Header Ads



அரசியல்வாதிகளின் ஆவணங்களைக் கைப்பற்றி, அச்சுறுத்தும் காய் நகர்த்தலில் அரசு ஈடுபடுகிறது

எதிர்க்கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வித பயனும் கிட்டப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 பெலேபொல பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் பேசுகையில்;  

ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் எதிர்க்கட்சியினருக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இருக்காது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் அனுபவங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக அவர்கள் தலையாட்டி பொம்மைகளாக செயற்படுகின்றனர். அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் ஊழல் மோசடிகள் குறித்த ஆவணங்களைக் கைப்பற்றி அவர்களை அச்சுறுத்தி அரசாங்கம் அரசியல் காய் நகர்த்தலில் ஈடுபடுகின்றது.

அரசாங்கம் என்ன பிழை செய்தாலும் ஆட்சியாளர்களுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பாது. சர்வதேச சமூகத்திற்கும் எதிர்கட்சிக்கும் எதிராக கருத்துக்களை வெளியிடவே ஆட்சியாளர்கள் அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் நாட்டு மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவிக்க நேரிட்டுள்ளது எனவும் அர்ஜுனா ரணதுங்க தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.