள்ளது.

அதேபோல் 2014 ஆம் ஆண்டு கல்வி செலவுகளுக்காக அதாவது ஆசிரியர்களின் சம்பளம், அன்றாட செலவுகளுக்கு 38 பில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக 44.7 பில்லியன் ரூபாவும், 14 பல்கலைக்கழங்களை கொண்டுள்ள உயர்கல்வி அமைச்சுக்காக 29.5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிவேக வீதிகள் நிர்மாணிக்கப்படுவதை எதிர்க்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியே 1977 ஆம் ஆண்டு இந்த நாட்டின் நவீன பொருளாதார மயப்படுத்தலை ஆரம்பித்தது.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி நிர்மாணிப்பின் ஆரம்ப திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி 80களில் தொடங்கியது. இதன் பின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கமும் 2001 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இந்த பணிகளை முன்னெடுத்துச் சென்றது.

எனினும் நாங்கள் மதிப்பிட்டிருந்த தொகையை விட பெருந்தொகை பணத்தை செலவிட்டு இந்த அரசாங்கம் கொழும்பு - கட்டுநாயக்க வீதியை நிர்மாணித்திருப்பதை மறந்து விட முடியாது என்றார்.

No comments

Powered by Blogger.