பள்ளிவாசலுக்குள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின்போது குண்டுவெடிப்பு (வீடியோ)
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின்போது பள்ளிவாசலுக்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானின் பொகார் மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் கொல்லப் பட்டார்.
மாகாண தலைநகர் புலி கலாமிலுள்ள பிரதான பள்ளிவாசலில் பெருநாளை முன்னிட்டு 15-10-2013 காலை பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருந்த ஜமாலை இலக்கு வைத்து குண்டு வெடிக்கச் செய்யப்பட்டிருப்பதாக ஆளுனரின் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்த தாக்குதலில் மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் காபுலில் இருந்து தெற்காக அமைந்திருக்கும் லொகார் மாகாணத்தின் கிராமப் பகுதிகளில் தலிபான் அமைப்பின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. எனினும் நேற்றைய தாக்குதலுக்கு எவரும் பொறுப்பு கூறவில்ல.
.jpg)
Post a Comment